For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உங்கள் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக்க இத சாப்பிட்டா போதும்...!

ஆரோக்கியமான காய்கறிகள் என்று வரும்போது அதில் பீன்ஸ்க்கு எப்போதும் முக்கிய இடம் உள்ளது. பீன்ஸில் மொத்தம் பல வகைகள் உள்ளது.

|

ஆரோக்கியமான உணவு என்பது ஆரோக்கியமான உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் ஆரோக்கிய உணவுகளை பற்றி அனைத்தும் அறிந்திருந்தாலும் எல்லோரும் ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவதில்லை. குறிப்பாக, காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடும்போது, அவற்றைத் தவிர்ப்பதற்கு காரணங்களை மட்டுமே நாம் தேடுகிறோம்.

How Eating Beans Can Improve Your Metabolism?

ஆரோக்கியமான காய்கறிகள் என்று வரும்போது அதில் பீன்ஸ்க்கு எப்போதும் முக்கிய இடம் உள்ளது. பீன்ஸில் மொத்தம் பல வகைகள் உள்ளது, ஒவ்வொன்றையும் நாம் வெவ்வேறு வடிவங்களில், சுவைகளில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பீன்ஸ் நம்முடைய வளர்சிதை மாற்றத்தை எப்படி ஊக்குவிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீன்ஸின் நன்மைகள்

பீன்ஸின் நன்மைகள்

பீன்ஸ் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள், ஃபைபர், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை முக்கியமாக நுகரப்படுகின்றன. இந்த மைக்ரோ ஊட்டச்சத்துக்களின் குறைபாடு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பீன்ஸ் புரதங்களின் ஒரு நல்ல மூலமாகும், மேலும் அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் அறியப்படுகின்றன. நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான ஆறு வகை பீன்ஸ்கள் உள்ளது.

சுண்டல்

சுண்டல்

நாம் பெரும்பாலும் சாப்பிடும் பீன்ஸ் வகை என்றால் அது சுண்டல்தான். அவை ஏராளமான புரதம் மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் எடையைக் குறைக்கவும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இதன் பங்கு முக்கியமானது.

கிட்னி பீன்ஸ்

கிட்னி பீன்ஸ்

கிட்னி பீன்ஸ் பெரும்பாலும் மற்ற உணவுப்பொருட்களுடன் சேர்த்தே உண்ணப்படுகிறது. பெரும்பாலும் அரிசியுடன் சாப்பிடுவதால், சிறுநீரக பீன்ஸ் நார்ச்சத்து நிறைந்த மூலமாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் அவை உதவுகின்றன. அவை எடையைக் குறைக்கவும் உதவக்கூடும்.

MOST READ: 50 வயதிற்கு பிறகும் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸ்

இந்த வகை பீன்ஸ் ஃபோலேட் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். எலும்பு மஜ்ஜையில் சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் உருவாக ஃபோலேட் உதவுகிறது. டி.என்.ஏ உற்பத்திக்கும் இது அவசியமான ஒன்றாகும்.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ்

புரதத்தின் சிறந்த ஆதாரமான சோயாபீன்ஸ் உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு. டோஃபு போன்றவற்றை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது அதன் தயாரிப்புகளில் ஒன்றிலோ உட்கொள்ளலாம். அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கின்றன.

பிண்டோ பீன்ஸ்

பிண்டோ பீன்ஸ்

இவை இரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கியப்பங்கை வகிக்கிறது. மேலும் உணவை உட்கொண்ட பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. மேலும் இவற்றில் அதிக அளவு புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.

MOST READ: தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!

நேவி பீன்ஸ்

நேவி பீன்ஸ்

இது மிகவும் அரிதான பீன்ஸ் வகையாகும். பீன்ஸ் வைட்டமின் பி, தாதுக்கள் மற்றும் நார்சத்துக்களின் வளமான மூலமாகும். அவை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Eating Beans Can Improve Your Metabolism?

Read to know how eating beans can improve your metabolism.
Story first published: Friday, January 29, 2021, 15:10 [IST]
Desktop Bottom Promotion