ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது..

Jupiter Rise In Cancer On 14 August 2026: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் இந்த குரு பகவான் சமீபத்தில் தான் கடக ராசிக்குள் நுழைந்தார். அதோடு ஜூலை 05 ஆம் தேதி கடக ராசியில் அஸ்தமனமானார். இந்த அஸ்தமன நிலையில் சுமார் 40 நாட்கள் வரை இருப்பார். அதன் பின் ஆகஸ்ட் 14 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் உதயமாகவுள்ளார்.

Jupiter Rise In Cancer On 14 August 2026 These Zodiac Signs Get More Money

குரு பகவான் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, பலவீனமாக இருப்பார். இதன் விளைவாக குரு பகவானால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தடைபட்டிருக்கும். இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் குரு பகவான் உதயமாவதால் அதன் வலிமை அதிகரித்து, அதனால் கிடைக்கவிருக்கும் நன்மைகள் அதிகரிக்கும்.

இப்படி குரு பகவான் உதயமாகும் போது அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்போது கடக ராசியில் உதயமாகும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் தங்களின் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை வேலையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால் ஆகஸ்ட் மாதம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் குறைந்த சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதாரவு கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் பொறுப்புக்களை நிறைவேற்றுவீர்கள். திடீரென்று பணம் வந்து குவியும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, July 24, 2026, 23:48 [IST]
Desktop Bottom Promotion