Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்!
Weakness Of Each Zodiac Sign In Tamil: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம், பலவீனம் இருக்கும். ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறார்களோ, அந்நபரின் குணங்களும், சிந்திக்கும் முறையும், அந்த ராசியை ஆளும் அதிபதிகளை பொறுத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிலர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்; சிலர் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள். அதேபோல், சில ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்களாகவும், சிலர் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கலாம்.

ஒருவரின் பலவீனங்களை அறிந்து கொள்வது என்பது குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்காக அல்ல. மாறாக, தங்களை மேலும் நன்றாகப் புரிந்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டிய பகுதிகளை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாகும். உங்களுக்கு உங்களின் பலவீனங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாயை அதிபதியாக கொண்டவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் எதையும் யோசிக்காமல் விரைவில் முடிவெடுத்துவிடுவார்கள். அதன் பின் எடுத்த முடிவு குறித்து வருத்தப்படுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களிடம் இருக்கும் பெரிய பலவீனம் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார்கள். இதனால் இவர்களிடம் சமரசம் செய்வது என்பது கடினமானது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும், இவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் இவர்களது மனம் விரைவில் மாறும். இதனால் ஒரு முடிவில் இவர்களால் உறுதியாக என்பது கடினம்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசிக்காரர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் சிறிய விஷயங்களையும் மனதளவில் எடுத்துக் கொண்டு, அதைப் பற்றி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களிடம் இருக்கும் பலவீனமே அதிக பிடிவாதம், கோபம் மற்றும் ஆதிக்கம் ஆகும். இது தவிர தன்னைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பது. ஒருவேளை செய்ய முடியாவிட்டால் மிகுந்த வருத்தப்படுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அதிகமாக யோசிப்பார்கள். இப்படி அதிகமாக யோசிப்பதாலேயே பல வாய்ப்புக்களை இழப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனம் என்றால் இவர்கள் ஒருவர் மீதுள்ள வைத்துள்ள நம்பிக்கை உடைந்துவிட்டால், மீண்டும் அதை ஒட்டவைக்க முடியாது.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் உண்மையை பேசுவார்கள். இது சில சமயங்களில் மற்றவர்களை பெரிதும் பாதிக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனம் என்றால் வேலையில் அதிகம் மூழ்கிவிடுவதால், உறவுகளை கவனிக்க தவறிவிடுவார்கள். இதனால் உறவுகளில் பிரச்சனையை சந்திப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த கும்ப ராசியைச் சேர்ந்தவர்களின் மிகப்பெரிய பலவீனம் எதையும் வெளிப்படையாக பேசாமல் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். இதனால் இவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசிக்காரர்களிடம் உள்ள பலவீனம் இவர்கள் யதார்த்தத்தை எதிர்கொள்ளாமல் கற்பனை உலகத்திலேயே அதிகம் வாழ்வார்கள் மற்றும் சிறு விஷயங்களுக்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



