உங்கள் இதயத்தின் வயது என்னவென்று தெரியுமா?

Written By: Staff
Subscribe to Boldsky

இதயத்தின் வயது என்பது அவர்களின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நபரின் இதயமும் இரத்த நாள அமைப்புமுறையும் அவரின் இதயத்தின் வயதை கணக்கிட உதவுகிறது.

Did you know your heart's age?

நமது வயதிலிருந்து இருதயத்தின் வயது மாறுபடும். இதயத்தின் வயதை கணிப்பதன் மூலம் இருதய பிரச்சனைகள் ஆரோக்கியம் இல்லாமை ஆகியவற்றை தவிர்க முடியும். கார்டியோவாஸ்குலர் நோய் உலகின் அனைத்து நோய்களுக்கும் முன்னணியாக உள்ளது.

இது மரணத்திற்கும் முன்னணி காரணமாக உள்ளது. இதயத்தை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கியமான இருதய நோய்கள்:

முக்கியமான இருதய நோய்கள்:

கரோனரி இதய நோய்: (எ.கா. இதய நோய், மாரடைப்பு, "ஆஞ்சினா அல்லது மார்பு வலி ")

செரிபரோவாஸ்குலர் நோய்: (எ.கா. இஸ்கெமிடிக் ஸ்ட்ரோக், ஹெமாசார்ஜ் ஸ்டோக், மற்றும் ட்ரான்ஸிண்ட் இஸ்கெமிக்கிக் தாக்குதல் அல்லது "டிஐஏ")

உட்புற தமனி நோய் : (எ.கா. இடைப்பட்ட கிளாடிசேஷன்)

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு

உங்கள் வயதினை விட இதயத்தின் வயது அதிகமாக இருந்தால், நீங்கள் கார்டியோவாஸ்குலர் இருதய நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இருதயத்தின் வயது என்பது இருதய பிரச்சனைகள் எளிதில் வர காரணமாகிறது.

மேலும் அதிர்ஷ்டவசமாக மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து பிரச்சனையில் இருந்து விடுபட காரணமாகிறது. உங்களது வயது 40 ஆக இருக்கலாம் ஆனால் இதய மருத்துவர் உங்கள் இருதயத்தின் வயது 60 என கூறினால் அது உங்களை அதிர்ச்சியடைய செய்யும்.

ஆய்வு :

ஆய்வு :

சமீபத்திய CDC ஆய்வில் அமெரிக்கவின் 30-74 வயதிற்குட்பட்டவர்களது இருதயத்தின் வயது அவர்களது உண்மையான வயதை காட்டிலும் அதிகமாக உள்ளது என கூறுகிறது. உங்கள் இதயத்தை மதிப்பிடுவது மிகவும் எளிது. ஆனால் அதற்கு முன் நீங்கள் இரண்டு இதய ஆரோக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. உங்களது உயர் இரத்த அழுத்த அளவை தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் மருத்துவ பரிசோதனையின் போதோ அல்லது வீட்டில் உபயோகிக்கும் இரத்த அழுத்த கருவி கொண்டோ அறிந்து கொள்ளலாம்.

பரிசோதனை :

பரிசோதனை :

இந்த இரண்டு அளவுகளை கொண்டு உங்கள் இருதயத்தின் வயதை கணக்கிடலாம். எடுத்துக்காட்டாக ஒரு ஆணின் வயது 30 ஆகவும் அவரது உயர் இரத்த அழுத்தம் 125mm ஆகவும்,அவர் புகைப்பிடிப்பவராகவும், சக்கரை நோய் அல்லாதவராகவும், அவரது பிஎம்ஐ அளவு 22.5 ஆகவும் இருந்தால், அவரது இருதயத்தின் வயது 38 ஆக இருக்கும்.

அவரது இருதயத்தின் வயதானது அவரது வயதைக்காட்டிலும் 8 ஆண்டுகள் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், அவர் புகைப்பிடிப்பதே ஆகும். இதனை நிறுத்திக்கொண்டால், இருதயத்தின் வயதை குறைக்கலாம்.

இந்த இருதய வயதை மதிப்பீடு செய்தல் என்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களை தொடரவும் உதவியாக இருக்கும்.

 இருதயத்தின் வயதை குறைக்க முடியுமா?

இருதயத்தின் வயதை குறைக்க முடியுமா?

இருதயத்தின் வயது அதிகமாக இருந்தால் என்ன செய்வது? இருதயத்தை பலப்படுத்தும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு ஆண்டு புகைப்பிடிப்பதை நிறுத்துவது 14 ஆண்டுகள் ஆண்டுகள் ஆண்கள் ஆண்களுக்கும் 15 வருடங்கள் பெண்களுக்கும் இருதயத்தின் வயதை குறைக்க உதவுகிறது.

மேலும் இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. கார்டியோவாஸ்குலர் நோயில் இருந்து தப்பிக்கவும் இது உதவுகிறது.

காரணம் :

காரணம் :

கார்டியோவாஸ்குலர் நோய்க்கு உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், இரத்ததில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், சக்கரை நோய், அதிக உடல் எடை ஆகியவை காரணமாகின்றன.

ஆரோக்கிய உணவு :

ஆரோக்கிய உணவு :

கார்டியோவாஸ்குலர் நோயில் இருந்து தப்பிக்க, ஆரோக்கியமான உணவு பழக்கம் முக்கியமானதாகும். உடல் எடையை குறைத்தல், புகைப்பழக்கத்தை கைவிடுதல், இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைத்தல் ஆகியவை கார்டியோவாஸ்குலர் நோயினால் ஏற்படும் 50% உயிர் இழப்புகளை குறைக்கிறது.

 உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

மற்றுமொரு ஆய்வில், குறைந்தது ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது, மிதிவண்டி ஓட்டுவது. வாரத்திற்கு ஓரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது ஆகியவை 86% இருதயநோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவுகிறது என்று கூறுகிறது.

இருதயத்தின் வயதினை கணக்கிடுவது, இருதய பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தவறான உணவு பழக்கவழக்கங்களை கைவிடவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did you know your heart's age?

Tips to find out your heart's age?
Subscribe Newsletter