Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சிறந்த உணவுகள்!!!
உடலில் உள்ள பாகங்களில் மிகவும் முக்கியமானது இதயம் தான். இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது. எனவே நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு இதயத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. மேலும் இதயம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகள் தான். இவை அனைத்தும் சரியாகவும், ஆரோக்கியமானதாகவும் இல்லாததால், உடலில் இதயத்தை பாதிக்கும் பிரச்சனைகளான இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது போன்றவை ஏற்பட்டு, இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமற்ற பழக்கங்கள், உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக உணவுகளில் சரியான கட்டுப்பாடும், கவனமும் தேவை. சரி, இப்போது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸில் ஃபோலேட், ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. இவை உடலில் உள்ள கொல்ஸ்ட்ரால் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். எனவே இதனை தண்ணீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால், மிகவும் நல்லது, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ரெட் ஒயின்
ஆல்கஹால் பருக வேண்டும் என்று நினைத்தால், சிறிது ரெட் ஒயின் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் மற்றும் கேட்டச்சின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தமனிகளின் சுவற்றை பாதுகாப்பதில் சிறந்தது. மேலும் இது HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும். மேலும் இதய நோய் உள்ளவர்கள், இதனை குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது மிகவும் அவசியமானது. குறிப்பாக அளவுக்கு இது அதிகரித்தால், பின் இதுவே எமனாகிவிடும்.

மீன்கள்
மீன்களில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பொருளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது நல்லது. அதிலும் சால்மன் மற்றும் டூனா போன்றவை இதயத்திற்கு மிகவும் சிறந்தது.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் இரத்தக் குழாய்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதனை உணவில் அதிகம் சேர்த்தால், கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வால்நட்
நட்ஸில் ஒன்றான வால்நட்டில் ஒமேகா-3, மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இதனை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, தமனிகளில் இருக்கும் வீக்கம் அல்லது காயங்களை குறைத்து, இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை பாய வைக்கும்.

பாதாம்
பாதாமின் நன்மைகளை சொன்னால் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மேலும் இதனை தினமும் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட LDL கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் நீரிழிவை கட்டுப்படுத்தும்.

டோஃபு
சோயா பொருட்களில் ஒன்றான டோஃபுவில் கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும பாலி-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.

இனிப்பு உருளைக்கிழங்கு
சாதாரண உருளைக்கிழங்கை விட, இனிப்பு உருளைக்கிழங்கு இதயத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது. மேலும் இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் லைகோபைன் போன்றவையும் நிறைந்துள்ளது.

ஆரஞ்சு
இந்த புளிப்பு சுவை நிறைந்த சிட்ரஸ் பழத்தில் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருளான பெக்டின் இருப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ஒரு சாதாரண ஆரஞ்சு பழத்தில் 62 கலோரிகளும், 3 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது. ஆகவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

கேரட்
கரோட்டின் அதிகம் நிறைந்துள்ள கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் மிகவும் சிறந்தது. மேலும் இதுவும் கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று. எனவே தினமும் சேரட் சாப்பிட்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்
ஓட்ஸ் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். இந்த ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுப்பதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் சிறந்தது.

காபி
காபி மற்றும் டீயை குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம். அதிலும் ஆய்வுகளில் தினமும் 3-4 கப் காபி குடிப்பவர்களுக்கு 25% இதய நோய் வருவது தடுக்கப்படும் என்று சொல்கிறது. ஆனால், ஏற்கனவே நீரிழிவு மற்றும் ஹைப்பர் டென்சன் உள்ளவர்கள், காப்ஃபைன் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கொழுப்புள்ள பாலில் காபி மற்றும் டீ போட்டு குடிப்பதை விட, ப்ளாக் காபி அல்லது டீ குடித்தால் நல்லது. இதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்வது தடுக்கப்படும்.

செர்ரி
செர்ரிப் பழங்களில் ஆந்தோசையனின்கள் இருப்பதால், இரத்தக் குழாய்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மேலும இதில் இதயத்தை பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே தினமும் செர்ரி பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

ப்ளூபெர்ரி
இதயத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுகளைப் பட்டியலிடும் போது, அதில் நிச்சயம் ப்ளூபெர்ரி இருக்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள ஆந்தோசையனின்கள் இந்த பழத்திற்கு அடர்ந்த நீல நிறத்தை தருவதோடு, இதயத்தையும் பாதுகாக்க உறுதுணையாக உள்ளது. மேலும் இந்த பழத்தில் எலாஜிக் ஆசிட் (ellagic acid), பீட்டா கரோட்டின், லூடின், வைட்டமின் சி, ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.



Click it and Unblock the Notifications