Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
முதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
முதுகு வலியை சரிசெய்ய கண்ட கண்ட வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை நமக்கு தந்த சில உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டே சரிசெய்யலாம்.
இன்று ஏராளமான மக்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முதுகு வலி. ஒருவருக்கு முதுகு வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் நீண்ட நேரம் தவறான ஒரே நிலையில் அமர்ந்திருப்பது அல்லது படுத்து உறங்குவது, தவறான முறையில் உடற்பயிற்சி செய்வது மற்றும் மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சில சமயங்களில் முதுகு வலியானது காலநிலை மாற்றங்களால் வரும். உதாரணமாக, குளிர் காலத்தில் அதிகப்படியான குளிரின் காரணமாக, தசைகள் மற்றும் மூட்டுக்கள் பலவீனமாக இருக்கும். இதனால் குளிர்காலத்தில் அதிகமாக முதுகு வலியை உணரக்கூடும். எனவே தான் இக்காலத்தில், உடலை முடிந்தளவு வெதுவெதுப்பாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
முதுகு வலியை சரிசெய்ய கண்ட கண்ட வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை நமக்கு தந்த சில உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டே சரிசெய்யலாம். இந்த கட்டுரையில் முதுகு வலியைக் குறைக்க உதவும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகளை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தாலே முதுகு வலியைக் குறைக்கலாம்.

காபி
காபியில் உள்ள காப்ஃபைன் முதுகு வலியைக் குறைக்கும் மற்றும் மீண்டும் அப்பிரச்சனையே வராமல் தடுக்கும். ஏனெனில் காபி பீன்ஸில் உட்காயங்களால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் மாயாஜால உட்பொருட்கள் உள்ளன. எனவே உங்களுக்கு முதுகு வலிப்பது போன்று இருந்தால், ஒரு கப் காபியைக் குடியுங்கள்.

சிவப்பு திராட்சை
சிவப்பு திராட்சையில் உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருள், திசு சிதைவைக் குறைக்கும். அதுவும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ரெட் ஒயின் இதயத்திற்கு மிகவும் நல்லது. எனவே சிவப்பு திராட்சையை சாப்பிட்டால், இதயத்தில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

காய்கறிகள்
முதுகு வலி வந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில், இது வேறு ஏதோ ஒரு நோயின் தீவிர அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே முதுகு வலி அடிக்கடி வருவது போல் உணர்ந்தால், உடனே காய்கறிகளை அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள். தினமும் போதுமான அளவு காய்கறிகளை உட்கொண்டால், முதுகு வலி குணமாவதோடு, வேறு எந்த வலியும் உடலில் ஏற்படாமல் இருக்கும்.

கால்சியம் உணவுகள்
கால்சியம் நிறைந்த உணவுகள் முதுகு வலியைக் குறைக்கும். முதுகு வலியானது கால்சியம் உணவை போதுமான அளவு உண்ணாமல் இருப்பதாலும் வரலாம். எனவே கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான அவகேடோ, காய்கறிகளான ப்ராக்கோலி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

இஞ்சி
இந்த அற்புதமான வேர் முதுகிற்கு மிகவும் நல்லது. மேலும் இது கை, கால் அசைவில் உள்ள பிரச்சனையை சரிசெய்வதோடு, குமட்டலையும் தடுக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், முதுகு வலியை எதிர்த்துப் போராடுவதோடு, தொடர்ந்து அன்றாடம் எடுத்தால், முதுகு வலி எப்போதுமே வராமல் இருக்கும். மேலும் இஞ்சி செரிமானத்தை எளிதாக்கும்.

சால்மன்
சால்மன் மீனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. சால்மன் மீனை சாப்பிட்டால், தசைகள் நன்கு வளர்ச்சி பெறும். அதுமட்டுமின்றி, தசைகளில் உள்ள காயங்கள் மற்றும் பிரச்சனைகளைப் போக்கும். மேலும் சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது குளிரினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும். மேலும் இது சுவாச தொற்றுக்களையும் சரிசெய்யும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மனித உடலுக்கு பலவாறு நன்மை அளிப்பதோடு, பல்வேறு தீவிர நோய்களின் தாக்கத்தையும் தடுக்கும்.

சோயா
முதுகு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் சோயாவை அன்றாட உணவில் சேர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் சோயா புரோட்டீனை தினமும் உட்கொண்டால், அனைத்து வகையான முதுகு மற்றும் மூட்டு வலியும் குறையும்.

மஞ்சள்
மஞ்சள் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், முதுகு வலியைக் குறைக்கும் அற்புதமான பொருள். இந்த பொருளில் உள்ள புரோட்டீனான NF-kB, அழற்சி எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தி, மூட்டுக்களில் வலி ஏற்படுவதைக் குறைக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதோடு, முக்கியமாக உடற்பயிற்சி செய்வதையும் மறக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications