Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்களுக்கு ரொம்ப சோம்பலா இருக்கா? அப்ப இந்த உணவுகளை தினமும் காலையில சாப்பிடுங்க...
நீங்கள் குளிர்காலத்தில் கடுமையான சோம்பலை உணர்ந்தால், ஒருசில உணவுகளை அன்றாடம் காலை வேளையில் உட்கொள்ளுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, உடலும் மனமும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
தற்போது குளிர்காலம் என்பதால் நிறைய பேர் மிகுந்த சோம்பலை உணர்வார்கள். காலையில் எழுந்திரிக்க கூட முடியாமல் பலர் கஷ்டப்படுவதுண்டு. சிலர் நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருப்பதை உணர்வார்கள். இதற்கு காரணம் காலநிலை தான். பருவகாலங்களிலேயே குளிர்காலத்தில் தான் நோயெதிர்ப்பு சக்தியும், உடலின் ஆற்றல் மட்டமும் சற்று பலவீனமாக இருக்கும். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக நீங்கள் குளிர்காலத்தில் கடுமையான சோம்பலை உணர்ந்தால், ஒருசில உணவுகளை அன்றாடம் காலை வேளையில் உட்கொள்ளுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, உடலும் மனமும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். சரி, எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். கீழே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தினமும் தவறாமல் சாப்பிடுங்கள். குறிப்பாக இந்த உணவுகளை காலை உணவாக உட்கொள்வது மிகவும் நல்லது.

அவகேடோ
அவகேடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தில் லுடீன் எனும் பொருள் வளமான அளவில் நிறைந்துள்ளது. இது தவிர இப்பழத்தில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நாள் முழுவதும் உடலில் ஆற்றலை தக்க வைக்க உதவுகின்றன. அதோடு இப்பழத்தில் நல்ல கொழுப்புக்கள் உள்ளதால், அவை உடலின் ஆற்றல் அளவுகளை அதிகரிக்கும். எனவே அவகேடோ பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து காலை வேளையில் குடியுங்கள்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. இது மனச்சோர்வைக் குறைப்பதோடு, மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது. இந்த டார்க் சாக்லேட்டை குளிர்காலத்தில் மட்டுமின்றி, எப்போது சோம்பேறித்தனமாக இருப்பதை உணரும் போதும் ஒரு துண்டு சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்.

முட்டை
உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை உள்ளடக்கிய ஒரு பொருள் தான் முட்டை. இந்த முட்டையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக முட்டையை சாப்பிடுவதால், நினைவாற்றல் கூர்மையாகும் மற்றும் உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும். எனவே குளிர்காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க நினைத்தால், காலையில் முட்டையை வேக வைத்து சாப்பிடுங்கள்.

பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகள் மூளைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக குடைமிளகாய், காலிஃப்ளவர், பச்சை பீன்ஸ், ப்ராக்கோலி போன்றவற்றை குளிர்காலத்தில் அதிகமாக உட்கொண்டு வந்தால், சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். முக்கியமாக கீரைகளில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது. இவை மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் உங்கள் உடல் சோர்வை நீக்க, பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலினுள் செல்லும் பேது நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றமடைந்து, உடலுக்கு ஸ்டாமினாவை வழங்குவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அதற்கு பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம் அல்லது அவற்றை அரைத்து சாறு எடுத்தும் குடிக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் குளிர்காலத்தில் சந்திக்கும் சோம்பலை நீக்க உதவுவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் வழங்குகின்றன. எனவே இந்த உணவுகளை குளிர்காலத்தில் உட்கொண்டு சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications