Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
இந்த 3 பழங்களை தினமும் சாப்பிடுங்க.. மாரடைப்பே வராது.. கூறும் டாக்டர் பிரகாஷ்மூர்த்தி!
Heart Healthy Fruits: தற்போது இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏனெனில் சமீப காலமாக இதய நோயால், குறிப்பாக மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் போன்றவற்றை நிறைய பேர் சந்திப்பதோடு, மரணமடைந்தும் வருகின்றனர். அதுவும் இளம் வயதிலேயே இப்படியான சூழல் நிலவுகிறது.
இதற்கு தற்போதைய வேலைப்பளுமிக்க பணியிட சூழலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தான் முதன்மையான காரணம். அதுவும் ஒருவருக்கு இதய பிரச்சனையானது ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நமது பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நிகழ்கிறது. மேலும் நமது உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடி தீர்வை எதிர்பார்க்கிறோம். அதுவும் உணவுகளின் மூலம்.

ஆனால் உண்மையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் உணவு மூலம் உடனடி தீர்வு கிடைத்துவிடாது. அதுவும் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆரம்பத்தில் இருந்தே இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் பழங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
அப்படியானால் நீரிழிவு நிபுணரும், தொற்று நோய்கள் ஆலோசகருமான டாக்டர் பிரகாஷ்மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அப்படி இதில் என்ன இருக்கிறது என்று பலரும் கேட்கலாம். "ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது க்ளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடலாம்.
இது தவிர இந்த ஆப்பிளில் க்யூயர்சிடின் என்னும் சேர்மம் உள்ளது. இது எல்டிஎல் ஆக்ஸிடேஷனை தடுக்கிறது. அதாவது இது கெட்ட கொலஸ்ட்ரால் போய் இதயத்தில் படிவதைத் தடுக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடுவது நல்லது" என்று டாக்டர் கூறினார்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழமும் உடலுக்கு மிகவும் நல்லது. "ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனால் இந்த பழத்தை உட்கொள்வதால் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதை அனைவரும் அறிவோம்.
கூடுதலாக இப்பழத்தில் ஹிஸ்பிரிடின் என்னும் கலவை உள்ளது. இது வாஸ்குலர் எண்டோதிலியம், இரத்தக்குழாய்களுக்கு உள்ளே உள்ள பகுதிகளில் அழற்சி ஏற்படாமல், மென்மையாகவும், நிலையாகவும் வைத்துக் கொள்கிறது. இதனால் நைட்ரிக் ஆக்ஸைடு சிக்னலிங் நன்றாக உள்ளது மற்றும் இரத்த அழுத்தமும் குறைமும் குறைகிறது" என்று டாக்டர் கூறினார்.
மாதுளம் பழம்
மற்றொரு பழம் மாதுளை. "மாதுளம் பழத்தைக் கொண்டு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் எல்லாம் செய்து பார்த்ததில், இதில் உள்ள பியூனிக்காலஜின் என்னும் பொருள், இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகளில் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாதுளம் பழத்தை சாப்பிட்டால் இரத்தம் நன்கு ஊறும் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் அது உண்மை அல்ல. சொல்லப்போனால் இரும்புச்சத்து இதில் குறைவாகத் தான் உள்ளது. இருப்பினும் இது இதயத்திற்கு நல்லது, மாரடைப்பு வராமல் தடுக்க உதவி புரிகிறது" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே, நீங்கள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், இந்த 3 பழங்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் மாரடைப்பு வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


