For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க, இந்த உணவுகள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?

|

கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழலில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியம் என மருத்துவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவருமே வலியுறுத்தி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி தொடர்ந்து செய்வதோடு, உண்ணும் உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

பொதுவாக வைட்டமின் சி என்றவுடன், புளிப்பு சுவையுள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால், புளிப்பு சுவை இல்லாமல் வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுகளும் நிறைய இருக்கின்றன. புளிப்பு சுவை இருந்தால் தான் வைட்டமின் சி இருக்கும் என்றெல்லாம் இல்லை.

MOST READ: தைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் எவையென்று தெரியுமா?

அந்த வகையில் இப்போது, சிட்ரிக் அமிலம் இல்லாத, ஆனால் வைட்டமின் சி நிறைந்த 5 உணவுப் பொருட்களை பற்றி தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்காமலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் சி

வைட்டமின் சி

ஜப்பானின் தேசிய புற்றுநோய் மைய ஆராய்ச்சி நிறுவனம் கிழக்கு நடத்திய ஆய்வில், வைட்டமின் சி அதிகமாக உட்கொண்ட ஒரு மனிதனின் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் அளவு 30% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இது உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. எனவே, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை ஒவ்வொருவரும் தங்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. கொய்யப்பழத்தின் இனிப்பிற்கு இது தான் காரணமும் கூட. எவரொருவர் கொய்யப்பழத்தை தொடரந்து சாப்பிட்டு வருகிறாரோ, அவரது உடலில் கொழுப்பு குறைவதோடு, இரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கிய இதயத்தை பெறுகின்றனர். மேலும், இதிலுள்ள அஸ்கார்பின் அமிலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

அரை கப் அளவு வேகவைத்த ப்ராக்கோலி சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்கு தேவையான 50 மி.கி. வைட்டமின் சி கிடைத்திடுகிறது. மேலும், இது ஒன்றும் புளிப்பு சுவை கொண்டதல்ல. ப்ராக்கோலியில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து என ஏராளமான சத்துக்கள் மறைந்துள்ளன. இதிலுள்ள வைட்டமின் சி, எலும்பு மற்றும் திசுக்களுக்கு தேவையான கொலாஜனை வழங்கிடுகிறது. அதே சமயம், இது உடலில் ஏற்பட்ட காயங்களை விரைவில் சரி செய்திட உதவும். வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். மேலும், இது உடலை நோய் தொற்றில் தடுத்திட உதவக்கூடியது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

சிவப்பு நிறத்தில் கண்ணை கவரும் வகையில் இருக்கக்கூடிய ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி தவிர ஃப்ளேவோனாய்டுகள், மாங்கனீசு மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் இவற்றில் அதிகம் உள்ளன. அமெரிக்காவில் ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தினசரி ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொள்வதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்திடவும் உதவுகிறது.

பப்பாளி

பப்பாளி

பப்பாளி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு 87 மி.கி வைட்டமின் சி கிடைக்கிறது. ஒரு ஆய்வின் அடிப்படையில், இது அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கக்கூடியதாகும். இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் பதற்றத்தை குறைத்திட உதவுவதோடு, உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பையும் குறைத்திடுகிறது. பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. அவை இதய தமனிகளில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது. மேலும், இது அதிகப்படியான உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. பப்பாளி, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் அதே சமயத்தில், நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கக்கூடியது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழக்கு பொதுவாகவே வைட்டமின் சி சத்தின் சிறந்த மூலமாகும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதோடு, உடலில் செல் சேதத்தையும் தடுக்கிறது. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 6 போன்ற சத்துக்களும் உள்ளன. இது கொழுப்பைக் குறைக்க உதவுவதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus Prevention Diet: Get Your Vitamin C Dose With These Non-Citrus Foods

Do you know that there are a lot of fruits & vegetables that contain Vitamin C. You may add these non-citrusy foods to your diet.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more