இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தும் என தெரியுமா?

முன்பு 60 வயதில் ஏற்பட்டு வந்த இதய கோளாறுகள். இன்று நாற்பதை தொடுவதற்கு முன்பே நம்மளை கட்டியணைத்துக் கொள்கிறது. இதனால், மாத வருமானத்தில் ஒரு பங்கை மருத்துவனைக்கு என பிரிக்கும் நிலை மிக சாதாரணமாக காணப்படுகிறது.

சிறுநீரகத்தை சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்!

இதயம் இவ்வளவு விரைவாக பலவீனம் அடைய என்ன காரணம்? நமது கவனக்குறைவு தான் இதற்கான மிகப்பெரிய காரணம். உடல் வெளிப்படுத்தும் எச்சரிக்கை அறிகுறிகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

கல்லீரலை சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்!

நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ சில பழக்கவழக்கங்களும் கூட இதயத்தை பலவீனப்படுத்த காரணிகளாக இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறான உணவுமுறை பழக்கங்கள்

தவறான உணவுமுறை பழக்கங்கள்

கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவு முறையை நீங்கள் பின்பற்றி வந்தால், உடலில் தானாக எச்.டி.எல் மற்றும் எல்.டி.எல் கொழுப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும். இதில் எல்.டி.எல் கொழுப்பு இதய நலனுக்கு கேடு விளைவிப்பது ஆகும். ஆகவே, நொறுக்கு தீனி, சிப்ஸ், வறுத்த உணவுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

உடல் உழைப்பு இல்லாதது

உடல் உழைப்பு இல்லாதது

வயிறு நிரம்ப சாப்பிடும் நாம், உடலில் சேர்ந்த கலோரிகள் கரையும் அளவு உடல் உழைப்பு செய்வதில்லை. இன்றைய வாழ்வியலில் நமது கண், வாய் மற்றும் விரல்கள் மட்டும் தான் உடலில் அதிகளவு வேலை செய்கிறது. இது உங்கள் இதயத்தை வேகமாக பலவீனம் அடைய காரணியாக இருக்கிறது.

குறட்டை

குறட்டை

உடல்பருமன், நீரிழிவுக்கு இணையாக இதய நலனும் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறி தான் இந்த குறட்டை. குறட்டை விடுபவர்களிடம் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறது, இதனால் ஸ்ட்ரோக் அபாயமும் கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது.

அதிகமான உடற்பயிற்சி

அதிகமான உடற்பயிற்சி

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது உடலை சிரமத்திற்குள்ளாக்குகிறது. இதனால் இதயத்தில் சிறு சிறு அடைப்புகள் ஏற்பட காரணியாக இருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இதயம் பலவீனம் அடைய மன அழுத்தம் மறைமுகமான காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும் போது உங்கள் இதய துடிப்பின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் இதயம் மற்றும் உடல் அதிகளவு சூடாகிறது. இதுவே இதயம் பலவீனம் அடைய காரணமாகிவிடுகிறது.

தனியாக இருப்பது

தனியாக இருப்பது

திடீரென தனிமையில் தள்ளப்படுவதும் கூட இதயத்தை பலவீனப்படுத்துகிறது. தனிமையினால் ஏற்படும் பதட்டம், மன சோர்வு தான் இதற்கான காரணியாக இருக்கிறது.

வாய் நலன்

வாய் நலன்

பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகள் கூட இதயத்தை பலவீனப்படுத்துகின்றன. ஈறுகளில் ஏற்படும் தொற்றின் காரணமாக கூட இதய நலன் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக இரத்த நாளங்களில் கட்டிகள் ஏற்படலாம். இந்த தொற்று இரத்த ஓட்டத்தில் கலப்பதால் தான் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எச்சரிக்கை அறிகுறிகளை தவிர்ப்பது

எச்சரிக்கை அறிகுறிகளை தவிர்ப்பது

முக்கயமாக நம்மில் பலர் எச்சரிக்கை அறிகுறிகளை சாதாரணமாக நினைப்பதும் கூட இதயம் வேகமாக பலவீனம் அடைய காரணியாக இருக்கிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அசௌகரியம், அழுத்தம், மார்பு, தோள்பட்டை வலி, அதிகமாக வியர்ப்பது, குமட்டல், செரிமான கோளாறு, மயக்கம், தலை சுற்றல் போன்றவை இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன.

புகை மற்றும் மது

புகை மற்றும் மது

மாற்றம் இல்லாமல் உடல்நலத்தை கெடுக்கும் ஓர் சிறந்த காம்போ இவை. இவற்றை கைவிட முடியவில்லை எனிலும், முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லை எனிலும், உங்களை நம்பி, உங்கள் துணையை எதிர்பார்த்து இருக்கும் குடும்பத்திற்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion