For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகங்களில் உள்ள அழுக்கை வெளியேற்ற அடிக்கடி குடிக்க வேண்டிய ஜூஸ்கள்!

சிறுநீரகங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் தேங்கினால், பின் அது சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.

|

ஒவ்வொரு வருடமும் மார்ச் 12 ஆம் தேதி, சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பு. இவை தான் உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. ஒருவரது உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்தால், அதனால் பல நோய்கள் உண்டாக்கும். எனவே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

World Kidney Day: 10 Best Detox Drinks For The Kidneys

அதற்கு சிறுநீரகங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் தேங்கினால், பின் அது சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை உலக சிறுநீரக தினமான இன்று, சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும் சில பானங்கள் குறித்து கீழே கொடுத்துள்ளது. அந்த பானங்களை அவ்வப்போது குடித்து வந்தால், சிறுநீரகங்கள் நச்சுக்களின்றி ஆரோக்கியமாக இருக்கும்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காம இருக்கணுமா? அப்ப நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதெல்லாம் சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் பீட்டேன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் சிறுநீரில் அமிலத்தன்மையை அதிகரிக்கும் பயனுள்ள பைட்டோ கெமிக்கல் உள்ளது. பீட்ரூட்டை ஜூஸ் வடிவில் உட்கொண்டால், அது சிறுநீரகங்களில் உள்ள கால்சியம் பாஸ்பேட்டை நீக்கி, ஸ்ட்ரூவைட்டை உருவாக்க உதவும். மேலும் இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு, சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைக் குறைக்கும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகளுக்கு மிகவும் நல்லது. கிரான்பெர்ரி ஜூஸ் அதிகப்படியான கால்சியம் ஆக்ஸலேட்டால் சிறுநீரகங்களில் உருவாகும் சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது. எனவே உங்கள் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல், சுத்தமாக இருக்க நினைத்தால், அவ்வப்போது கிரான்பெர்ரி ஜூஸ் குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸில் உள்ள அமிலத்தன்மை, சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரிப்பதாக தெரிகிறது. இதனால் சிறுநீரக கல் உருவாக்க அபாயம் குறையும். சிறுநீரகங்கள் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்க, தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதற்கு இதில் உள்ள சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் அமிலம் போன்றவை தான் காரணம். மேலும் ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரக கல் உருவாக்கத்தைத் தடுக்கும்.

பெர்ரி ஸ்மூத்தி

பெர்ரி ஸ்மூத்தி

பெர்ரிப் பழங்களான ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் கிரான்பெர்ரி போன்றவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்றவை அதிகமாக உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பழங்கள் உடலில் இருந்து ப்ரீ-ராடிக்கல்களை அழிப்பதோடு, சிறநீரக நோய்களையும் தடுக்கும். ஆகவே அடிக்கடி பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஸ்மூத்தி தயாரித்துக் குடியுங்கள்.

டேன்டேலியன் டீ

டேன்டேலியன் டீ

டேன்டேலியன் இலைகளில் ப்ளேவோனாய்டான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது இரத்தம் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்வதோடு, சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். தினமும் ஒரு டம்ளர் டேன்டேலியன் டீயைக் குடித்தால், சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சிறுநீரக நோய்களும் தடுக்கப்படும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட்டில் கரோட்டீன் அதிகம் உள்ளது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சிறுநீரகங்களில் இருந்து டாக்ஸின்கள் மற்றும் கனமான மெட்டல்களையும் நீக்கும். மேலும் கேரட்டில் உள்ள நார்ச்சத்து டாக்ஸின்களுடன் பிணைந்து, உடலில் இருந்து வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் தயாரித்தோ குடியுங்கள்.

வெஜிடேபிள் ஜூஸ்

வெஜிடேபிள் ஜூஸ்

காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக செலரி, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, லெட்யூஸ் போன்றவை சிறுநீரகங்களுக்கு நல்ல பலனளிக்கக்கூடியவை. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், சிறுநீரகங்கள் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும்.

இளநீர்

இளநீர்

இயற்கை தந்த வரப்பிரசாதம் என்றால் அது இளநீர் தான். இது சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. இதில் சர்க்கரை குறைவு, அமிலம் மிகவும் குறைவு மற்றும் கலோரிகள் இல்லை. அதோடு இளநீரில் எலக்ட்ரோலைட்டுக்கள் அதிகம் என்பதால், இளநீரைக் குடித்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். மேலும் இளநீர் உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கும்.

அன்னாசி ஸ்மூத்தி

அன்னாசி ஸ்மூத்தி

அன்னாசியில் ஊட்டச்சத்துள்ள மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முழுமையாக நிறைந்துள்ளது. இந்த பழத்தில் புரோமலைன் என்னும் பைட்டோநியூட்ரியண்ட் உள்ளது. இது ஒரு நொதியாகும். இது சரியான சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, எரிச்சலைத் தணிக்கிறது மற்றும் முறையான உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே அன்னாசிப் பழத்தையோ அல்லது அதன் ஜூஸையோ தவறாமல் அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Kidney Day: 10 Best Detox Drinks For The Kidneys

It is essential to cleanse your kidneys by incorporating certain detox drinks in your diet. Read on to know the 10 best detox drinks for the kidneys.
Story first published: Thursday, March 12, 2020, 13:48 [IST]
Desktop Bottom Promotion