Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
ஆண்களே! உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அது வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் ஒருசில உணவுகள் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்க உதவுகின்றன.
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன் ஆகும். இது தான் உங்கள் பாலுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம். அதோடு இந்த ஹார்மோன் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம், முடி வளர்ச்சி மற்றும் விந்து உற்பத்தி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்களுக்கு போதுமான அளவு இருக்க வேண்டியது என்பது மிகவும் முக்கியம். ஆனால் டெஸ்டோஸ்டிரோன் அளவானது வயது அதிகரிப்பது, நாள்பட்ட நோய் அல்லது உணவுப்பழக்கம் காரணமாக மாற்றமடையலாம்.

ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அது வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பது போல் உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதோடு உண்ணும் உணவுகளிலும் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் ஒருசில உணவுகள் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்க உதவுகின்றன. எனவே உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க நினைத்தால், பின்வரும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

டுனா
டுனாவில் அதிக அளவு வைட்டமின் டி உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு சிறந்தது. ஒரு வேளை டுனாவை சாப்பிட்டால், அது தினசரி தேவையான வைட்டமின் டி சத்தை உடலுக்கு வழங்கும். அதற்காக வெறும் டுனா மீனை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சால்மன், மத்தி அல்லது கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் அனைத்திலுமே வைட்டமின் டி இருக்கிறது. ஆகவே அடிக்கடி உணவில் மீன் சேர்த்து வந்தாலே, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம்.

பால்
வைட்டமின் டி அதிகம் நிறைந்த மற்றொரு உணவுப் பொருள் தான் பால். அதுவும் நல்ல தரமான வைட்டமின் டி உடன் பலப்படுத்தப்பட்ட பாலைத் தேர்ந்தெடுத்துக் குடியுங்கள். ஏனெனில் இது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

முட்டை மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. எனவே முட்டை சாப்பிடும் போது, அதன் மஞ்சள் கருவை தவறாமல் சாப்பிடுங்கள். அதோடு முட்டையில் உடலுக்கு தேவையான பிற முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும் முட்டையைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களையும் சிரமமின்றி தயாரிக்கலாம் என்பதால், முட்டையை அன்றாடம் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

கடல் சிப்பி
கடல் சிப்பிகள் பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒரு சிறப்பான உணவுப் பொருளாக கருதப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஏனெனில் இதில் ஜிங்க் வளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்து டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் பயன்படுகிறது. எனவே ஒருவரது உடலில் உள்ள ஜிங்க் குறைபாட்டை அறிந்து கொண்டால், அது டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக மாட்டு ஈரலில் வைட்டமின் டி உள்ளது. அதோடு ஜிங்க் சத்து மாட்டிறைச்சியில் உள்ளது. இருப்பினும் மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. தினமும் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க நினைத்தால், மாட்டிறைச்சியை அளவாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உலர் திராட்சை
உலர் திராட்சை ஆண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் ரெஸ்வெராட்ரோல் அதிகம் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் தான் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது.

மாதுளை
ஆண்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது. இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் கூட, 2 வாரம் தொடர்ந்து மாதுளை ஜூஸ் குடித்து வந்த ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோ பழம் ஆண் செக்ஸ் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இதில் கொப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. இவை தான் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதவை.



Click it and Unblock the Notifications