Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் அபாயம் ஏன் அதிகரிக்கிறது? -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Chicken Varuval Recipe In Tamil: சன்டே வந்தாலே உங்கள் வீட்டில் சிக்கனை வாங்கி, அதை சிக்கன் 65 அல்லது வறுவல் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் எப்போதும் வறுவல் செய்தால் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் ஈஸியாக ஒரு வறுவல் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் வறுவல் செய்யுங்கள். இந்த வறுவலை செய்தால் வெறுமனே கூட சாப்பிடலாம். அதுவும் தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 3/4 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ஊற வைத்த சிக்கன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை கழுவி, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப
உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, 15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை
சேர்த்து, நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து, அத்துடன் நறுக்கிய
தக்காளியையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் மூடி வைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய
பூண்டு மற்றும் சிக்கன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில்
வைத்து, ட்ரையாகும் வரை கிளறி விட்டு வேக வைத்து கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications