For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினம் சாப்பிடற இந்த ஐந்து உணவும் சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல விஷமாக மாறிவிடுமாம்...

உங்களுடைய சருமத்தின் அழகைக் கெடுக்கும் உணவுகள் பற்றிய விளக்கமானதொரு தொகுப்பைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

|

அழகாக இருக்க வேண்டும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளமையாக இருக்க வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் தான். அந்த வகையில் நம் அழகில் அதிக முக்கிய பங்கு வகிப்பது நமது சருமம் மட்டுமே. சருமத்தை ஆரோக்கியமாக வைத்து இருந்தாலே போதும் நாம் அழகாக ஜொலிக்க முடியும். ஆனால் நவீன உணவுப் பழக்க வழக்கங்கள் அதற்கு சாதமாக இருப்பதில்லை. சில தவறான உணவுகளை சாப்பிடும் போது நாம் சீக்கிரமே வயது முதிர்ந்த தோற்றத்தை பெற நேர்கிறது. அப்படி எந்தெந்த உணவுகள் நம் சருமத்திற்கு கேடு விளைவிக்கின்றன என்பது குறித்து தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஃபைன்

காஃபைன்

நீங்கள் காஃபைன் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அது உங்கள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது சீக்கிரமே வயதான தோற்றத்தை கொடுக்க ஆரம்பித்து விடும். அதிகளவில் காஃபைன் எடுக்கும் போது சரும சுருக்கங்கள், சரும கோடுகள் முகத்தில் தெரிய ஆரம்பித்து விடும். எனவே அதிகளவில் தண்ணீர் எடுத்து உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக இளமையாக வைக்க மறக்காதீர்கள்.

MOST READ: கர்ப்பமாக இருக்கும்போது தொண்டையில் வலி வந்தால் என்ன அர்த்தம்? உடனே என்ன செய்யவேண்டும்?

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

அதிகளவு காரம் உங்கள் சருமத்தை பாதிப்படைய செய்து விடும். ஏனெனில் காரமான உணவுகள் உடம்புக்கு சூடு. இதனால் இரத்த குழாய்கள் விரிவடைந்து சரும அழகை கெடுத்து விடும். அதே மாதிரி நிறைய அழற்சியை உண்டாக்கும். எனவே காரமான உணவுகளை எடுக்கும் போது குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உங்கள் உடல் எடையை அதிகளவு பாதிக்க கூடியது. அதிகளவில் சர்க்கரை உணவை எடுத்துக் கொள்ளும் போது நோயெதிர்ப்பு மண்டலம் குறைந்து பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மையை இழக்கிறது. இதனால் முகத்தில் பருக்கள், சரும அழற்சி போன்றவை ஏற்படும். எனவே இனிப்பான பலகாரங்களை தள்ளி வைக்க பாருங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் பாதிக்க கூடியது. இது உங்கள் சிறுநீரகம் மற்றும் மற்ற உடல் உறுப்புகளையும் பாதிப்படைய செய்து விடும். இதனால் நமது சருமமும் போதிய போஷாக்கு கிடைக்காமல் பாதிப்படைந்து விடும். ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு வயதாக ஆரம்பித்து விடும். எனவே ஆல்கஹாலை தவிர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

MOST READ: இப்படி உருளைக்கிழங்குலயே ரோஜா செடி வளர்க்கலாம் தெரியுமா? ரொம்ப ஈஸி... ட்ரை பண்ணிப்பாருங்க

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள்

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள்

நீங்கள் பழ ஜூஸ் தானே என்று கடைகளில் வாங்கி சாப்பிடும் போது அது சருமத்தை பாதிக்கும். இந்த செயற்கை பானங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இது எளிதாக நம் சரும அழகை பாதித்து விடும். சீக்கிரமே வயதாக ஆரம்பித்து விடும். எனவே கூடிய வரை இநத பானங்களை அருந்தாமல் இருங்கள்.

மேற்கண்ட உணவுப் பொருட்களை தவிர்த்து வந்தாலே நாம் நீண்ட காலம் இளமையாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that are toxic for your skin

Acne and other skin conditions can destroy your confidence and leave you feeling helpless when you don’t understand what could be causing it. While the underlying causes of skin conditions are different for each person, there’s one common denominator for everyone, and that’s your diet.
Story first published: Wednesday, March 13, 2019, 12:46 [IST]
Desktop Bottom Promotion