Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
தினமும் ஒரு ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா?
பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு வகையான வாழைப்பழம் தான் ஏலக்கி வாழைப்பழம். ஏலக்கி வாழைப்பழம் மிகச்சிறிய அளவில் 3-4 இன்ச் நீளத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த பழம் மிகவும் இனிப்பாக இருக்கும்.
Yelakki Banana Health Benefits: பழங்களில் எளிதில் மற்றும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு வகையான வாழைப்பழம் தான் ஏலக்கி வாழைப்பழம்.

இந்த வாழைப்பழம் மிகச்சிறிய அளவில் 3-4 இன்ச் நீளத்தில் தான் இருக்கும். இரண்டு கடியிலேயே காலியாகிவிடும். ஆனால் இந்த பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இதுவரை நீங்கள் இந்த ஏலக்கி வாழைப்பழத்தை அதன் உண்மையான நன்மைகளைப் பற்றி அறியாமலேயே சாப்பிட்டிருந்தால், இன்று அந்த ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. உடல் சோர்வை போக்கும்
ஏலக்கி வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் உள்ளது. எனவே இந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால், அது உடல் சோர்வைப் போக்கி, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி, உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.

2. மன இறுக்கத்தை குறைக்கும்
ஒருவரின் சந்தோஷமான மனநிலைக்கு காரணம் உடலில் உள்ள செரடோனின் என்னும் ஹார்மோன் தான். ஏலக்கி வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் ஒரு வகையான புரோட்டீன் உள்ளது. இந்த புரோட்டீன் உடலினுள் செல்லும் போது, மனநிலையை மேம்படுத்தும் செரடோனினான மாற்றமடைகிறது. எனவே நீங்கள் ஒருவித மனஇறுக்கத்துடன் இருந்தால், ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

3. குழந்தைகளுக்கு நல்ல உணவு
வாழைப்பழங்களிலேயே ஏலக்கி வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற வாழைப்பழமாகும். ஏனெனில் இந்த வாழைப்பழத்தில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலும், ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. முக்கியமாக ஏலக்கி வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இந்த வாழைப்பழமானது குழந்தைகளின் ஒரு நாளைக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களுள் 30% வழங்குகிறது.

4. இரத்த அழுத்தத்தை சீராக்கும்
தற்போது இரத்த அழுத்த பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. இந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மருந்து மாத்திரைகளுடன், உணவுகளும் உதவிபுரியும். அப்படிப்பட்ட ஓர் உணவுப் பொருள் தான் ஏலக்கி வாழைப்பழம். இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகளவிலும், சோடியம் குறைவான அளவிலும் இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏலக்கி வாழைப்பழம் மிகவும் நல்லது.

5. எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம்
எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு சத்துக்களும் அவசியம். இவை இரண்டுமே ஏலக்கி வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே உங்களுக்கு எலும்பு பிரச்சனைகள் மற்றும் பற்களில் பிரச்சனைகள் வரக்கூடாது என்று விரும்பினால், ஏலக்கி வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.

6. அல்சருக்கு நல்லது
இன்று பலரும் அலசர் பிரச்சனையைக் கொண்டுள்ளார்கள். ஆனால் ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் அல்சர் பிரச்சனையை தடுக்கலாம். ஏனெனில் அதில் புரோட்டீஸ் தடுப்பான்கள் உள்ளன. இவை வயிற்றின் சுவர் தடிமனாவதை ஊக்குவித்து, புண்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. மேலும் இந்த வாழைப்பழம் இரைப்பை புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

7. மலச்சிக்கலை போக்கும்
நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா என்று பலரும் ஏங்குவதுண்டு. அத்தகையவர்களுக்கு ஏலக்கி வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இது அஜீரண பிரச்சனையைப் போக்குவதோடு, மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கும்.

8. நினைவாற்றல் மேம்படும்
உங்களுக்கு ஞாபக மறதி அதிகம் ஏற்படுவதாக உணர்கிறீர்களா? அப்படியானால் தினமும் ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிடுவதால், அது மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவி புரிகிறது. மூளையில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், ஆக்ஸிஜன் மூளைக்கு திறம்பட சென்றடைகிறது. இதன் விளைவாக நினைவாற்றல் மேம்படும்.

9. இரத்த சோகையை தடுக்கும்
ஏலக்கி வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. இது தவிர இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் ஹீமோகுளோபின் அளவை நேரடியாக பாதித்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவி புரிந்து, இரத்த சோகையை சரிசெய்கிறது.

10. கண்களுக்கு நல்லது
ஏலக்கி வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்தாகும். கண் மருத்துவ குழுக்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், ஏலக்கி வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்ததில், வயதான காலத்தில் சந்திக்கும் கண் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது தெரிய வந்தது.



Click it and Unblock the Notifications











