Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் 65 செய்வது எப்படி?
பெரும்பாலானாரின் வீடுகளில் தவறாமல் சிக்கன் 65 செய்யப்படுவதுண்டு. ஆனால் என்ன தான் சிக்கன் 65 செய்தாலும், நிறைய பேர் அதை செய்ய கடைகளில் விற்கப்படும் பொடியை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் சில சமயங்களில் அந்த 65 மசாலா எண்ண
நம் அனைவருக்குமே சிக்கன் 65 என்றால் ரொம்ப பிடிக்கும். இதனால் வாரந்தோறும் பெரும்பாலானாரின் வீடுகளில் தவறாமல் சிக்கன் 65 செய்யப்படுவதுண்டு. ஆனால் என்ன தான் சிக்கன் 65 செய்தாலும், நிறைய பேர் அதை செய்ய கடைகளில் விற்கப்படும் பொடியை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் சில சமயங்களில் அந்த 65 மசாலா எண்ணெயில் பிரிய ஆரம்பித்துவிடும். இப்படி கடைகளில் விற்கப்படும் பொடியை வாங்கி செய்வதற்கு பதிலாக, வீட்டில் உள்ள பொடிகளைக் கொண்டே எளிய முறையில் ஒரு சுவையான சிக்கன் 65 செய்யயலாம்.

நீங்கள் இந்த வாரம் ஒரு சுவையான சிக்கன் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* முட்டை - 1
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அந்த சிக்கனை எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சிக்கன் துண்டுகளை அதில் போட்டு 7-10 நிமிடம் சிக்கனை வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பின் அந்த எண்ணெயில் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்து, அதை சிக்கனில் சேர்த்தால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
