Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Health Tips In Tamil: பார்க்க வித்தியாசமான தோற்றத்துடனும், நிறத்துடனும் காட்சியளிக்கும் ஒரு பழம் தான் அத்திப்பழம். இந்த அத்திப்பழம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கிடைக்கும் ஒரு சீசன் பழமாகும்.
இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்காவிட்டாலும், அதன் உலர்ந்த வடிவம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். எந்த வடிவத்தில் இவற்றை உட்கொண்டாலும், அவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

ஒரே ஒரு வித்தியாசம், நற்பதமான அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவு மற்றும் நீர்ச்சத்து அதிகம். உலர்ந்த அத்திப்பழத்தில் கலோரிகள் அதிகம் மற்றும் நீர்ச்சத்து குறைவு. மற்றபடி இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கனிச்சத்துக்கள் அனைத்துமே உள்ளன.
முக்கியமாக இந்த பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன. இத தவிர பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், காப்பர், வைட்டமின் ஏ போன்ற ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும் சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய அத்திப்பழத்தை உட்கொண்டால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.
1. மலச்சிக்கல் நீங்கும்
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அத்திப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் அத்திப்பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதுவும் கடுமையான மலச்சிக்கலில் அவதிப்படும் போது, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2-3 அத்திப்பழத்தை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2. எடை இழப்புக்கு உதவும்
உலர்ந்த அத்திப்பழம் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். ஏனெனில் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இதை 2-3 துண்டுகள் சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். இதன் விளைவாக உண்ணும் உணவுகளின் அளவு குறைந்து, உடல் எடை குறையும்.
3. இரத்த அழுத்தம் கட்டுப்படும்
தற்போது இரத்த அழுத்த பிரச்சனையை நிறைய பேர் கொண்டுள்ளனர். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது நாளடைவில் மாரடைப்பை வரவழைத்துவிடும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள், அதைக் கட்டுப்பாட்டில் வைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த பொட்டாசியம் அத்திப்பழத்தில் உள்ளன. எனவே அத்திப்பழத்தை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
4. செரிமான ஆரோக்கியம் மேம்படும்
அத்திப்பழத்தில் ப்ரீபயோடிக்குகள் அதிகமாக உள்ளன. ப்ரீபயோடிக்குகள் புரோபயோடிக்குகளின் செயல்பாட்டிற்கு ஆதரவளித்து, செரிமான செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் அத்திப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற உதவிபுரியும்.
5. கருவளத்திற்கு நல்லது
பண்டைய கிரேக்க காலத்திலிருந்தே அத்திப்பழங்கள், கருவுறுதலின் அடையாளமாக கருதப்பட்டது. அத்திப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து பெண்களின் முழு அண்டவிடுப்பின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை உட்கொள்ளும் போது கருவளம் மேம்படும். அதுவும் ஆண்கள் அத்திப்பழத்தை சாப்பிடும் போது, அவர்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் மேம்பட்டு, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
6. இதய ஆரோக்கியம் மேம்படும்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க உதவி புரிவதோடு, இதயத்தில் கொடுக்கப்படும் அழுத்தமும் குறையும். இதன் விளைவாக இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இதய பிரச்சனை வரக்கூடாதெனில், அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











