Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
பழங்காலத்தில் புற்றுநோய் என்பது மிகவும் அரிதானதாகவும், குணப்படுத்த முடியாததாகவும் கருதப்பட்டது. ஆனால், தற்காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை, வயது வரம்பு இல்லாமல் எல்லா வயதினருக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கான தகுந்த மருத்துவமும் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், நமது உணவு பழக்கத்தால் சில வியாதிகள் நமக்கு ஏற்படாமல் தடுக்க முடியும் என்றால் அதனை ஏற்க மறுப்பீர்களா என்ன?. முன்னோர்களின் அறிவுரை படி எப்போதுமே பச்சை காய்கறிகள் நோய் நிவாரணியாக நமக்கு செயல்படுகின்றன. நம் அன்றாட வாழ்வில் சில உணவுப் பொருட்கள் நம்மை புற்றுநோயில் இருந்து முற்றிலும் காக்கும் திறன் கொண்டவை.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் பார்த்து கொண்டாலே புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் ஏற்படாது. அந்த வகையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 10 உணவு பொருட்கள் உடலை புற்றுநோயின் தாக்குதலில் இருந்து காக்க உதவுகிறது. வாருங்கள் அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்...

க்ரீன் டீ
எல்லா க்ரீன் டீ வகைகளையும் இப்படி கூறி விட முடியாது. மட்சா க்ரீன் டீ வகை ஜப்பானின் பாரம்பரிய விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. மட்சாவில் உள்ள கேட்டசின் என்றழைக்கப்படும் பாலிபெனால் கலவை உள்ளது. இந்த கேட்டசின் உள்ள மட்சா க்ரீன் டீ சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் சிறப்பாக செயலாற்ற செய்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாலிபெனால், புற்றுநோய் கட்டிகளை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து உதவுகிறது. இத்தனை உதவிகளையும் ஒரு சிறிய கப் க்ரீன் டீ செய்யும் என்றால், அதனை குடிக்க தயக்கம் ஏன்?.. தாராளமாக குடிக்கலாம்.

பெர்ரி
பிளாக் பெர்ரி, ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற அனைத்து வகை பெர்ரிகளிலும், குறிப்பாக கறுப்பு ராஸ்பெர்ரியில் பிடோநியூட்ரியன்ட்ஸ் மற்றும் எலாஜிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. அதுமட்டுமல்லாது, புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதையும் முற்றிலும் தாமதிக்கிறது. உடலில் உள்ள புற்றுநோய் உருவாக்கும் எதிரி செல்களை அழித்து, கட்டிகள் வளர்வதை தடுக்கிறது. பெர்ரி பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், நுரையீரல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் பாதிப்பை பெரும்பாலும் குறைக்கும். இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பெர்ரி பழங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவும். எந்த பெர்ரி பழத்தை நீங்கள் தேர்வு செய்து சாப்பிட்டாலும் அது சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு காரணியாக செயல்படும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
இந்த சத்துள்ள உணவு பொருட்களை நாம் வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொள்ளும் போது, உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களிடம் இருந்தும் உடலை பாதுகாக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுப்பதோடு, உடலை எல்லாவித பக்கவிளைவுகளிலும் இருந்து காக்கிறது. நரம்பு மண்டலம் மற்றும் செல்களின் வளர்ச்சியிலும் ஒமேகா 3 முக்கிய பங்காற்றுகிறது.

பூண்டு
தேசிய புற்றுநோய் நிறுவனம், சில வகை புற்றுநோய்கள் ஏற்படாமல் பூண்டு குறைப்பதாக ஆய்வுகளின் முடிவின் படி ஒப்புக்கொண்டுள்ளனர். பச்சை பூண்டை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த அற்புத மருந்து, அழற்சியை குறைத்து, புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. பூண்டு சுவாசம் என்பது, உடலுக்கு அற்புத ஆற்றலை அளித்து உடலில் புற்றுநோய் செல்கள் தங்காமல் அழித்துவிடுகிறது. விருப்பமான வகையில் பூண்டை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளும் போது புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் ஏற்படாமல் எளிதில் தடுக்கலாம்.

