Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
தயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா? கூடாதா?
டயட்டில் இருப்போர் பலரும் பழங்களைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். உங்களுக்கு பழங்களை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட அழுத்துப் போயிருத்தால், சற்று வித்தியாசமாக சாப்பிடுங்கள்.
இன்று டயட் இருப்பது என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. டயட் என்பது வேறு ஒன்றும் இல்லை, உணவுக் கட்டுப்பாடு தான். நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளின் பெருக்கத்தினால், பலர் தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் ஒருவர் டயட்டை மேற்கொள்வதன் மூலம், விருப்பமான பல உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.
டயட் என்று வரும், அதில் பல சுவையான பழங்களும் அடங்கும். பொதுவாக பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் டயட்டில் இருப்போர் பலரும் பழங்களைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். உங்களுக்கு பழங்களை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட அழுத்துப் போயிருத்தால், சற்று வித்தியாசமாக சாப்பிடுங்கள். இக்கட்டுரையில் பெரும்பாலானோர் சாப்பிடக்கூடிய ஒருசில பழங்களையும், அந்த ஒவ்வொரு பழத்தின் சுவையையும் பிரமாதமாக்கும் ஒரு பொருள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக சர்க்கரையைத் தவிர்ப்பவர்கள், பழங்களை ஸ்நாக்ஸ் நேரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பழங்களையும், அவற்றின் சுவையைக் கூட்டும் பொருட்களையும் காண்போம்.

ஆப்பிள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்
ஆப்பிளில் நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. வேர்க்கடலை வெண்ணெய் வழுவழுவென்று வேர்க்கடலை மணத்துடன் நிறைந்தது. இத்தகைய ஆப்பிளை வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையுடன் இருக்கும். உங்களுக்கு இந்த இரண்டு பொருட்களுமே பிடிக்குமானால், சற்றும் தாமதிக்காமல் உடனே சுவைத்துப் பாருங்கள். பின், இந்த காம்பினேஷனை எப்போதும் விட மாட்டீர்கள்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சாக்லேட் டிப்
டார்க் சாக்லேட்டில் டிப் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரியை பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதை ஏன் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடாது. இதற்கு தேவையானது எல்லாம் ஒரு டார்க் சாக்லேட் பாரை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் சில ஸ்ட்ராபெர்ரியை எடுத்து அந்த சாக்லேட்டில் டிப் செய்து, பின் சாப்பிட வேண்டும்.
டார்க் சாக்லேட்டில் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. மறுபுறம் ஸ்ட்ராபெர்ரியில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் மட்டுமின்றி, எடையைக் குறைக்கும் மற்றும் தூக்க சுழற்சியை சீராக்கும் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது.

ஃபெடா சீஸ் திணிக்கப்பட்ட பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தின் உள்ளே உள்ள கொட்டையை அகற்றிவிட்டு, அதனுள் ஃபெடா சீஸை திணிக்க வேண்டும். இந்த காம்பினேஷன் நிச்சயம் பலரது நாவிற்கு விருந்தளித்தவாறு இருக்கும். ஃபெடா சீஸ் சற்று உப்பாக இருக்கும் மற்றும் சீஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல கொழுப்புக்கள் அடங்கியுள்ளது மற்றும் இது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும்.

மாம்பழம் மற்றும் யோகர்ட் அல்லது தயிர்
மாம்பழம் பிடிக்காதவர்களே இவ்வுலகில் இருக்கமாட்டார்கள். சொல்லப்போனால் பழங்களிலேயே மாம்பழத்தின் சுவையை விரும்புபவர்கள் தான் அதிகம் இருப்பர். இத்தகைய சுவையான மாம்பழத்தை சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்பினால், மாம்பழத்தை துண்டுகளாக்கி யோகர்ட் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், சர்க்கரை உணவுகளின் மீதுள்ள பிரியும் தணியும்.

அத்திப்பழம் மற்றும் ஆட்டுப் பால் சீஸ்
ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸில் நல்ல கொழுப்புக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. மறுபுறம் அத்திப்பழத்தில் பாலை விட அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு காம்பினேஷனும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நாவிற்கும் நல்ல காம்பினேஷனும் கூட.
மேலே கொடுக்கப்பட்ட காம்பினேஷன்களைத் தவறாமல் முயற்சித்துப் பார்த்து, எப்படி இருந்தது என்று உங்கள் சுவை அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications