Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த உணவுகளை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் அது உங்களுக்கு விஷமாக மாறுமாம்... ஜாக்கிரதை...!
மனித ஆரோக்கியத்திற்கு சீரான உணவுகள் என்பது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவுகள் என்று வரும் போது அவற்றை சரியாக சமைப்பதும் மிகவும் முக்கியமானதாகிறது. நன்றாக சமைக்கப்படாத ஆரோக்கிய உணவுகள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை.
இந்த உணவுகளை சரியாக சமைப்பது செரிமானத்திற்கு உதவுகிறது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவை பாதி பதத்தில் சமைக்கப்படும் போது வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை
வெள்ளை மற்றும் மஞ்சள் கரு கெட்டியாகும் வரை முட்டைகளை வேகவைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக மக்கள் அதிகளவில் பச்சை அல்லது பாதி வேகவைத்த முட்டைகளை விரும்பி உண்கின்றனர். இப்படி பாதி வேகவைக்கப்படும் முட்டைகள் வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
முளைகட்டிய பயிர்கள்
நாம் அனைவரும் வேகவைக்கப்படாத முளைகட்டிய பயிர்களை உண்கிறோம், ஆனால் இவற்றில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவற்றை பச்சையாக சாப்பிடுவது அவற்றை ஜீரணிக்க கடினமாக்குகிறது. சமைப்பது அவற்றில் உள்ள வைட்டமின் சி உள்ளடக்கத்தை குறைக்கலாம், ஆனால் சிறிது எலுமிச்சை சாறு சேர்ப்பது அதை மீட்டெடுக்கும்.
கிட்னி பீன்ஸ்
சிவப்பு நிற கிட்னி கடுமையான குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தும் விஷம் போன்றதாகும். பச்சையான பீன்ஸில் அதிகம் உள்ள நச்சுப் பொருளால் இது ஏற்படுகிறது. அவற்றை போதுமான வெப்பநிலையில் சமைக்காமல் உண்பது அவற்றை மிகவும் ஆபத்தானதாக மாற்றும், ஆனால் சரியான வெப்பம் அவற்றை பாதிப்பில்லாததாக மாற்றுகிறது.
சிக்கன்
சமைக்கும் போது சிக்கனின் நிறம் மாறுவதால் மட்டுமே அது நன்றாக சமைக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமாகாது. கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா போன்ற பல நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் ஆதாரமாக சிக்கன் இருக்கலாம்.
எனவே சிக்கனை எப்போதும் நன்றாக சமைப்பது நல்லது. கோழியின் உட்புற வெப்பநிலையை சரிபார்த்து, அது 165 டிகிரி செல்சியஸ் அடையும் வரை சமைப்பது அதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும்.
மரவள்ளிக் கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டின் வளமான மூலமாகும், ஆனால் அதை சரியாக சமைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பச்சை மரவள்ளிக்கிழங்கில் ஒரு நச்சு உள்ளது, இது சயனைடை உற்பத்தி செய்யக்கூடியது.
வறண்ட காலங்களில் வளர்க்கப்படும் கசப்பான மரவள்ளிக்கிழங்கில் இது இன்னும் மேலும் அதிகமாக இருக்கும். எனவே அதை சரியாக சமைக்க வேண்டியது அவசியம்.
அரிசி
பச்சை அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா இருக்கலாம், இது உணவை விஷமாக மாற்றக்கூடியது. அவை வறண்ட நிலையில் எளிதில் உயிர்வாழும் என்பதால், அவை உங்கள் அரிசி மூட்டையில் வாழலாம். சரியாக சமைக்கப்படாவிட்டால், அவை வெப்பத்தைத் தாங்கி உடலுக்குள் செல்லக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
