Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா? இந்த பாலை தினமும் குடிங்க...!
நமது முன்னோர்கள் பெரும்பாலும் பாலை கொதிக்க வைக்காமல் பச்சையாகத்தான் குடித்தார்கள். அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய உணவுகளில் மிகவும் முக்கியமானது பால் ஆகும். பால் பற்றிய குறிப்புகளும் அது வழங்கும் நன்மைகள் பற்றியும் பல நூறாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. நமது ஆரோக்கிய வாழ்விற்கு பாலை விட சிறந்த மற்றும் முக்கியமான பொருள் எதுவுமில்லை.

நமது முன்னோர்கள் பெரும்பாலும் பாலை கொதிக்க வைக்காமல் பச்சையாகத்தான் குடித்தார்கள். அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆடு, மாடு என பால் தரும் அனைத்து மிருகங்களின் பாலும் இப்பொழுது பதப்படுத்தல் முறைக்கு ஆளாகிறது. இதனால் நாம் பல சத்துக்களை இழக்கிறோம் என்பதே உண்மை. பாலை பச்சையாக குடிப்பதால் சில பாதிப்புகளும் ஏற்படலாம். இந்த பதிவில் பாலை பச்சையாக குடிப்பது நல்லதா இல்லை கெட்டதா என்று பார்க்கலாம்.

பால்
உலகில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான ஆரோக்கிய பொருளாக பால் உள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் அதன் மருத்துவ குணங்களும் தான். ஒருவரின் அடிப்படை ஆரோக்கியத்திற்கும், உடலமைப்பிற்கும் பால் மிகவும் அவசியமானது. அதனால்தான் பால் குழந்தை பருவத்தில் இருந்தே கொடுக்கப்படுகிறது. பாலில் புரோட்டின்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

பதப்படுத்தும் முறை
பாலை பதப்படுத்தும் முறை 1900 களில் தான் தொடங்கப்பட்டது. இந்த முறையின் மூலம் அதிக நாட்கள் கெடாமலும், பல ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்யவும் உறுதி செய்யப்பட்டது. பாலை பச்சையாக குடிப்பதால் நல்லது மற்றும் கெட்டது இரண்டுமே ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட பாலை குடிப்பது அலர்ஜிகள், இதய நோய் முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும்.

பச்சை பால்
புல்லை உண்ணும் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் சுத்தமான பச்சை பால் ஆரோக்கியமான அமினோ அமிலங்களையும், என்சைம்களையும் கொண்டுள்ளது. இது பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் பாலை பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது. பசு வளர்க்கப்படும் விதம், அது எடுத்துக்கொள்ளும் உணவுகள், அதனிடமிருந்து பால் எவ்வாறு பெறப்படுகிறது என்பதை பொறுத்து அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

பயன்கள்
கால்சியம் அதிகம் இருக்கும் பொருட்களில் பால் மிகவும் முக்கியமானதாகும். பச்சை பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவு பதப்படுத்தப்பட்ட பாலில் இருப்பதை விட அதிகமாகும். நமது எலும்புகளும், பற்களும் பலமாக இருக்க கால்சியம் மிகவும் முக்கியமானதாகும். மேலும் பதப்படுத்தபட்ட பாலை விட பச்சை பாலை நமது உடல் எளிதில் ஏற்றுக்கொள்ளும்.

எடை குறைப்பு
நீங்கள் எடை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்களுக்கு பச்சை பால் நல்ல தீர்வாக இருக்கும். உண்மைதான் பச்சை பால் உங்களின் எடை அதிகரிப்பதையும், உடல் பருமனையும் கட்டுப்பட்டிருக்குள் வைத்துக்கொள்ள உதவும். இதில் அதிகமாக இருக்கும் புரோட்டின் உங்களின் பசியை நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

பெண்களுக்கான பலன்கள்
பெண்களை பொறுத்தவரையில் பச்சை பால் சிறந்த ஈர்ப்பதமூட்டியாக செயல்படுகிறது. குளிர் காலங்களில் உங்கள் சருமத்தை மென்மையானதாக மாற்ற இது உதவும். உங்கள் சரும பாதுகாப்பு பொருட்களில் அதிக பச்சை பாலை சேர்த்து கொள்வது உங்களுக்கு பொலிவான ஒளிரும் சருமத்தை வழங்கும்.

புற்றுநோய்
புல் உண்ணும் விலங்குகளிடமிருந்து வரும் பால் சி.எல்.ஏ எனப்படும் கொழுப்பு கலவை நிறைந்திருக்கிறது, இது ஒருங்கிணைந்த லினோலிக் அமிலத்தின் சுருக்கமாகும். சி.எல்.ஏ அதை உட்கொள்பவர்களுக்கு சாதகமான விளைவுகளை வழங்குகிறது. குறிப்பாக இது புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடியது. குறிப்பாக மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் எலும்பு புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடும்.

பக்க விளைவுகள்
சிலருக்கு பச்சை பால் குடித்தவுடன் உடல்நல கோளாறுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை குடிப்பதை நிறுத்தி விடுங்கள். குறுகிய காலகட்டத்தில் அதிக பாலை குடிக்கக்கூடாது. அளவோடுதான் குடிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பச்சை பாலை குடிப்பதற்கு முன் மருத்வவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.



Click it and Unblock the Notifications