For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெரியாமல் கூட இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு விடாதீர்கள்

|

இயற்கை உணவுகள் எந்த அளவிற்கு ஆரோக்யமானவையோ அதே அளவிற்கு ஆபத்தானவையும் கூட. ஏனெனில் எந்தெந்த உணவுகளை எப்படி சாப்பிட வேண்டுமோ அப்படி சாப்பிட்டால் மட்டுமே அது நமக்கு ஆரோக்கியத்தை தரும். மாறாக தவறான புரிதலால் அவற்றை வேறுவிதமாக சாப்பிடும்போது அது ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும்.

List of Vegetables Should Not Eat Raw

சில உணவுகள் ஆரோக்கியமானவையாக இருந்தாலும் அவற்றை சமைத்து சாப்பிடும்போது மட்டுமே அவற்றில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கும். ஆரோக்கியம் என்ற பெயரில் அவற்றை பச்சையாக சாப்பிடும்போது அவை பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் பச்சையாக சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைகிழங்கு பலருக்கும் பிடித்த ஒரு காயாகும். இதனை பல வழிகளில் நாம் சமைக்கலாம். ஆனால் இதனை சமைக்காமல் பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் உருளைக்கிழங்கில் வாந்தி, குமட்டல், இரைப்பை பிரச்சினைகள் மற்றும் வயிற்றுக்கோளாறு போன்றவற்றை உருவாக்கும் நச்சு பொருட்கள் உள்ளது.

ஆலிவ்

ஆலிவ்

ஆலிவை மரத்திலிருந்து பறித்து பதப்படுத்தாமல் அப்படியே சாப்பிடுவதுமோசமான விளைவுகளை உண்டாக்கும். ஏனெனில் இதில் கடுமையான வயிற்றுக்கோளாறுகளை உண்டாக்கும் ஒலிரோபின் என்னும் கொடிய நச்சுப்பொருள் உள்ளது.

காளான்

காளான்

உலகின் சுவைமிகுந்த உணவுப்பொருட்களில் ஒன்றான காளான் பலரும் விரும்பும் ஒரு உணவாக உள்ளது. சமைக்காத காளானை விட சமைத்த காளானில் அதிகளவு பொட்டாசியம், உள்ளது. சமைக்கப்படாத காளானில் உள்ள நுண்ணுயிரிகள் பல உபாதைகளை ஏற்படுத்தும்.

பால்

பால்

பெரும்பாலான மக்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்ட்ட பாலை பச்சையாக குடிப்பதில்லை. இந்த வகை பால்களில் மோசமான பாக்ட்ரியாக்களான சால்மோனெல்லா, ஈ-கோலி போன்றவை இருக்கும். இவை பல நுண்ணுயிர் நோய்களை ஏற்படுத்தக்கூடும். உணவு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி மற்ற பால் பொருட்களை காட்டிலும் பால் 100 மடங்கு ஆபத்தானதாகும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் வகைகளில் சில, தீங்கிழைக்கும் அமினோ அமிலத்தைக் கொண்டிருக்கின்றன. எனவே அவற்றை சமைக்கும் முன் சுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காய்

சமைக்கப்படாத அல்லது பாதியாக சமைக்கப்பட்ட கத்திரிக்காயில் சொலனைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடல் கால்சியம் உறிஞ்சுவதை தடுக்கிறது. சொலனைன் பல நரம்பியல் மற்றும் வாயுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இதை சாப்பிட சில மணி நேரங்களிலேயே மயக்கம், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படும்.

முட்டை

முட்டை

இது உங்களுக்கு ஆச்சரியாயமானதக இருக்கலாம். ஏனெனில் பல காலமாக முட்டையை பச்சையாக சாப்பிடுவதை ஆரோக்கியம் என நினைத்து கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால் பச்சை முட்டையில் உள்ள சொல்மேனில்ல மற்றும் சில பாக்டீரியாக்கள் பல ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கும்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ப்ரோகோலியில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளது. ஆனால் இவை அனைத்தும் ப்ரோக்கோலியை சமைத்து சாப்பிட்டால் மட்டுமே கிடைக்கக்கூடியது. இதனை பச்சையாக சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும், மேலும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

குச்சிக்கிழங்கு

குச்சிக்கிழங்கு

ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால் " விஷம் ". கிழங்கு வகையை சேர்ந்த இது தென் அமெரிக்காவின் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். இதில் பல ஊட்டச்சத்துக்களும், நார்சத்துக்களும் உள்ளது. ஆனால் இதில் ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கிறது. இதன் இலைகளிலும், தோலிலும் சயனோஜெனிக் கிளைக்கோசைட் என்னும் ஆபத்தான வேதிப்பொருள் உள்ளது. இது அதிகளவு சேர்ந்தால் உயிரிழப்பு வரை கூட ஏற்படலாம்.

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

உங்கள் செரிமான மண்டலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் எப்பொழுதும் இதனை பச்சையாக சாப்பிட முயற்சிக்காதீர்கள். இதனை சமைக்காமல் சாப்பிடும்போது இதில் உள்ள மூலக்கூறுகள் உங்கள் குடலில் பாதிப்புகளை ஏற்படுத்தி வயிற்று பிரச்சினைகளை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of Vegetables Should Not Eat Raw

There are certain foods that we consume raw on a daily basis, such foods make harmful effects on our health. Potato, Mushroom, eggs, milk are some of them.
Story first published: Friday, September 14, 2018, 17:22 [IST]
Desktop Bottom Promotion