Latest Updates
-
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஜூலை 26 ஆம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் பொழுதுபோக்கிற்காக நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் அல்லது வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்ப மகிழ்ச்சியில் சரிவு காணப்படும். தொழிலதிபர்களுக்கு, வாரத்தின் முதல் பாதி மிதமானதாக இருக்கும். வருமானத்தை விடச் செலவுகள் அதிகமாக இருப்பதால் நிதிச் சமநிலையைப் பேணுவது சற்று கடினமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் பல தடைகளை தாண்டி வெற்றி காண்பீர்கள். தொழிலில் இருந்த சிரமங்கள் தீர்க்கப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு மிகவும் மங்களரமானதாக இருக்கும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். புதுமண தம்பதிகள் நல்ல செய்தியைப் பெறலாம். காதல் துணையுடனான உறவு இனிமையாகவே இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் திட்டமிட்ட பணிகளை முடிக்க கூடுதல் முயற்சியும் உழைப்பும் செலுத்த வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். புதிதாக ஏதாவது தொடங்க நினைத்தால், சரியான நேரத்திற்கு காத்திப்பது நல்லது. வேலை தொடர்பாக திடீரென்று பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் எதிர்பார்த்ததை விட குறைவான பலனைத் தருவதாகவும் இருக்கலாம். மாணவர்கள் வெற்றியை அடைய வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த வாரம் உங்கள் துணையின் உணர்வுகளை மதித்து நடக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் மங்களகரமானதாக இருக்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நற்செய்தியைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியுடன் வேலையில் உள்ள சிரமங்கள் தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரக் கண்ணோட்டத்தில் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். மேலும் உங்கள் மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால், இந்த வாரத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் மெதுவாக இருந்தாலும் முன்னேறும். முதல் பாதியை விட பிற்பகுதி அதிக லாபம் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும், இந்த வாரம் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எந்தவொரு பெரிய முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்கவும். அதிக பணம் செலவழிக்க நேரிடும். கோபத்தைக் கட்டுப்படுத்தி, பணிவைக் கடைப்பிடித்தால், நீங்கள் திட்டமிட்ட பணிகளை விரும்பியபடி முடிக்க முடியும். அன்புக்குரியவருடனான வாக்குவாதங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் மிதமானதாக இருக்கும். விரும்பிய வெற்றியையும் நிதி ஆதாயங்களையும் அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திடீரென ஒரு நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குடும்ப தகராறுகள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். பணிபுரியும் பெண்களுக்கு, சற்று சவாலானதாக இருக்கும். வணிகர்கள் ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீண்டகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டிருந்தால், பொதுமக்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் கௌரவமும் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணியில் இருப்பவர்கள், தாங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வேலை சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இந்த வாரம் அதற்கான தீர்வைக் காண முடியும். வாரத்தின் நடுப்பகுதி எதிர்பாராத நிதி ஆதாயங்களைக் கொண்டு வரும். சமூக அந்தஸ்து உயரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நிம்மதி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வாரத்தின் நடுப்பகுதியில், உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒரு பெரிய கவலை தீர்க்கப்படுவதால் நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த மந்தநிலை முடிவுக்கு வரும். வாரத்தின் கடைசியில் மேற்கொள்ளப்படும் வணிகப் பயணங்கள் இனிமையானதாகவும், வெற்றிகரமானதாகவும், லாபகரமானதாகவும் அமையும். நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த நிதி உங்களுக்கு எதிர்பாராத விதமாகக் கிடைக்கக்கூடும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும் . இந்த வாரம் உங்கள் வேலைகளில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாரத்தின் முதல் பாதியில், உங்கள் நிதி, ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பணியில் இருப்பவர்கள் இந்த வாரம் வேலையில் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் தேவையற்ற தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் உங்களுக்கு மங்களகரமாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள, உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதித்து, உங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். திட்டமிட்ட பணிகளை முடிக்க வழக்கத்தை விட அதிக முயற்சியும் உழைப்பும் செலுத்த வேண்டியிருக்கும். வாரத்தின் முதல் பாதியில், ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளும்போது நீங்கள் நிதிச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். பணம் கடன் வாங்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம். வருமானம் மற்றும் செலவுகள் சமமாக இருப்பதால், நீண்டகால கடன்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே, நிலுவையில் உள்ள பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதன் மூலம் உங்கள் நிதியை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டும். ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வாரம் தொழிலதிபர்கள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களுக்கு மிதமானதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலையை தள்ளிப் போட முயற்சித்தால் வெற்றியும் நிதி ஆதாயங்களும் குறையக்கூடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்கள் இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்படுங்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கியுள்ள பணத்தை பெறுவதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். மாணவர்களுக்கு இது ஒரு மிதமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