மைடேக் மற்றும் ஷைடேக் காளான்கள்
குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து உணவு பொருட்களையும் போலவே, இந்த வகை காளான்களிலும் ஏராளமான சத்துக்கள் பொதிந்துள்ளன. வைட்டமின்கள் சி மற்றும் பி, கால்சியம் மற்றும இதர கனிம சத்துக்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. எனவே, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆன்டி-ஆக்சிடன்ட்களையும் உடலுக்கு வழங்குகிறது. ஷைடேக் காளான், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் போன்ற நோய்களின் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கவும் உதவுகிறது. காளானில் உள்ள லென்டினன் எனும் சத்து, புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியையும், அது உருவாவதையும் தடுக்கிறது. இவ்வகை காளாகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளும் போது சிறந்த ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.

திராட்சை
மிகவும் சுவையான, அனைவருக்கும் விருப்பமான பழம் திராட்சை. இதை சாப்பிடுவதன் மூலமும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டும், மற்ற ஆன்டி-ஆக்சிடன்ட் போலவே புற்றுநோய் ஏற்படாமலும், புற்றுநோய் உருவாகாமலும், அப்படி உருவானால் அதன் வளர்ச்சியை தடுக்கும். இதில் உள்ள சத்துக்கள் மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கக்கூடியது. பச்சை திராட்சையில், சிவப்பு மற்றும் கருப்பு திராட்சைகளுடன் ஒப்பிடும் போது, ரெஸ்வெரடால் குறைவாகவே உள்ளது. இந்த பழத்தின் தோலில் கூட அதிக சத்துக்கள் உள்ளன. கொட்டை இல்லாத திராட்சையை காட்டிலும், கொட்டை இருக்கும் திராட்சையை சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இயற்கை முறையில் பயிரிடப்பட்ட திராட்சை அல்லது ப்ரஷ் திராட்சை ஜூஸ் தினமும் குடிப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படாமல் தடுத்துவிடலாம்.

பச்சை இலை காய்கறிகள்
இந்த வகை காய்கறிகளில் முள்ளங்கி, ப்ராக்கோலி, காலிப்ளவர், கிழங்கு வகைகள், முளைக்கட்டிய பயிறு வகைகள் உள்ளிட்ட பல அடங்கும். இந்த சுவையான காய்கறி வகைகளில் சல்பராபேன் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை மார்பக புற்றுநோய், மூளை புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து போராடி உடலை காக்கிறது. அடர் நிற காய்கறிகளில் இன்டோல் 3 கார்பினால் அதிகமாக உள்ளது. இந்த இயற்கை சத்து, உடலில் புற்றுநோய் செல்களை வளர்க்கும் காரணிகளை அழிக்கிறது.

ஃபோலேட் நிறைந்த உணவுகள்
அவகேடோ, ஆப்ரிகோட், பூசணி மற்றும் பச்சை இலை காய்கறிகள், கோழியின் கல்லீரல் போன்றவை ஃபோலேட் நிறைந்த உணவுகளாகும். ஃபோலேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். பி9 அல்லது ஃபோலிக் அமிலம் உங்கள் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். அதிலும், இயற்கை முறையில் ஃபோலேட்டை எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே புற்றுநோயை அது தடுக்கும். ஃபோலேட் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என சிலர் கூறி கேட்டிருப்பீர்கள். அவர்கள் கூறுவது, இயற்கையாக அல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும் ஃபோலேட்களால் தான். இயற்கை ஃபோலேட் எப்போதுமே புற்றுநோய் எதிர்ப்பு காரணி தான்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோயை உடலின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும். இது சிறந்த அலர்ஜி எதிர்ப்பு காரணியாகவும், ஆன்டி ஆன்சிடேடிவ் கொண்டதாகவும் உள்ளது. இது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது. இந்தியாவில், பெரும்பாலான மக்கள் தினசரி உணவில் 2 முதல் 2.5 கிராம் வரையிலான மஞ்சளை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், உலக அளவில் பெருங்குடல், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் குறைவாக உள்ளனர். தினசரி உணவில் மஞ்சள் சேர்ப்பதனால் தான் இது குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தக்காளி
சிறிய தக்காளி புற்றுநோயை தடுக்குமா என்றால்? ஆமாம். தக்காளியில் உள்ள காராடெனாய்ட்ஸ் மற்றும் லைகோபீன் புற்றுநோயை எதிர்த்து சண்டையிடுகிறது. குறிப்பாக கணையம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்கிறது. இந்த பலன்களை பெறுவதற்கு, குறைந்தது 7 முதல் 10 தக்காளி வரை ஒரு வாரத்திற்கு சேர்க்க வேண்டும். தக்காளியை எந்த வகையில் வேண்டுமானாலும், உங்களுக்கு விருப்பமான முறையில் உணவில் சேர்த்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











