For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?

சிக்கன் சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியதாகும். ஏனெனில் நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் சிக்கனிலிருந்து கிடைக்கிறது.

|

உலகில் அசைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை சைவ உணவு சாப்பிடுகிறவர்களை விட மிகவும் அதிகமாகும். அசைவ உணவு என்றாலே அனைவரின் நினைவிலும் முதலில் வந்து நிற்பது சிக்கன்தான். அதற்கு காரணம் அதன் சுவையும், விலையும்தான். உலகில் அதிகமானோரால் உண்ணப்படும் அசைவ உணவும் சிக்கன்தான்.

Is it healthy to eat chicken daily?

சிக்கன் சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியதாகும். ஏனெனில் நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் சிக்கனிலிருந்து கிடைக்கிறது. தினமும் சிக்கன் சாப்பிடுகிறவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு சந்தேகம் சிக்கன் அதிகம் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துமா என்பதுதான். இந்த பதிவில் அதிக சிக்கன் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துமா என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிக்கன் பற்றிய சந்தேகம்

சிக்கன் பற்றிய சந்தேகம்

சிக்கன் அதிகம் சாப்பிடுவது ஆபத்து என்பது சந்தேகத்தையும் தாண்டி நம்பிக்கையாகவே மாறிவிட்டது. ஆனால் இது முற்றிலுமாக உண்மையல்ல. ஏனெனில் எந்த முறையில் சமைக்கிறோம் என்பதை பொறுத்துதான் அதன் விளைவுகள் கணிக்கப்படும். சிக்கனை பொறுத்த வரை அதிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெற அதை க்ரில் அல்லது ரோஸ்ட் முறையில் செய்து சாப்பிட வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி 100 கிராம் சிக்கனில் 124 கலோரிகளும், 20 கிராம் புரோட்டினும், 3 கிராம் கொழுப்பும் உள்ளது. போதுமான அளவு கலோரிகளும், புரோட்டினும் இருப்பதால்தான் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிக்கன் சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

எவ்வளவு சாப்பிடலாம்?

எவ்வளவு சாப்பிடலாம்?

சிக்கன் சாப்பிடும் அளவானது அவரவர் உடலமைப்பை பொறுத்து மாறுபடுவதாகும். ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரண ஆளாக இருந்து உங்களின் உடல் எடை 65 முதல் 75 கிலோக்குள் இருந்தால் நீங்கள் தினமும் 200 கிராம் சிக்கனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

புரோட்டின்

புரோட்டின்

இது உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றுதான், சிக்கன் புரோட்டின் அதிகம் இருக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது உடல் கட்டமைப்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவுவதோடு நம் உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

MOST READ:இந்த இடங்களில் மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்களாம்...!

 மனஅழுத்தத்தை போக்கும் உணவு

மனஅழுத்தத்தை போக்கும் உணவு

எவ்வளவு மனஅழுத்தத்தில் இருந்தாலும் சிக்கனை பார்த்து விட்டால் அவை அனைத்தும் காணாமல் போய்விடும். சிக்கன் உங்களுக்குள் இருக்கும் மனஇறுக்கத்தை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு உணவாகும். அதற்கு காரணம் அதிலிருக்கும் டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் ஆகும். மேலும் இது உங்கள் மூளையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோனான செரோடோனின் அளவை அதிகரிப்பதால் உங்கள் மனநிலையை எளிதில் மாற்றிவிடும்.

நோய்க்கு எதிராக போராடும்

நோய்க்கு எதிராக போராடும்

சிக்கனில் செலீனியம் என்னும் பொருள் அதிகமுள்ளது. இது மிகவும் வலிமையான ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும், இது பல நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாகும். குறிப்பாக வீக்கம், கார்டியோ பிரச்சினை மற்றும் நரம்பியல் கோளாறுகளை குணப்படுத்தும். மேலும் இது செல்களை சிதைவடைவதில் இருந்து பாதுகாக்கிறது.

 கொழுப்பு அளவு

கொழுப்பு அளவு

சிக்கனில் வைட்டமின் பி3 அதிகமுள்ளது மேலும் இது கார்போஹைட்ரேட்டை ஆற்றலாக மாற்றக்கூடியதாகும். இதனால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுவதால் இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

வளர்ச்சிதை மாற்றம்

வளர்ச்சிதை மாற்றம்

வைட்டமின் பி6 அதிகமிருப்பதால் சிக்கன் உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடும், மேலும் இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

MOST READ:ஆண்களே! இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் காதலில் விட்டுக்கொடுத்து போவார்களாம் பாத்துக்கோங்க

தினமும் சாப்பிடலாமா?

தினமும் சாப்பிடலாமா?

அளவிற்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் ஆபத்துதான். இது சிக்கனுக்கு பொருந்தும். தினமும் சிக்கன் சாப்பிடுவது தவறல்ல, ஆனால் சாப்பிடும் அளவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சிலருக்கு சிக்கன் சாப்பிடுவது அலர்ஜியை ஏற்படுத்தும் அவர்கள் சிக்கன் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. வாரத்திற்கு மூன்று முறை தாராளமாக சிக்கன் சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is it healthy to eat chicken daily?

Chicken is the widely eaten non veg food around the world. Is it healthy to eat chicken daily?
Story first published: Tuesday, June 11, 2019, 13:31 [IST]
Desktop Bottom Promotion