Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
உங்கள் இதயத்தை பாதுகாக்கும் உலகின் சிறந்த டயட் முறைகள் இதுதான்...!
நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் அதிக கொழுப்பு இருப்பதால் நமது எடை மிகவும் வேகமாக அதிகரித்து விடுகிறது.
நமது உடலில் உயிர் எங்கு இருக்கிறது என்பது எவராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று. ஆனால் இதயத்தை கட்டுப்படுத்துவது எது என்று நமக்கு தெரியும். அதுதான் நமது இதயமாகும். நமது ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் முக்கிய உறுப்பாக இதயம் இருக்கிறது. ஆனால் நமது இதயம் பல காரணங்களால் பாதிக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று அதிக எடை ஆகும். இப்போது நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் அதிக கொழுப்பு இருப்பதால் நமது எடை மிகவும் வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆரோக்கியமான டயட் நமது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை இயல்பு நிலையில் வைக்க உதவுகிறது. உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த டயட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆர்னிஷ் டயட்
இந்த டயட் முழுக்க முழுக்க சைவ உணவை அடிப்படையாக கொண்டதாகும். இட்னஹ் டயட் இதய கோளாறுகளை தடுக்கும் என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவரங்களை அவற்றின் இயற்கையான வடிவத்தில் சாப்பிடுவது நாம் அனைவரும் செய்யக்கூடிய சிறந்த தேர்வாகும். இதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என அனைத்தும் அடங்கும். இந்த டயட்டில் சர்க்கரையை மிதமான அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

டேஷ் டயட்
DASH என்பதன் அர்த்தம் Dietary Approaches to Stop Hypertension என்பதாகும். இது அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் டயட் முறையாகும். இந்த டயட்டில் உப்பின் அளவு குறைவதோடு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொழுப்பு குறைவாக இருக்கும் பால் பொருட்கள் போன்றவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதய ஆரோக்கியம் மட்டுமின்றி இது மேலும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.

மெடிடெர்னியன் டயட்
இந்த டயட் முறையானது க்ரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் உணவுகளின் தாக்கத்தில் இருந்து ஈர்க்கப்பட்டது. இது ஆலிவ் எண்ணெய், பருப்பு வகைகள், சுத்திகரிக்கப்படாத தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறது. இந்த டயட்டின் முக்கியமான உணவு மீன் ஆகும். உங்கள் உடலில் இருக்கும் LDL கொழுப்பின் அளவை குறைத்து உங்கள் இதயத்தை மாரடைப்பில் இருந்து பாதுகாக்க ஈர்த்து ஒரு சிறந்த உணவுமுறையாகும்.

மைன்ட் டயட்
இதயத்தை பாதுகாக்கும் என்று மருத்துவர்களால் நிருபிக்கப்பட்ட டயட் முறை இதுவாகும். இது மைன்ட் டயட் மற்றும் மெடிடெர்னியன் டயட் இரண்டும் சேர்ந்ததாகும். இந்த டயட்டில் பச்சை காய்கறிகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பழங்கள், மீன், ஆலிவ் ஆயில் மற்றும் வைன் சேர்க்கப்படுகிறது. இந்த டயட்டில் இறைச்சி, சீஸ் மற்றும் இனிப்புகளை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த டயட் இதய ஆரோக்கியத்தை மட்டும் பாதுகாப்பது இன்றி மூளையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

TLC டயட்
Therapeutic Lifestyle Changes என்னும் இந்த டயட் உங்கள் கொலஸ்ட்ராலை அதிகளவில் குறைக்க உதவுகிறது. இந்த டயட்டை பின்பற்றும் போது புகைபிடிக்கக்கூடாது மேலும் ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி போன்றவையும் தேவை. நிறைவுற்ற கொழுப்பின் அளவை குறைப்பதே இந்த டயட்டின் முக்கிய அம்சமாகும், ஏனெனில் நிறைவுற்ற கொழுப்புகள் நமது உடலில் இருக்கும் LDL கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இந்த டயட்டில் உணவகங்களில் கூட சாப்பிடலாம் ஆனால் குறைவான கொழுப்பு இருக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

வேகன் டயட்
இது முழுவதும் சைவ உணவை அடிப்படையாக கொண்ட டயட் ஆகும். இதில் தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும், விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது. இதில் பால் மற்றும் முட்டையும் அடங்கும். இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் மற்ற டயட்களை விட விரைவில் எடையை குறைக்கலாம். கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் இவர்கள் உணவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

ப்ளெக்ஸிடேரியன் டயட்
இந்த டயட் அவ்வப்போது இறைச்சி பொருட்களை சேர்ப்பதன் மூலம் தாவர அடிப்படையிலானது. இந்த டயட் இறைச்சி புரதங்களை காட்டிலும் தாவர புரதங்களை சுற்றியே நகர்கிறது. ஏனெனில் இறைச்சி நமது உடலில் கொழுப்பின் அளவை வேகமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நமது உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இறைச்சியுடன் இதயத்தை பாதுகாக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த டயட் ஆகும்.



Click it and Unblock the Notifications











