உங்களுக்கு பிம்பிள் அதிகமா வர, இந்த உணவுகள் தான் காரணம் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு பிம்பிள் ரொம்ப வருதா? எவ்வளவு தான் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், பருக்கள் வந்து அழகைக் கெடுக்கிறதா? அது ஏன் என்று தெரியுமா? ஒருவருக்கு பருக்கள் வருவதற்கு சாப்பிடும் உணவுகளும் ஓர் காரணமாகும். இது 2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட சில உணவுகள் உடலில் அழுற்சியை உண்டாக்கி, இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் சருமத்தில் தொற்றுக்களை உண்டாக்கும்.

உங்களுக்கு எந்த உணவுகள் முகத்தில் பருக்களை உண்டாக்குகின்றன என்று தெரியுமா? தெரியாவிட்டால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இங்கு ஒருவரது முகத்தில் பருக்களை அதிகம் வரவழைக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் எவையென்று தெரிந்து, அவற்றைத் தவிர்த்து வந்தால், முகத்தில் அதிகம் வரும் பருக்களைத் தடுக்கலாம். சரி, வாருங்கள் அந்த உணவுகள் எவையென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் சர்க்கரை

வெள்ளை பிரட், அரிசி, சுத்திகரிக்கப்பட்ட செரில்கள், மைதா பாஸ்தா மற்றும் பிஸ்கட் போன்றவை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும். இந்த உணவுகளை சிறிது சாப்பிட்டாலே, அது பருக்களை வரவழைத்துவிடும். அதே சமயம் சர்க்கரை நிறைந்த உணவுகள், சோடா மற்றும் கார்போனேட்டட் பானங்களை எடுத்தாலும், அது பருக்களை உண்டாக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களான சீஸ், மில்க் க்ரீம், பால், சாக்லேட், ஐஸ் க்ரீம் போன்றவை இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். மேலும் பாலில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை தூண்டிவிடுவதோடு, சரும செல்களின் உற்பத்தியையும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பை உண்டாக்கி, பருக்களை ஏற்படுத்துகிறது. ஆகவே உங்களுக்கு பால் பொருட்களை உட்கொண்ட பின் பருக்கள் வந்தால், அதற்கு நீங்கள் சாப்பிட்ட பால் பொருட்கள் தான் முக்கிய காரணம்.

ஃபாஸ்ட் புட்

ஃபாஸ்ட் புட்

ஃபாஸ்ட் புட் உணவுகளான பிரெஞ்சு ப்ரைஸ், பர்கர், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிட்சா போன்றவை மிகவும் சுவையானதாக இருக்கலாம். ஆனால் இந்த உணவுகளில் உள்ள ட்ரான்ஸ் கொழுப்புக்கள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரட் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தி, பருக்களை வரவழைக்கும்.

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள்

சோளம் மற்றும் சோயா எண்ணெய்களில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. அதே சமயம் வால்நட்ஸ், எள்ளு விதைகள், பிரேசில் நட்ஸ் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றிலும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவைகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது முகத்தில் பருக்களை அதிகம் வரவழைக்கும்.

வே புரோட்டீன் பவுடர்

வே புரோட்டீன் பவுடர்

வே புரோட்டீன் பவுடரில் உள்ள அமினோ அமிலக்ள், முகப்பருக்களை வரத் தூண்டும். இதில் உள்ள அமிலம், புதிய சரும செல்களின் உற்பத்தியை அதிகரித்து, சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி, பருக்களை உண்டாக்கும். மேலும் வே புரோட்டீன் பவுடர் ஸ்கிம் மில்கில் இருந்து பெறப்படும் ஒரு பொருளாகும். இதில் உள்ள அமினோ அமிலம் பெப்டைடு உற்பத்தியை ஊக்குவித்து, இன்சுலின் அளவை அதிகரிக்கும். இவை அனைத்தும் சருமத்தின் எண்ணெய் உற்பத்தியில் ஏற்றஇறக்கத்தை ஏற்படுத்தி, பருக்களை வரவழைக்கும்.

மாட்டிறைச்சி, சிக்கன் மற்றும் பன்றி இறைச்சி

மாட்டிறைச்சி, சிக்கன் மற்றும் பன்றி இறைச்சி

மாட்டிறைச்சி, சிக்கன், பன்றி இறைச்சி போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும், அது சருமத்தில் பருக்களை அதிகம் உண்டாக்கும். இதற்கு காரணம் இறைச்சிகளில் உள்ள ஆன்டி-பயாடிக்ஸ் தான் காரணம். ஆன்டி-பயாடிக் ஊசி போடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால், அது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, உடலில் பாக்டீரியாவின் வளர்ச்சியை பெருக்கி, பருக்களால் அவஸ்தைப்படச் செய்யும்.

காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால்

காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால்

காப்ஃபைன் நிறைந்த காபி, டீ மற்றும் மது பானங்களான ஒயின், பீர் போன்றவற்றை குடித்தால் பருக்கள் வரும். காபி, டீயில் உள்ள காப்ஃபைன், உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவைத் தூண்டிவிட்டு, மன அழுத்தத்தை அதிகரித்து, பருக்களை வரவழைக்கும். மேலும் இது உடலில் இது உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து, சருமத்தில் எண்ணெய் உற்பத்தியையும் அதிகரிக்கும். ஆல்கஹால் டெஸ்டோஸ்டிரோன் அல்லது ஈஸ்ட்ரோஜென் அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, பருக்களால் அவஸ்தைப்படச் செய்யும்.

கேன் உணவுகள்

கேன் உணவுகள்

கப் நூடுல்ஸ், கேக் மிக்ஸ் போன்றவற்றை ஒருவர் அதிகம் சாப்பிட்டாலும், அழகைக் கெடுக்கும் வகையில் பருக்கள் அதிகமாக வரும். இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம். மேலும் இதில் உள்ள செயற்கை சுவையூட்டிகள் மற்றும் ப்ளேவர்கள், சரும அழற்சியை உண்டாக்கும். அதோடு அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், சருமத்தில் எண்ணெய் சுரப்பை ஊக்குவித்து, பிம்பிளை வரத் தூண்டும்.

ப்ரைடு உணவுகள்

ப்ரைடு உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். இப்படி கொழுப்பு நிறைந்த உணவுகளை ஒருவர் அதிகம் சாப்பிட்டால், அது சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பியில் அதிகளவு எண்ணெயை சுரக்கத் தூண்டும். இதன் விளைவாக சரும பருக்களால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும்.

எனர்ஜி பானங்கள்

எனர்ஜி பானங்கள்

எனர்ஜி பானங்களில் சர்க்கரை அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை. இந்த பானங்களை அதிகம் குடித்தால், அது பருக்களை வரத் தூண்டும். சில எனர்ஜி பானங்களில் உள்ள பி வைட்டமின்கள், சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தி, பருக்கள் மற்றும் தொற்றுக்களை வரச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Cause Pimple Problem

Your diet does play a role in causing acne. And this was proved in a 2010 study. Here are some foods that cause pimple problem. Read on to know more...
Story first published: Friday, March 30, 2018, 17:40 [IST]