For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த கலர் காய்கறி, பழங்களில் என்னென்ன அற்புத சத்துக்கள் இருக்கு? தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க

|

வானவில் என்றும் பழையதாவது இல்லை, அதனால் நீங்கள் ஏன் அவ்வாறு இருக்க முடியாது? இந்த இயற்கை நிகழ்வில், உங்கள் ஊட்டச்சத்து பற்றி கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

வண்ணமயமான பழங்களிலும் காய்கறிகளிலும் அதிகமான உணவு தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பயோபிளவனாய்டுகள் மற்றும் சமச்சீரான உணவை ஆதரிக்கும் பிற ஊட்டச்சத்துகள் ஆகியவை நிறைந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளன.

உங்கள் உணவின் ரெயின்போ நிறங்களை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், என்ன சாப்பிடுவது / தவிர்க்க வேண்டியது எனக் கண்டுபிடிப்பது மிக எளிது. இதோ இங்கே ஒரு எளிமையான, சுலபமான வழிகாட்டி உங்களுக்காக ,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊதா & நீலம்

ஊதா & நீலம்

ஜாமுன் (இந்தியன் பிளம்), டாம்சன் பிளம்ஸ், பீட், ஊதா திராட்சை மற்றும் ஊதா முட்டைக்கோசு போன்ற நீல / ஊதா நிறமிகளை உள்ளடக்கிய உணவுகள் அனைத்தும் உங்கள் உடலை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்ஸ்களிடமிருந்து (உயிரணுக்களை சேதப்படுத்தி நோய் மற்றும் வயதான தோற்றத்தை உங்களுக்கு வழங்கும் அணுக்கள் ) பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. உங்கள் உடலியல் இயந்திரம் சுலபமாக இயங்க உதவுகின்றன.

MOST READ: இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா?

பச்சை

பச்சை

பச்சை நிறத்தாவரங்களில் காணப்படும் குளோரோஃபில் நிறமி கேன்சர் எதிர்ப்பு மற்றும் நச்சு நீக்கும் குணங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, க்ளோரோஃபில் நிறமி நிறைந்த பச்சை இலைகளில் கரோட்டினாய்டுகள், பயோபிளவனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் ஆர்கானிக் கனிம வளங்கள் அதிகமாக உள்ளன. சுருக்கமாக, ஒரு ஆரோக்கியமான, நீண்ட வாழ்க்கைக்கு சிறந்த ஒரு மருந்து!

மஞ்சள் & ஆரஞ்சு

மஞ்சள் & ஆரஞ்சு

இந்த நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் முதன்மையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளன . ஆரஞ்சு நிற உணவுகளான கேரட், பம்ப்கின்ஸ், மஞ்சள் காப்சிகம்ஸ் , மாங்காய்கள் , பாப்பாளி மற்றும் கேப் கூஸ் பெரீஸ் (வட இந்தியாவில் ரஸ் பரி) போன்றவை உங்களுக்குத் தேவையானது மற்றும் சிறந்தது.

MOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...

சிவப்பு

சிவப்பு

இயற்கை உணவுகளில் சிவப்பு நிறம் லிகோபின்களிலிருந்து வருகிறது. இவை இதய நோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அவை திசு சீரழிவுகளையும் தடுக்கின்றன. தக்காளி, தர்பூசணிகள், இளஞ்சிவப்பு திராட்சை பழம், வாதுமை பழம் மற்றும் இளஞ்சிவப்பு கொய்யாக்கள் ஆகியவை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படவேண்டியவை. சமைக்கப்பட்ட தக்காளி பொருட்கள் கூட நன்மை பயக்கின்றன ( சூடு படுத்தும் பொழுது இவை லிகோபீனை நன்கு உறிஞ்சுகின்றன) எனவே தக்காளி சாஸ், தக்காளி பேஸ்ட் மற்றும் தக்காளி கூழ் கூட நல்லதே.

MOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா?

வெண்மையைத் தவிருங்கள்

வெண்மையைத் தவிருங்கள்

ஒரு வானவில் வெண்மை நிறத்தைக் கொண்டிருக்காது, அதே போல உங்கள் உணவிலும் கூட அது அதிகமானதாக இருக்காது! இந்த வெளிறிய நிறம் நிறைந்த வெள்ளை மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டும். மிகவும் எளிமையான கார்போஹைட்ரேட்டுகளின் முக்கிய கூறு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை, இது உங்கள் செரிமான அமைப்புக்கு ஆரோக்கியமற்றது மற்றும் விரைவாக பாதிப்பை உருவாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why eating a rainbow of foods will make you healthier

Leafy green vegetables like kale and spinach are nutritional heavy hitters, but there are other brightly coloured foods that are equally important for optimum health. Vibrant red, blue, purple, orange and yellow fruit and vegetables deserve your mealtime attention too.
Story first published: Friday, February 1, 2019, 17:20 [IST]