Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
உருளைக்கிழங்கில் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதுதானா ?
உருளைக்கிழங்கில் அதிகளவு வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள் என பல சத்துக்கள் உள்ளது. உருளைக்கிழங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
உலகம் முழுவதும் பரவலாக சாப்பிடப்படும் ஒரு காய்கறி என்றால் அது உருளைக்கிழங்குதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வடிவங்களில் உருளைக்கிழங்கை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. உருளைகிழங்கு வெறும் சுவையான காய்கறி மட்டுமல்ல ஆரோக்கியமான காயும் கூட.

உருளைக்கிழங்கில் அதிகளவு வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள் என பல சத்துக்கள் உள்ளது. இதன்மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பல. ஆனால் எதுவும் ஒரு அளவிற்குள் மட்டும்தான் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது உருளைக்கிழங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த பக்கவிளைவுகள் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.

உடல் பருமன்
ஆரோக்கியமான வாழ்வை வாழ விரும்பினால் அதற்கு எடையை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். ஒருவேளை நீங்கள் எடை குறைவாக இருந்தால் தாராளமாக உணவில் உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இதில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது. எடை அதிகமாக இருப்பவர்கள் அதிக உருளைக்கிழங்கு சாப்பிடும்போது அது பல ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கும். இது கலோரிகளை உடனடியாக அதிகரிக்க செய்வதால் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும். இதனை சரியான நேரத்தில் குறைக்கவில்லை என்றால் இதயக்கோளாறுகள், மனஅழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

செரிமானத்திற்கு ஏற்றதல்ல
தொடர்ச்சியாக உணவில் சிறிது உருளைக்கிழங்கு சேர்த்துக்கொள்வது நன்மைதான். அதற்கு காரணம் அதில் இருக்கும் நார்ச்சத்துக்கள். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கங்களை சீராக்குவதோடு உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் உதவும். ஆனால் அதிகளவு நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்திற்கு ஏற்றதல்ல. இதனால் அடிவயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுக்கோளாறு போன்றவை ஏற்படும்.

ஹைபோடென்ஸன்
உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. ஆனால் இரத்தத்தில் அதிகளவு பொட்டசியம் சேர்வது இரத்த அழுத்தத்தை மிகக்குறைந்த அளவிற்கு குறைப்பதோடு ஹைப்போடென்ஸன் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.ஹைப்போடென்ஸன் என்பது உடலில் இரத்த அழுத்தத்தின் அளவு மிகவும் குறைவதாகும். இதனால் சோர்வு, மயக்கம், பார்வைக்கோளாறு, மனஅழுத்தம் போன்றவை ஏற்படும்.

அதிக ஆக்சிஜனேற்றிகள் ஆபத்தானது
உருளைக்கிழங்கில் அதிகளவு ஆக்சிஜனேற்றிகள் உள்ளது. பொதுவாகவே ஆக்சிஜனேற்றிகள் உடலுக்கு நன்மைதர கூடியதுதான். ஆனால் உடலில் அதிகளவு ஆக்சிஜனேற்றிகள் உங்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல
சர்க்கரை நோய் உள்ளவர்களும் சரக்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளவர்களும் உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருப்பது நல்லது. உருளைக்கிழங்கில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளதால் அது இரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் சரக்கரை நோயாளிகளாக இருந்தால் உருளைக்கிழங்கை குறைவான அளவில் சாப்பிடவும்.

சில மருந்துகள்
உருளைக்கிழங்கில் பல சத்துக்கள் உள்ளது. இது நமக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் சில மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இரத்த அழுத்தத்திற்காக மருந்துகள் எடுத்து கொள்பவர்கள் உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடும்போது உங்கள் இரத்த அழுத்தம் மிகவும் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல சர்க்கரை நோய்க்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களும் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது.

கர்ப்பகாலத்தில்
கர்ப்பகாலத்தில் பெண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் நீர்ம உணவுகள் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் கர்ப்பகாலத்தில் சாப்பிடும் உணவுகள் அவர்களை மட்டுமின்றி கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கும். உருளைக்கிழங்கில் உள்ள நச்சு பொருள்களான ஆல்பா-சக்கோனின் மற்றும் ஆல்ஃபா-சோலனைன் போன்றவை குழந்தை மற்றும் தாய் இருவரையுமே பாதிக்கக்கூடியவை.

கொழுப்புகள்
உருளைக்கிழங்கில் கொழுப்புகள் அறவே இல்லை. உருளைக்கிழங்கில் இருக்கும் கொழுப்புகள் அனைத்தும் அவை சமைக்கபடும் எண்ணெயில் இருந்துதான் வருகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.



Click it and Unblock the Notifications
