Latest Updates
-
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது!
ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மனித இதயம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!!!
மனித உடலிலேயே இதயம் தான் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு. சொல்லப்போனால் இது தான் உடலிலேயே மிகுந்த ஆற்றல் கொண்ட கடுமையாக உழைக்கும் உறுப்பு. இதயத்தின் முக்கிய பணி, உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் வழியே இரத்தத்தை அனுப்புவது. உடலிலேயே சற்றும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் வேலை செய்யும் உறுப்பும் இதுவே.
மாரடைப்பை தடுக்க 30 எளிய வழிகள்!!!
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று மக்களிடையே இதய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் நடைபெறும். இன்று உலக இதய தினம் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை மனித இதயம் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த 25 வழிகள்!!!

உண்மை #1
ஒரு வளரும் குழந்தையின் இதயத்தின் அளவு ஒரு கைப்பிடி அளவு இருக்கும். அதுவே ஒரு வளர்ந்த மனிதனின் இதயத்தின் அளவானது இரண்டு கைப்பிடி அளவு இருக்கும்.

உண்மை #2
மனித இதயத்தின் எடை 1/2 கிலோவிற்கு குறைவாகத் தான் இருக்கும்.

உண்மை #3
இதய இரத்த குழாய்களின் நீளமானது நமது நாட்டில் உள்ள மொத்த ரயில் பாதையின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமானது என்று பாருங்கள்.

உண்மை #4
ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளின் இதயத்துடிப்பு சற்று வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70 முறையும், பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 78 முறையும் துடிக்கும்.

உண்மை #5
இதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும், உடலில் உள்ள சுமார் பத்தாயிரம் மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களில் இரத்தத்தை அனுப்புகிறது.

உண்மை #6
இதயமானது ஒரு நாளில் சுமார் 7200 லிட்டர் இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. ஆனால் உடலிலேயே விழிவெண்படலத்தில் மட்டும் இரத்தம் இல்லை.

உண்மை #7
இதயமானது ஒருவரின் வாழ்நாளில் சுமார் 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்ப் செய்கிறது. (1 மில்லியன் பேரல் இரத்தம் என்பது 3-க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர்களை நிரப்பும் அளவு)

உண்மை #8
இதயத்தில் இருந்து வரும் 'லப்-டப்' என்னும் சப்தம் வருவதற்கு காரணம், இதயத்தில் உள்ள நான்கு வால்வுகள் திறந்து மூடுவது தான்.

உண்மை #9
நம் உடலில் உள்ள நுண்ணிய இரத்தநாளங்களின் நீளம் சுமார் 1 மி.மீ ஆகும்.

உண்மை #10
கருவில் வளரும் குழந்தைக்கு முதலில் வரும் உறுப்பே இதயம் தான்.

உண்மை #11
கருத்தரித்து நான்கு வாரம் கழித்து தான் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

உண்மை #12
ஒருவருக்கு பல் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உண்மை #13
ஒரு நாளைக்கு இதயமானது 1 லட்சம் வரை சுருங்கி விரிகிறது.

உண்மை #14
இதயத்துடிப்பானது ஒரு நாளைக்கு 1,00,000 தடவையும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவையும், வாழ்நாளில் 2.5 பில்லியன் தடவையும் துடிக்கின்றன.

உண்மை #15
பெரும்பாலான மக்களுக்கு மாரடைப்பானது காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தான் ஏற்படுகிறது.

உண்மை #16
ஒருவரின் மோதிர விரல் நீளமாக இருந்தால், அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications