Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எச்சரிக்கை! கார்டியாக் அரெஸ்ட் வர போகிறது என்றால் 24 மணிநேரத்துக்கு முன் இந்த 3 அறிகுறிகள் தெரியுமாம்..
Sudden Cardiac Arrest Symptoms In Tamil: உலகளவில் இதய நோய், கார்டியாக் அரெஸ்ட் போன்றவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மாரடைப்பு என்பது இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வரக்கூடியது. அதுவே கார்டியாக் அரெஸ்ட் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையாகும்.
ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் உடனே சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சிகிச்சை கொடுக்க தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் 7-10% குறைவதாக கூறப்படுகிறது. அதனால் தான் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டவர்களில் சுமார் 10% பேர் மட்டுமே உயிர் பிழைக்கிறார்கள்.

சொல்லப்போனால் மாரடைப்பை விட கார்டியாக் அரெஸ்ட் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் திடீரென இரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்துவது அல்லது உடல் முழுவதும் இரத்தம் சுற்றுவதற்கு போதுமான அளவு இரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்துவதாகும். இப்படி இதயம் முழுமையாக செயல்படுவதை நிறுத்திவிட்டால், பின் இதய செல்கள் இறக்கத் தொடங்கி, சிகிச்சை தாமதமாகும் போது, மரணத்தை சந்திக்க நேரிடும்.
இப்படிப்பட்ட கார்டியாக் அரெஸ்ட் குழந்தைகள் மற்றும் இதய நோயின் முந்தைய வரலாறு இல்லாதவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் உடலில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். புதிய ஆய்வு ஒன்றின் படி, கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 24 மணிநேரத்திற்கு முன் ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை சந்திக்கிறார்கள்.
அதுவும் இந்த அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படக்கூடியவாறு இருக்கும். ஆனால் இந்த அறிகுறிகளை கவனித்து சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், உயிர்வாழ அதிக வாய்ப்புள்ளது என்பது ஹார்ட்ஃபோர்டு மற்றும் ப்ளூம்ஃபீல்டில் உள்ள நோயாளிகளைப் பார்க்கும் ஹார்ட் & வாஸ்குலர் இன்ஸ்டிடியூட்டின் தலையீட்டு இதயநோய் நிபுணரான ஜவாத் ஹைதர், எம்.டி. கூறுகிறார். மேலும் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கு 24 மணிநேரத்திற்கு முன் தெரியும் அறிகுறிகள் குறித்தும் டாக்டர் ஹைதர் கூறியுள்ளார்.
கார்டியாக் அரெஸ்ட் என்பது மாரடைப்பு போன்றது அல்ல. எப்போது இதயம் திடீரென்று துடிப்படை நிறுத்துகிறதோ, அப்போது திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது. இப்படி கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் மாரடைப்பு வரலாறு, அசாதாரண இதயத் துடிப்பு மற்றும் நாள்பட்ட மருத்துவ நிலைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
திடீர் கார்டியாக் அரெஸ்ட்டின் ஆரம்ப கால அறிகுறிகள்
கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் அனைவருக்குமே அறிகுறிகள் தெரிந்துவிடாது. சிலருக்கு அறிகுறிகள் எதுவும் வெளிக்காட்டாமல் வரலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு 24 மணிநேரத்திற்கு முன்பே அறிகுறிகள் தெரிவதாக டாக்டர் ஹைதர் கூறினார். அந்த அறிகுறிகளாவன:
1. நெஞ்சு பகுதியில் அசௌகரியம்
ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படப்போகிறது என்றால், அந்நபர் 24 மணிநேரத்திற்கு முன்பிருந்தே நெஞ்சு பகுதியில் ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். இப்படியான அசௌகரியத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. மூச்சுவிடுவதில் சிரமம்
வழக்கத்திற்கு மாறாக மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும், சுவாசிப்பது கடினமாக உள்ளதா? சரியாக சுவாசிக்க முடியவில்லையா? அப்படியானால் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான அபாயம் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
3. அதிகப்படியான வியர்வை
திடீரென்று அதிகமாக வியர்க்கிறதா? அதுவும் எந்த ஒரு கடினமான வேலையையும் செய்யாமல், நல்ல காற்றோட்டமான இடத்தில் இருந்தும், அதிகமான வியர்வையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இதயத்தில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 அறிகுறிகளையும் ஒருவர் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகினால், உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஆண்கள், பெண்களுக்கு அறிகுறிகள் வேறுபடலாம்
ஆய்வுகளின் படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் திடீர் மாரடைப்புக்கான அறிகுறிகளிலும் ஆரம்ப அறிகுறிகளிலும் வேறுபாடுகள் உள்ளன. அதில் மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் அதிகப்படியான வியர்வை ஆகிய மூன்று ஆரம்ப அறிகுறிகளை ஆண்கள் அதிகம் அனுபவிக்கின்றனர். அதே சமயம் பெண்கள் மூச்சுத்திணறலை மட்டுமே அதிகம் அனுபவிக்கின்றனர்.
எதுவாயினும், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை வழக்கத்திற்கு மாறாக ஒருவர் சந்தித்தால், அசால்ட்டாக இருக்காமல், உடனே என்னவென்பதை கவனித்தால், உயிரிழப்பைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications