For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்த இந்த சியா விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

சியா விதைகள் என்பது முக்கியமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளுக்கான பட்டியலில் சியா விதைகள் கண்டிப்பாக இருக்கும்.

|

இன்று உலகளவில் அதிக நபர்களுக்கு இருக்கும் நோய் என்றால் அது சர்க்கரை நோய்தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்வது என்பது மிகவும் கடினமாகும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்க பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் வெகுசில பொருட்கள் மட்டுமே நல்ல பலனை அளிக்கும்.

How Chia seeds can be used in diabetes management

சியா விதைகள் என்பது முக்கியமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளுக்கான பட்டியலில் சியா விதைகள் கண்டிப்பாக இருக்கும். இந்த விதைகள் இவ்வளவு பிரபலமாக இருக்க காரணம் அவற்றின் மருத்துவ குணங்கள்தான். குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது இதன் முக்கியமான மருத்துவ குணமாகும். இந்த பதிவில் சியா விதைகள் எப்படி சர்க்கரை நோயை குறைக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சியா விதைகள்

சியா விதைகள்

உண்ணக்கூடிய விதைகளான சியா விதைகள் மெக்சிகோவில் விளையும் சால்வியா ஹிஸ்பானிகா என்னும் பாலைவன தாவரத்தில் இருந்து கிடைப்பதாகும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சியா விதைகள் மிகவும் அவசியமானதாகும். இதனை நீங்கள் புதிதாக உபயோகிப்பதாக இருக்கலாம் ஆனால் இது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தோற்றம்

தோற்றம்

இதன் மருத்துவ குணங்களால் இதன் தேவை நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாயன்களின் மொழியில் சியா என்பதன் அர்த்தம் வலிமை என்பதாகும். இந்த சிறிய கருப்பு மற்றும் வெள்ளை விதைகள் ஒரு சிறந்த ஆற்றல் அதிகரிப்பானாக பயன்படுத்தப்படுகிறது.

MOST READ: இந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்...இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி...!

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

முழுதானிய வகையை சேர்ந்த இந்த ஆரோக்கிய உணவில் ஒமேகா 3 அமிலம், புரோட்டின், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் கால்சியம் அதிகமுள்ளது. உங்கள் உணவில் சியா விதைகளைச் சேர்ப்பது சிறந்த இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை வழங்க உதவும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

உங்கள் உணவில் சியா விதைகளை சேர்ப்பதால் கிடைக்கும் சிறந்த நன்மை என்ன தெரியுமா? அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட இந்த விதைகள் மிகக்குறைந்த கலோரிகளை வழங்குவதன் மூலம் உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்களை நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் பார்த்து கொள்கிறது. இதன் சிறப்பம்சமே மற்ற விதைகளை போல இதனை நீங்கள் சமைக்க வேண்டிய அவசியமில்லை.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் உங்கள் மருத்துவர் கண்டிப்பாக உங்களை சியா விதைகளை உணவில் சேர்த்து கொள்ள பரிந்துரைப்பார். இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கும். மேலும் அதிலிருக்கும் எதிர் அழற்சி பண்புகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

MOST READ: உங்கள் இதயத்தை பாதுகாக்கும் உலகின் சிறந்த டயட் முறைகள் இதுதான்...!

எப்படி பயன்படுத்த வேண்டும்?

எப்படி பயன்படுத்த வேண்டும்?

பல்விதங்களில் பயன்படக்கூடிய இந்த சியா விதைகளை சர்க்கரை நோயாளிகள் எளிதில் தங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். ஊறவைக்கப்பட்ட சியா விதைகளை காய்கறிகள் மற்றும் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம். அரைத்த சியா விதைகளை கோதுமையுடன் சேர்த்து உணவு சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஓட்ஸில் இதனை சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சியா விதைகள் சேர்க்கப்பட்ட எலுமிச்சை சாறை குடிப்பது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Chia seeds can be used in diabetes management

Do you know Chia seeds can help you to manage diabetes well.
Story first published: Thursday, July 4, 2019, 12:51 [IST]
Desktop Bottom Promotion