Latest Updates
-
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
Sun Saturn Forms Navpancha Drishti Yog On 07 August 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் தொடக்கத்தில், அதுவும் ஆகஸ்ட் 07 ஆம் தேதி சனி மற்றும் சூரியனால் நவபஞ்ச திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது.

பொதுவாக சூரியனும், சனியும் எதிரிகளாக கருதப்படுகின்றனர். அதில் சூரியன் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், அதிகாரம் ஆகியவற்றின் காரணியாவார். அதேப் போல் சனி ஒழுக்கம், கட்டுப்பாடு, நீதி ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்களும் ஒன்றிணைந்து நவபஞ்ச திருஷ்டி யோகத்தை உருவாக்குவதனால், ஒருவரது கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும், புதிய தொழில் வாய்ப்புக்கள் தேடி வரும், செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும் மற்றும் நிதி நிலைமை மேம்படும்.
ஜோதிடத்தின் படி இரண்டு கிரகங்கள் 5 மற்றும் 9 ஆம் வீடுகளில் இருக்கும் போது இந்த சுப யோகம் உருவாகும். இப்படிப்பட்ட யோகம் ஆகஸ்ட் மாதத்தில் உருவாகவுள்ளதால், சில ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படவுள்ளது. இப்போது ஆகஸ்ட் மாதத்தில் சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால் சிம்ம ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட மேம்படும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
தொழிலதிபர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். இருந்தாலும் புதிய முதலீடுகளை செய்யும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.
திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை இக்காலத்தில் சந்திக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
துலாம்
நவபஞ்ச திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் முடிக்கப்படாத பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும்.
மார்கெட்டிங், ஊடகம், ஐடி, படைப்பாற்றல் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் புதிய திறன்களை கற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சியில் ஈடுபட்டு, சமச்சீரான உணவை உட்கொண்டு வருவது நல்லது.
கும்பம்
சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் குறிப்பிட்ட மாற்றங்களைக் காண்பார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். ஐடி, டிஜிட்டல், ஆன்லைன் வணிகங்களை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். பழைய குடும்ப பிரச்சகைள் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




