காலையில் வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமானால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

காலையில் எழுந்ததும் காபி/டீ குடித்துவிட்டு, நேரடியாக காலை உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டவரா? என்ன தான் காலை உணவை தினமும் தவறாமல் சாப்பிட்டாலும், மந்தமாகவே உணர்கிறீர்களா? அதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? இல்லாவிட்டால், இன்று அதற்கான விடையை இக்கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Foods You Should Eat On An Empty Stomach

பொதுவாக இரவு தூங்கி காலையில் எழுந்த பின் உள்ளுறுப்புக்கள் திறம்பட செயல்படுவதற்கு சிறிது நேரம் ஆகும். ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் இதுக்குறித்து கூறுவதாவது, "ஒருவர் காலையில் எழுந்ததும் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிட ஸ்நாக்ஸ் போன்று ஏதாவது சாப்பிட வேண்டும். மேலும் காலையில் எழுந்த பின் குறைந்தது இரண்டு மணிநேரம் கழித்து தான் காலை உணவை உண்ண வேண்டும்."

ஆகவே நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமானால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த உணவுகளை உண்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே காலை உணவிற்கு முன் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊற வைத்த பாதாம்

ஊற வைத்த பாதாம்

பாதாமில் மாங்கனீசு, வைட்டமின் ஈ, புரோட்டீன், நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இருப்பினும், பாதாமை ஒருவர் தவறான வழியில் உட்கொண்டால், இந்த சத்துக்கள் அனைத்தையும் பெற முடியாது. எப்போதுமே பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும். அதுவும் பாதாமை தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். ஏனெனில் பாதாமின் தோலில் தான் டானின்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தும். ஆகவே பாதாமை நீரில் ஊற வைத்தால், எளிதில் அதன் தோல் வந்துவிடும்.

வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன்

வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன்

தேனில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தேவையான நொதிகள் உள்ளன. தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடலில் உள்ள டாக்ஸின்கள் எளிதில் வெளியேற்றப்பட்டு, உடலின் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்பட்டு, உடலுக்கு ஒருவித ஆற்றல் கிடைக்கும்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல் ஜூஸ்

முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் அருகம்புல் ஜூஸைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் என்னவோ அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழ முடிந்தது. அருகம்புல் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, செரிமான உறுப்புக்களின் செயல்பாடு மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படும். அதோடு இது சில இரைப்பை குடல் பிரச்சனைகள் மற்றும் அதிகப்படியான அமில சுரப்பு போன்றவற்றையும் சரிசெய்யும். அருகம்புல்லில் உள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சையில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிக அளவில் உள்து. பாதாமைப் போன்று உலர் திராட்சையையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறலாம். அதோடு உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளதால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உடல் தயாராகும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் மற்றும் இனிப்பு பொருட்களின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். உலர் திராட்சை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அமிலங்களை நடுநிலையாக்குகிறது.

பப்பாளி

பப்பாளி

உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும், குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ளவும், பப்பாளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான் சிறந்த வழி. அதோடு இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கும் சக்தியையும் கொண்டது. ஆகவே காலையில் எழுந்ததும் பப்பாளியை சாப்பிட்டால், 45 நிமிடம் கழித்து காலை உணவை சாப்பிடுங்கள்.

தர்பூசணி

தர்பூசணி

90 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட தர்பூசணியில், எலக்ட்ரோலைட்டுகள் முழுமையாக நிறைந்தது. ஒருவர் இதனை காலையில் எழுந்ததும் உட்கொண்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு, இனிப்புக்களின் மீதுள்ள ஆர்வம் தணியும். மேலும் ஒரு கப் தர்பூசணியில் 40 கலோரிகளே உள்ளன. மேலும் இதில் இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லைகோபைன் அதிக அளவில் நிறைந்துள்ளது.

சியா விதைகள்

சியா விதைகள்

இந்த சிறிய விதைகளில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை முழுமையாக நிறைந்துள்ளது. சியா விதைகளை சாப்பிடும் சிறந்த வழி என்றால், விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து உண்பது தான். சியா விதைகளுக்கு வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும் திறன் உள்ளது. இதனால் இது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். இந்த விதைகள் நீரில் ஊறும் போது, செரிமான அமைப்பில் விரைவாக செல்வதற்கு ஜெலட்டினஸ் பூச்சு ஒன்றை உருவாக்குகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion