For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விதைய தினமும் கொஞ்சமா சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வராதாம்...

பைன் மரத்தின் காயிலுள்ள விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றிய முழு விவரங்களையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

நட்ஸ்களில் நிறைய வகைகளை பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். பைன் நட்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க இது சாப்பிட சுவையாக இருப்பதோடு நமது உடல் நலத்திற்கும் நன்மை அளிக்க கூடியது.

Pine Nuts for Vibrant

ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவு என்றே இதை சொல்லலாம். இதை நொறுக்கு தீனி போல் சாப்பிட்டு வந்தாலே போதும் ஏராளமான உடல் நல நன்மைகளை நாம் பெற இயலும். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை குறைக்க

உடல் எடை குறைக்க

நீங்கள் உங்கள் உடல் எடையை சிக்கென வைக்க நினைத்தால் பைன் நட்ஸ் சாப்பிடுங்கள். இதன் அதிகப்படியான கொழுப்பை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், கொஞ்சமா எடுத்தாலே போதும் உங்கள் எடை உங்கள் கையில். இதில் உள்ள பைலெனிக் அமிலம் குடலில் சிசிகே என்ற ஹார்மோனை சுரக்கச் செய்து பசியை தடுக்கிறது. சீரண சக்தியை மெதுவாக்கி நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

MOST READ: இந்த வருடம் அமாவாசை எந்தெந்த தேதிகளில் வருகிறது? இதோ ஃபுல் லிஸ்ட் உங்களுக்காக...

இதய நோய்கள்

இதய நோய்கள்

பைன் நட்ஸ் நம் இதய நோய்களுக்கு சிறந்தது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதில் நார்ச்சத்துகள், ஆர்ஜினைன், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை உள்ளன. பைன் நட்ஸில் உள்ள பைலெனிக் அமிலம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது. ஒரு கைப்பிடியளவு பைன் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி பக்கவாதம், இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

ஆற்றல் அதிகரித்தல்

ஆற்றல் அதிகரித்தல்

இதிலுள்ள புரோட்டீன், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மக்னீசியம் நமக்கு இருக்கும் சோர்வை போக்கி நம்மை உற்சாகமாக வைக்க உதவுகிறது. நமது உடலில் உள்ள பாதிப்படைந்த செல்களை ஊக்குவித்து ஆற்றலை அதிகரிக்கிறது.

MOST READ: இந்த 2019 இல் தன் காதலை கண்டுபிடிக்கப் போகும் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள் எது தெரியுமா?

வலிமையான எலும்பிற்கு

வலிமையான எலும்பிற்கு

பைன் நட்ஸில் உள்ள விட்டமின் கே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்கிறது. இவை எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது.

கண் ஆரோக்கியம்

கண் ஆரோக்கியம்

இதிலுள்ள பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நல்ல கண் பார்வையை கொடுக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனி நீங்கள் கண்ணாடி போடும் அவசியம் கூட வராது. காரணம் இதிலுள்ள லுடின் என்ற கண் விட்டமின் நம் பார்வை திறனை மேம்படுத்துகிறது. மாகுலார் டிஜெனரேசன் மற்றும் கண்புரை போன்றவை வராமல் தடுக்கிறது.

MOST READ: இந்த பொண்ணோட மார்பை பார்த்தீங்களா? என்னனு தெரியுதா? இத படிங்க தெரிஞ்சிடும்...

சருமம் மற்றும் கூந்தல்

சருமம் மற்றும் கூந்தல்

பைன் நட்ஸில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தை ஜொலிப்பாக்குகிறது. இதிலுள்ள விட்டமின் ஈ கூந்தல் உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. வறண்ட, பாதிப்படைந்த தலையை சரி செய்து விடுகிறது.

மேற்கண்ட நன்மைகளை பெற தினமும் ஒரு கைப்பிடியளவு பைன் நட்ஸை சாப்பிட்டாலே போதும் ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Wellness Benefits of Pine Nuts for Vibrant Health

here we talked about the Wellness Benefits of Pine Nuts for Vibrant Health.
Story first published: Saturday, January 12, 2019, 15:57 [IST]
Desktop Bottom Promotion