For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த காய் உங்களுக்கு பிடிக்காதா?... இத படிச்சி பாருங்க அப்புறம் தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க...

  |

  கொத்தும் கிளி இங்கிருக்க.., கோவைப்பழம் அங்கிருக்க.., தத்தி வரும் வெள்ளலையே, நீ போய் தூது சொல்ல மாட்டாயோ!

  பாட்டுக்கு பாட்டெடுத்து.....!

  health benefits of koaikaai in tamil

  1960களில் வெளியான படகோட்டிக்காக, காப்பியக்கவிஞர் வாலியின் வைர வரிகளில் இளம்பெண்களின் அதரத்திற்கு உதாரணமான செக்கச்சிவந்த கோவைப்பழமே, இறைவனின் திருவதரங்களுக்கும் பாசுரங்களில் உதாரணமாகியது. சிவந்த மூக்கையுடைய கிளிகளுக்கும் அதுவே, முக்கிய உணவுமாகும்!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கோவைக்காய்

  கோவைக்காய்

  மழைக்காலத்தில் வேலிகளில் படரும் தண்டுகளில் பசும் இலைகளுடன் வெண்ணிறப் பூக்களைக் கொண்டு, பச்சைநிறத்தில் கோவைக்காய்கள் கொடியெங்கும் படர்ந்திருக்கும். கொடிகளிலே பழுக்கும் பழங்கள், கிளிகளுக்கும் அணில்களுக்கும் உணவாகி, பழத்தின் எச்சம் மட்டுமே. கொடிகளில் மிச்சமிருக்கும்.

  கோவைப்பழம், மனிதர்களுக்கு பல்வேறு உடல் பாதிப்புகளைக் களைந்து சிறந்த நன்மையளிக்கும் பழம், அதுமட்டுமல்ல, இலைகளும் வேர்களும்கூட, மனித உடலின் வியாதிகளைப் போக்கும் அற்புதத்தன்மை நிறைந்தவை.

  கோவை இலை

  கோவை இலை

  சித்த மருத்துவத்தில் உயர்வான மூலிகையான முசுமுசுக்கை இனத்தைச் சேர்ந்த, கோவைக்காயின் நன்மைகளை நாம், இனி காண்போம்.

  கோவை இலைகள் கல்லீரல், மண்ணீரல், மூலம், தோல் நோய்கள், சுவாச பாதிப்புகள், ஜுரம் மற்றும் கண் பார்வை பாதிப்புகளை சரிசெய்யும் தன்மை மிக்கவை.

  இலைகளின் சாற்றை, உச்சந்தலையில் தடவிவர, வழுக்கை நீங்கி, முடி வளரும்.

  பயன்கள்

  பயன்கள்

  இரத்த சர்க்கரை அளவுகளையும், கொழுப்புத்தன்மைகளையும் இயல்பாக்கும். அல்சர் எனும் வயிற்றுப்புண்களை ஆற்றி, கல்லீரல் போன்ற உடல் உள் உறுப்புகளை, நச்சுக்கிருமிகளிடமிருந்து காத்து, சீராக இயங்க வைக்கும். நமது தேசத்தில் முக்கிய சத்துமிக்க உணவுப்பொருளாகத் திகழும் கோவைக்காய் தரும், ஆற்றல்மிக்க நற்பலன்களைப் பார்க்கலாம்.

  உணவு செரிமானம்

  உணவு செரிமானம்

  கோவைக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், உணவை விரைவில் செரிக்கவைத்து, வயிற்றின் செயல்களை இயல்பாக்குகிறது. குடல் மற்றும் இரைப்பை சார்ந்த வியாதிகளைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. கோவைக்காயை கூட்டுபோல செய்து சாப்பிடலாம், அல்லது அதிகம் மசாலா சேர்க்காமல் வதக்கி சாப்பிட்டு வரலாம்.

  மலச்சிக்கல்

  மலச்சிக்கல்

  கோவைக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், சருமத்தைத் தூய்மையாக்கி, வயிற்றை சுத்தமாக்கும் தன்மைகொண்டது. கோவை விதைகளில் உள்ள என்சைம்கள் உடல் கழிவுகளின் இறுக்கத்தைத்தளர்த்தி, இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும் தன்மைமிக்கவை. தினமும் உணவில் கோவைக்காயை சேர்த்துவர, மலச்சிக்கலை முற்றிலும் விலக்கிவிடலாம். வயதானவர்கள் உணவில் சேர்த்து வர, நன்மையாகும்.

  உடல் எடைக்குறைப்பு.

  உடல் எடைக்குறைப்பு.

  இயல்பிலே நார்ச்சத்துமிக்க காயாக இருப்பதால், மிகக்குறைந்த அளவே கலோரி கொண்டது. அதிக உடல் எடை உள்ளவர்கள், உணவில் கோவைக்காயை சேர்த்துவர, பசியைத் தணித்து, உடல் எடையை விரைவில் குறையவைக்கும்.

  இரத்தத்தைத் தூய்மையாக்கும்.

  இரத்தத்தைத் தூய்மையாக்கும்.

  கோவைக்காயில் உள்ள நச்சுநீக்கும் தன்மைகள் காரணமாக, இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அழித்து, இரத்தத்தை தூய்மை செய்கிறது. உணவில் அடிக்கடி கோவைக்காயை சேர்த்துவர, இரத்தம் தூய்மையாகி, உடல் சருமம் பொலிவாகி, மனமும் புத்துணர்வாகும்.

  ஜுரத்தைத் தணிக்கும்.

  ஜுரத்தைத் தணிக்கும்.

  ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை சுஷ்ருதர், கோவைக்காயை பல்வேறு உடல்நல பாதிப்புகளைத் தணிக்கும் ஆற்றல்மிக்க மூலிகை என்று போற்றுகிறார். நோய் எதிர்ப்பு சக்தி மிக்க கோவைக்காய், உடலின் தற்காப்பு ஆற்றலை அதிகரிக்க வைத்து, நோய்த் தொற்றுக்களில் இருந்து, உடலைக்காக்கும் தன்மைமிக்கவை. காயைத் தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் அல்லது காயை நீரில் காய்ச்சிப்பருகிவர, ஜுரம் தணிந்துவிடும். நோய்த்தொற்றும் நீங்கிவிடும்.

  வயதாகும் தன்மை

  வயதாகும் தன்மை

  சத்துமிக்க தாதுக்களையும் ஆன்டி ஆக்சிடண்ட்களையும் கொண்ட கோவைக்காயில் வைட்டமின் K, வைட்டமின் D மற்றும் வைட்டமின் C நிரம்பியுள்ளது. சிலருக்கு இள வயதிலேயே, சத்து குறைபாட்டால், உடலில் முதுமைக்கான உடல் சுருக்கம் மற்றும் முகச்சுருக்கம் ஏற்படும். தினமும் கோவைக்காயை உணவில் சேர்த்துவர, இதிலுள்ள வைட்டமின்சத்துக்கள் மற்றும் தாதுக்கள், உடல்தோல் சுருக்கத்தை, முகச்சுருக்கத்தை நீக்கி, உடலின் இளமைத்தன்மையை தக்கவைக்கும்.

  முகப்பரு

  முகப்பரு

  கோவைக்காயிலுள்ள நச்சுநீக்கும் தன்மைகள் மற்றும் வைட்டமின் C சத்துக்களால், இரத்த நச்சுக்கள் நீங்கி, இரத்தம் தூய்மையாகி, சருமம் பொலிவாகும்போது, சரும பாதிப்புகளால் ஏற்படும் முகப்பரு போன்ற நச்சுக்கிருமி பாதிப்புகள் யாவும், தானே நீங்கிவிடும்.

  கொழுப்பு

  கொழுப்பு

  உணவு சமைப்பதில் ஏற்படும் சோம்பல் அல்லது ஆரோக்கியக்குறைவான துரித உணவுகளில் ஏற்படும் ஆர்வம் காரணமாக, உடலில் நச்சுக்கொழுப்பு சேர்ந்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. தினமும் கோவைக்காயை அதிக எண்ணையின்றி, வதக்கி சாப்பிட்டுவரும்போது, கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தைக்காக்கிறது..

  இரத்த சர்க்கரை

  இரத்த சர்க்கரை

  கோவை விதைகளில் உள்ள செறிவுள்ள சத்துக்கள், இரத்த சர்க்கரை அளவை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை இயல்பாக்கும் தன்மைமிக்கவை. இரத்த சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு, அற்புத நிவாரணம் தரும் கோவைக்காயை, அதிக மசாலா நிரம்பிய கிரேவி போலவோ, அல்லது காரசாரமான கறியாக செய்து சாப்பிட்டால், ஒரு பயனும் கிடைக்காது. காயை எண்ணையின்றி வதக்கி சாப்பிடலாம் அல்லது கூட்டுபோல செய்துசாப்பிட, எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

  கண்பார்வை

  கண்பார்வை

  காய்களின் விதைகளிலுள்ள என்சைம்கள் மற்றும் தாதுக்கள், கண் பார்வையை அதிகரிக்கச்செய்யும் தன்மைமிக்கவை, கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர, கண்பார்வைக்குறைபாடு விலகிவிடும்.

  ஆரோக்கிய உணவு.

  ஆரோக்கிய உணவு.

  பச்சைக்காய்கறிகளின் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மைகள்தரும் என்பதால், சமச்சீரான ஆரோக்கிய உணவில், பச்சைக்காய்கறிகள் கட்டாயம் இடம்பெற வேண்டுமென, ஊட்டச்சத்துணவு நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.. அந்த வகையில் மேற்கண்ட நன்மைகளுடன், செரிமானத்தை ஏற்படுத்தும் நார்ச்சத்து நிரம்பிய கோவைக்காயை உணவில் தினமும் சேர்த்துவர, வியாதிகள் விலகி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

  தலைவலி

  தலைவலி

  தாங்கமுடியாத தலைவலி ஏற்படும் சமயங்களில், கோவைக்கொடியின் வேரை நீரிட்டு அரைத்து, நெற்றியில் பற்றுபோல தடவிவர, போட்ட பத்து காய்ந்து உலர்வதற்குள், தலைவலி நீங்கிவிடும்.

   காயங்கள்

  காயங்கள்

  யாரேனும் பத்து என்ற பேச்சுத்தமிழை, வடிவேலு போலப்புரிந்துகொண்டு, நெற்றியில் 10தை போட்டுவிட்டால், அந்தப்புண்ணையும் ஆற்றிவிடும், கோவையிலை.

  வெட்டுக்காயங்கள், புண்கள், கட்டிகள் வீக்கம் போன்றவை குணமாக, கோவை வேர்களை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரை, காயங்கள் புண்கள் மற்றும் கட்டிகள்மீது ஊற்றி நன்கு அலசிவர, காயங்களை ஆறவிடாமல் தடுக்கும் கிருமிகளை அழித்து, காயங்கள் மற்றும் கட்டிகளை உடனே ஆற்றும் இயல்புமிக்கது, கோவை வேர்.

  தலைமுடி உதிர்தல்

  தலைமுடி உதிர்தல்

  ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, கோவை இலைகளை அரைத்து, உச்சந்தலையில் தேய்த்து, சற்றுநேரம் ஊறியபின் ஷாம்பூ உபயோகிக்காமல், சீயக்காய் போன்ற இயற்கைப்பொருட்களைக் கொண்டு, தலையைக் குளிர்ந்த நீரில் அலசி குளித்துவர, ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் பாதிக்கும் தலைமுடி கொட்டுதல், முடிஉதிர்தல் மற்றும் இளவழுக்கை பாதிப்புகள் நீங்கி, வழுக்கைத் தலையில் முடிவளர ஆரம்பிக்கும். வாரம் இரண்டு மூன்றுமுறை இதுபோலத் தேய்த்து குளித்துவர, தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.

  கல்லீரல் வியாதி

  கல்லீரல் வியாதி

  கோவை இலைச்சாற்றை மூன்று தேக்கரண்டிகள் அளவில் தினமும் பருகிவர, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் வராமல் தடுக்கும். வந்துவிட்டாலும்அவற்றை குணப்படுத்தும்.

  இருமல் மற்றும் சளி

  இருமல் மற்றும் சளி

  சுவாச பாதிப்புகளால், சளி மற்றும் இருமல் ஏற்படும் போது, கோவைக் கொடியின் வேரை நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி, மூன்று தேக்கரண்டி அளவில், தினமும் இரண்டு வேளைகள் பருகிவர, சளி மற்றும் இருமல் தொல்லைகள் நீங்கும்.

  சரும பாதிப்புகள்

  சரும பாதிப்புகள்

  கோவைப்பழத்தின் இலைகளை தண்ணீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, அந்த நீரைப் பருகி வர, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள், தேமல் போன்றவற்றை மறையச் செய்து விடும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  How pointed gourd or parwal are useful for health?

  Being a staple vegetable cooked in Indian subcontinent, pointed gourd has its own benefits for your diet.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more