Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட்டால் உடலினுள் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?
Health Tips In Tamil: நீள்வட்டம் அல்லது வட்ட வடிவில், ப்ரௌன் நிற தோலை கொண்ட சப்போட்டா நிறைய பேரின் மிகவும் விருப்பமான பழம். இந்த சப்போட்டா பழம் இனிப்புச் சுவையுடன் இருப்பதோடு, ஏராளமான சத்துக்களையும் உள்ளடக்கிய சத்தான பழமும் கூட.
சப்போட்டா பழத்தை 'சிக்கு' என்றும் அழைப்பார்கள். இந்த சப்போட்டா மத்திய அமெரிக்காவின் மழைக்காடுகளில், குறிப்பாக மெக்ஸிகோ, பெலிஸிலை பூர்வீகமாக கொண்டது. ஆனால் தற்போது இந்தியாவிலும் இது கிடைக்கிறது.

அதுவும் இந்தியாவில் சப்போட்டா உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சப்போட்டா அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சப்போட்டாவில் உள்ள சத்துக்கள்
சப்போட்டாவில் மாம்பழத்தைப் போன்றே கலோரிகள் அதிகம் உள்ளன. அதே சமயம் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தில் டானின் போன்ற சக்தி வாய்ந்த பாலிஃபீனால்கள் உள்ளன. அதோடு பொட்டாசியம், சோடியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய சப்போட்டா பழத்தை அதன் சீசன் காலத்தில் தினமும் ஒன்று உட்கொண்டு வந்தாலே, உடலினுள் பல அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? கீழே சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பன குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆற்றல் அதிகரிக்கும்
சப்போட்டாவில் க்ளுக்கோஸ் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. இவை இரண்டும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. எனவே உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் மிகுந்த உடல் சோர்வை சந்திப்பவர்கள், சப்போட்டா பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடனடி ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.
2. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
சப்போட்டாவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கி, நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. அதோ இப்பழத்தில் ஆன்டி-பாக்டிரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இருப்பதால், உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு பாதுகாப்பளிக்கின்றன. எனவே நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு சப்போட்டா சாப்பிடுங்கள்.
3. சரும ஆரோக்கியம் மேம்படும்
சப்போட்டாவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் உள்ளன. முக்கியமாக இதில் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது மற்றும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமம் வயதாவதைத் தடுத்து, சருமத்தின் இளமையை நீட்டிக்கும்.
4. குடல் ஆரோக்கியம் மேம்படும்
சப்போட்டாவில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன மற்றம் இதில் உள்ள டானின் என்னும் கலவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நடுநிலையாக்கும். இதனால் அசிடிட்டி பிரச்சனை தடுக்கப்படும். மேலும் இப்பழத்தில் மலமிளக்கும் பண்புகளும் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் மற்றும் குடல் தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கும்.
5. எலும்புகளுக்கு நல்லது
சப்போட்டாவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற எலும்புகளின் வலிமைக்கு வேண்டிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. எனவே தினமும் ஒரு சப்போட்டாவை உட்கொண்டு வந்தால், எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் இதில் உள்ள அத்தியாவசியமான கனிமச்சத்துக்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளை சீராக்குவதோடு, எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
6. கர்ப்பிணிகளுக்கு நல்லது
சப்போட்டாவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்ச்ததுக்கள் அதிகமாக உள்ளன. எனவே கர்ப்பிணிப் பெண்கள் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், கர்ப்ப காலத்தில் சந்திக்கும் உடல் சோர்வு குறைவதோடு, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற கர்ப்ப கால அறிகுறிகளைக் குறைக்க உதவி புரியும்.
7. இரத்த அழுத்தம் கட்டுப்படும்
சப்போட்டா பழத்தில் மக்னீசியம் உள்ளன. இவை இரத்த நாளங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் சப்போட்டாவை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
8. புற்றுநோயைத் தடுக்கும்
சப்போட்டாவில் டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி-யைத் தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. எனவே சப்போட்டாவை தினமும் உட்கொள்ளும் போது, அது நுரையீரல், குடல் மற்றும் வாய்ப்புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications