நீங்க சமைக்கும் விதத்தால் கூட உணவிலுள்ள கால்சியம் சத்து அழிந்து போகும் ! எப்படி சமைக்கவே கூடாது?

Posted By:
Subscribe to Boldsky

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு மட்டுமே அவசியம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. ரத்தம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் இது தேவையாகிறது.

ரத்த உறைதலுக்கும், இதயத் துடிப்பிற்கு மற்றும் தசைகள் இயங்குவதற்கும் கால்சியம் அவசியம் தேவை.

சில சமயம் கால்சியல் அளவு உடலில் பற்றாக்குறையாகும். இதற்கு சரியாக கால்சியம் நமது உடலால் உறிஞ்சப்படாததால் ஏற்படும் விளைவுதான் கால்சியம் பற்றாக்குறை . இதனால் உடலில் பல்வேறு பாகங்கள் பலப் பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றன.

கால்சியம் உறியபடாமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகப்படியான காஃபி, டீ மற்றும் மது குடிப்பது, புகைப்பிடிப்பது , சூரிய வெளிச்சமே படாமல் இருப்பது போன்றவை கால்சியம் உறிவதை தடை செய்கின்றன. கால்சியம் உங்கள் உடலில் உறிஞ்சுவதற்கு என்னென்ன மாதிரியான பழக்கங்கள் கையாளலாம் என இந்த கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமாக உண்ண வேண்டிய பொருட்கள் :

அதிகமாக உண்ண வேண்டிய பொருட்கள் :

கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகப்படுத்துங்கள். அவரவர் உடலுக்கு தகுந்தாற்போல் கால்சியம் அளவு வேறுபடும். பொதுவாக பெரியவர்களுக்கு குறைந்தது 1200 மி.கி/ நாள் தேவைப்படுகிறது.

கால்சியம் நிறைந்த உணவுகள்:

கால்சியம் நிறைந்த உணவுகள்:

சீஸ், பனீர், புரொக்கோலி, முட்டை, மீன், சோயா, மற்றும் கொண்டைக்கடலை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் கால்சியம் உள்ளது. பாலில் மிக அதிக கால்சியம் இருப்பதால் பசும்பாலை தினமும் இரவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரையிலும் அதிக கால்சியம் இருக்கிறது. கட்டாஉஆம் வாரம் 4 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூரியனிடம் பேசுகிறீர்களா?

சூரியனிடம் பேசுகிறீர்களா?

அதாவது சூரியனிடமிருந்து போதுமான அளவு அதன் சக்தியை பெறுகிறீர்களா? காலை மற்றும் மாலை வெயிலில் 10 நிமிடமாவதுனடந்து வாருங்கள். விட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் கால்சியம் பற்றாக்குறையும் ஏற்படும். விட்டமின் டி முழு வீச்சாக சூரியனிடமிருந்துதான் நீங்கல் பெற்றாக வேண்டும். அது தவிர்த்து சில உணவுகளிலும் இருக்கின்றது.

விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் :

விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் :

மீன் எண்ணெய், முட்டை, மஷ்ரூம், சூரிய காந்தி எண்ணெய், சால்மன் மீன், பால் போன்றவற்றில் அதிக விட்டமின் டி இருக்கின்றது. முக்கியமாக கடல் உணவுகளை சாப்பிடலாம்.

கொழுப்பு உணவை குறைக்கவும் :

கொழுப்பு உணவை குறைக்கவும் :

கொழுப்பு உணவுகள் கால்சியம் உறிஞ்சபப்டுவதை தடுக்கின்றது. இதனால் கூட கால்சியம் பற்றாக்குறை உண்டாகும். ஆகவே எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

புரத உணவை அதிகப்படுத்தவும் :

புரத உணவை அதிகப்படுத்தவும் :

கால்சியம் உடலில் உட்கிரகிக்க புரதங்கள் அவசியம். அதிக புரத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை வளர்சிதைக்குள்ளாகும்போது கால்சியமும் உடலுக்குள் உட்கிரகிக்க முடிகிறது..

புரதம் அதிகமுள்ள உணவுகள் :

புரதம் அதிகமுள்ள உணவுகள் :

சிக்கன், மீன், முட்டை, பீன்ஸ், மற்றும் இதர காய்கறிகள், இயற்கையான யோகர்ட், நட்ஸ், சீஸ், பனீர், போன்ற உணவுகள் உங்கள் தினசரி உணவுகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

சமைக்கும் விதம் :

சமைக்கும் விதம் :

நீங்கள் என்னதான் பார்த்து பார்த்து காய்கறிகள் வாங்கினாலும். நீங்கள் சமைக்கும் விதத்தால் சத்துக்கள் அழிந்துவிடும். அதிக வெப்ப நிலையில் சமைத்தால் , காய்கறிகளிலுள்ள சத்துக்கள் அழிந்துவிடும் என்பது தெரியுமா? இதன் காரணமாகவே நீங்கள் சமைக்கும் நேரமும், காய்கறிகளின் நன்மைகளும் கிடைக்காமல் வீணாகி விடும். எனவே மிதமான வெப்ப நிலையில்தான் சமைக்க வேண்டும்.

அமில உணவுகளை தவிர்க்கவும் :

அமில உணவுகளை தவிர்க்கவும் :

அதிகப்படியான அமில உணவுகளை தவிருங்கள். உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும் போது விட்டமின் டி மற்றும் கால்சியம் அளவு குறைகிறது. இதற்கு அவை கால்சியல் அளவை உட்கிரகிக்க விடாமல் தடுக்கிறது. காஃபி, சர்க்கரை, கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்ரவை காரண

குளுரோஃபில் உணவுகள் சேர்த்துங்கள் :

குளுரோஃபில் உணவுகள் சேர்த்துங்கள் :

பச்சையம் அதிகம் நிறைந்துள்ள உணவுகள் கால்சியத்தை உடலில் உறிய தூண்டுவதால் அவற்ரை அன்றாடம் உணவில் சேர்ப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Good habits that help you absorb more calcium

Good habits that help you absorb more calcium
Story first published: Thursday, January 11, 2018, 16:20 [IST]