Latest Updates
-
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க..
Heart Disease Risk In Tamil: சமீப காலமாக இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி இதய நோயின் அபாயம் ஒருவருக்கு அதிகரிப்பதற்கு காரணம் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். அதுவும் ஒருவருக்கு இதய நோய் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை.

நாள்பட்ட பழக்கவழக்கங்களின் காரணமாக இதயத்தில் வீக்கங்களும், இதய குழாயில் கொழுப்புக்களும் படிந்து, மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட், பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இது தவிர இரவு 8 மணிக்கு மேல் கொண்டுள்ள ஒருசில பழக்கவழக்கங்களும் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு 7 மணிக்கு மேல் உடல் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்காடியன் மீட்பு கட்டத்திற்கு மாறுகிறது. இதனால் இரத்த அழுத்தம், இதய துடிப்பு, வளர்ச்சிதை மாற்ற செயல்பாடுகள் குறைய தொடங்குகின்றன. இந்நிலையில் இந்த தாளத்தில் இடையூறு ஏற்பட்டால், அது இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கும்.
பகல் நேரத்தில் எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க உடல் முயற்சிக்கும் வேளையில் தொடர்ந்து குறிப்பிட்ட வேலையை செய்யும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, இதய நோயின் அபாயத்தை மெதுவாக அதிகரிக்கும். இப்போது இதய நோயைத் தவிர்க்க இரவு 8 மணிக்கு மேல் எந்த மாதிரியான பழக்கங்களை ஒருவர் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. வயிறுமுட்ட உண்பது
இரவு நேரத்தில் பொதுவாக மிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பலர் இரவு நேரத்தில் தான் பொறுமையாக சாப்பிட நேரம் கிடைக்கிறது என்று வயிறுமுட்ட உணவுகளை உட்கொள்கிறார்கள். அதுவும் இரவில் தாமதமாக உட்கொள்ளும் போது, அது ஓய்வு நேரத்திலும் செரிமான மண்டலத்தை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. இதன் விளைவாக இரத்த ஓட்டத்தை செரிமான மண்டலத்திற்கு திசைதிருப்புகிறது, இதயத்தை கடினமாக்குகிறது மற்றும் இரவுநேர இரத்த அழுத்த ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது.
2. மாலையில் காபியை குடிப்பது
நிறைய பேருக்கு உணவு உண்ட பின் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இரவு உணவிற்கு பின் இப்படி காபியைக் குடிப்பது பாதுகாப்பானது என்று நினைக்கிறீர்களா? பொதுவாக காபியில் உள்ள காஃப்பைன் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது, இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவர் இப்படி இரவு தூக்கத்தை போதுமான அளவு மேற்கொள்ளாமல் இருந்தால், இது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, இதயத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
3. மொபைல், கணினி திரையை பார்ப்பது
என்ன தான் ஓய்வு நேரத்தில் தான் மொபைலை நீங்கள் பார்ப்பவராக இருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன் மொபைலை பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் மொபைல் திரையின் நீல ஒளி வெளிப்பாடு மெலடோனின் உற்பத்தியை அடக்குகிறது. இது தூக்கத்தை தாமதப்படுத்துவது மட்டுமின்றி, உடலை எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கும். மேலும் இதயத்தை போதுமான ஓய்வு எடுக்கவிடாமலும் தடுக்கும்.
4. இரவு நேர ஸ்நாக்ஸ்
இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது பசியைத் தூண்டும். அதுவும் அப்போது சிப்ஸ், ஸ்வீட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணத் தூண்டும். இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது ஆரோக்கியமற்ற கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, காலப்போக்கில் இதயத்தில் பிரச்சனையை வரத் தூண்டிவிடும்.
5. மன அழுத்தம்
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்கள் அனைவருமே தங்கள் உடல்கள் துன்பப்படுவதை உணர்வதில்லை. இரவு நேர வேலைகள் அல்லது மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்த அளவை அதிகரிப்பதோடு, கார்டிசோல் ஹார்மோனை அதிகரித்து, இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.
6. மது அருந்துவது
ஒரு டம்ளர் ஆல்கஹால் உடலில் பெரிய கேடு விளைவிக்காது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இப்படி அடிக்கடி இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஆல்கஹால் அருந்துவது இதய தாளத்தை சீர்குலைக்கும், இரத்த அழுத்தத்தை உயர்த்தும் மற்றும் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். இது இப்படியே நீண்ட காலத்திற்கு நீடித்திருந்தால், இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications