For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டையை விட அதிக சத்துக்கள் நிறைந்த சில உணவுப்பொருட்கள்

முட்டைக்கு பதிலாக அதே அளவு சத்துகள் நிறைந்த மற்ற உணவுகளை சாப்பிடுவது நலம். இதனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்களில் எந்தவித குறைபாடும் இருக்காது.

|

ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் அவசியமானவை. குறிப்பாக நமது வளர்ச்சிதை மாற்றத்திற்கு புரோட்டின் மிகவும் அவசியமான ஒரு சத்தாகும். நாம் அதிகம் சாப்பிடும் சுவையான, சத்தான ஒரு உணவு என்றால் அது முட்டைதான். ஏனெனில் முட்டையில் போதுமான அளவு புரோட்டின்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளது. ஆனால் சிலருக்கு முட்டையின் சுவை பிடிக்காமல் இருக்கலாம்.

foods which have more protein than eggs

அப்படிப்பட்டவர்கள் முட்டைக்கு பதிலாக அதே அளவு சத்துகள் நிறைந்த மற்ற உணவுகளை சாப்பிடுவது நலம். இதனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்களில் எந்தவித குறைபாடும் இருக்காது. இந்த பதிவில் முட்டையை விட அதிகளவு புரோட்டின்கள் உள்ள உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ்

ஒரு கப் சமைக்கப்பட்ட சோயாபீன்ஸில் கிட்டத்தட்ட 28 கிராம் புரோட்டின் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. சோயாபீன் பல்வேறு உணவுகளுக்கு மூலப்பொருளாக இருக்கிறது. இதனை நொறுக்குதீனிகளாகவும், உணவாகவும் கூட பயன்படுத்தலாம்.

திணை

திணை

இந்த தானியத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது அதனால் இது முழுமையான புரோட்டின் நிறைந்த உணவாக இருக்கிறது மேலும் சில முக்கியமான அமினோ அமிலங்கள் உள்ளது. குறிப்பாக தசைகளை வலுப்படுத்தும் அர்கினைன் என்னும் சத்தும் உள்ளது. ஒரு கப் திணையில் 8 கிராம் புரோட்டின் உள்ளது.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

பூசணி விதையில் புரோட்டின்கள் நிறைந்துள்ளது, மேலும் இதில் பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் மக்னீசியம் உள்ளது. இவை நமக்கு தேவையான ஆற்றல்களை வழங்கக்கூடியவையாகும். 30 கிராம் பூசணி விதையில் 9 கிராம் புரோட்டின்கள் உள்ளது. இது முட்டையில் உள்ள புரோட்டின் அளவை விட அதிகமாகும்.

பயிறு மற்றும் பருப்பு

பயிறு மற்றும் பருப்பு

பருப்பு புரோட்டின்களுக்கான மிகச்சிறந்த உணவாக இருக்கிறது, ஒரு கப் பருப்பில் 14 முதல் 16 கிராம் புரோட்டின் உள்ளது. இது வேகவைத்த முட்டையில் உள்ள புரோட்டின்களின் அளவை விட அதிகமாகும். இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களும் அத்தியாவசியமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது.

MOST READ: இந்த 5 இடங்களில் விளக்கேற்றினால் போதும் சனிபகவான் உங்களுக்கு நன்மைகளை

சணல் விதைகள்

சணல் விதைகள்

சணல் விதைகள் சணல் இதயம் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் குறைந்தளவு கலோரிகள் மற்றும் அதிகளவு புரோட்டின்கள் உள்ளது. இரண்டு ஸ்பூன் விதையில் 6.3 புரோட்டின் உள்ளது. இதில் இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான லினோலிக் அமிலமும், ஒமேகா 3 அமிலமும் உள்ளது.

கிரேக்க தயிர்

கிரேக்க தயிர்

வீட்டில் தயாரிக்கும் தயிரை விட கிரேக்க தயிரில் புரோட்டின்களின் அளவு இருமடங்கு உள்ளது. இது உங்கள் வயிறை எளிதில் நிரப்புவதோடு ஆரோக்கியத்திற்கு அவசியமான புரோபயாடிக்குகள் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் கிரேக்க தயிரில் 17 கிராம் புரோட்டின் உள்ளது.

பன்னீர்

பன்னீர்

உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள கூடிய சுவையான மற்றும் புரோட்டின் அதிக அளவு உள்ள ஒரு உணவு என்றால் அது பன்னீர்தான். இதில் அதிகளவு புரோட்டின்களும் குறைந்தளவு கலோரிகளும் உள்ளது. 100 கிராம் பன்னீரில் 2 கிராம் புரோட்டின் உள்ளது. இது முட்டையில் உள்ள புரோட்டினின் அளவை விட மிகஅதிகமான அளவாகும்.

சுண்டல்

சுண்டல்

சுண்டல் பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஒரு மிகச்சிறந்த பொருளாகும். வேகவைக்கப்பட்ட அரை கப் சுண்டலில் 7.3 கிராம் புரோட்டின் உள்ளது. இது பசியின்மையை கட்டுப்படுத்தி ஆற்றலை அதிகரிக்க பயன்படுகிறது, க்ளோசிகிட்டினின் என்னும் ஹார்மோனின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது.

MOST READ: ஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்கணுமா..? அப்போ தினமும் 1 கிளாஸ் பீர் குடிங்க...

பாதாம் வெண்ணெய்

பாதாம் வெண்ணெய்

50 கிராம் பாதாம் வெண்ணெயில் 10 கிராம் புரோட்டின் உள்ளது. மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ, பயோட்டின் மற்றும் மாங்கனீசு உள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு முட்டைக்கு பதிலாக சாப்பிட ஒரு சிறந்த உணவு பாதாம் வெண்ணெயாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods which have more protein than eggs

Eggs are a well known source of protein and also offer a wide range of vitamins, minerals and other beneficial compounds. But some vegetarian foods have more protein than eggs.
Story first published: Saturday, September 29, 2018, 18:19 [IST]
Desktop Bottom Promotion