For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா?... சாப்பிட்டா என்ன ஆகும்?

பகலில் வேலை செய்பவர்களைவிட நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் தான் முறையாக சாப்பிட வேண்டும். ஏனேனில் அவர்களுடைய பழக்க வழக்க சுழற்சி முறையே மாறும். அதனால் உடல்நலம் கெடும்.

|

நீங்கள் விரும்பி மகிழ்ச்சியாக செய்யும் வேலையில் எப்போதுமே பொறுப்புகள் அதிகமாகவே இருக்கும். மற்ற விஷயங்களை எல்லாம் விட்டுக்கொடுத்து அந்த வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை அமைந்திருக்கும். நீங்கள் ஆசைப்பட்ட படி உயர்நிலையில் உங்களுக்கு ஒரு பணி அமைந்திருக்கலாம். அதனால் இரவு பகல் பாராமல் உழைத்துத் தள்ளுவீர்கள்.

health

சரியாக சாப்பிடாமல் அல்லது முறையாக என்ன சாப்பிட வேண்டுமென்று தெரியாமல், எதையாவது கொஞ்சம் கொரித்துவிட்டு செல்வீர்கள். அது மிகவும் கெடுதலான விஷயம். பகலில் வேலை செய்பவர்களைவிட நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் தான் முறையாக சாப்பிட வேண்டும். ஏனேனில் அவர்களுடைய பழக்க வழக்க சுழற்சி முறையே மாறும். அதனால் உடல்நலம் கெடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நைட் ஷிப்ட்

நைட் ஷிப்ட்

நீங்கள் ஆசைப்பட்ட ஷிப்ட்டும் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்யும் சொகுசான வேலை நேரம் எல்லாருக்கும் அமைவதில்லை. இரவு வேலை செய்வது நம் உடல் ஆரோக்யத்தை உசிப்பிப் பார்க்கும் என்பது நிதர்சனமான உண்மை. ஏனெனில் இரவில் வேலை செய்வது நம்முள் இருக்கும் உயிர் கடிகாரத்தை கண்டிப்பாக பாதிக்கும். நம் உயிர் கடிகாரம் நமது உடலை பகலில் விழித்திருக்குமாறும் இரவில் உறங்குமாறும் செய்கிறது.

நீங்கள் இரவில் விழித்திருந்தால், அறிவியல் படி, உடல் எடையை குறைப்பதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும் மற்றவர்களை விட உங்களுக்கு சிரமம். ஏன்? 2014 ல் நடந்த ஒரு ஆய்வின் படி இரவு கண் விழித்து வேலை செய்வது ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) பாதித்து, நம் உடல் ஒரு நாளில் சாதாரணமாக உபயோகிப்பதை விட குறைந்த அளவு சக்தியை உபயோகிக்குமாறு செய்கிறது. நீங்கள் இரவில் வேலை செய்யும்போது, என்ன சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்று தெளிவாக உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே இவ்விஷயத்தில் உங்களுக்கு உதவ, சில துரிதமான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மெயின் ஃபுட்

மெயின் ஃபுட்

வேலைக்கு செல்லும் முன் உங்கள் பிரதான உணவை உண்ணவும். நீங்கள் மத்திய நேர ஷிப்ட்டில் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் பிரதான உணவை மதிய வேளையில் உண்ணவும். நீங்கள் மாலை நேர ஷிப்ட்டில் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் பிரதான உணவை மாலை 6 மணிக்கோ அல்லது வேலைக்கு செல்வதற்கு முன்போ உண்ணவும். வேலை நேரத்தில் ஆரோக்யமான ஸ்னாக்ஸ் அல்லது சிறு பதார்த்தங்கள் உண்ணலாம். இரவு நேரத்தில் அதிகமாக உண்பது நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றை உண்டாக்கும். அது மட்டுமில்லாமல் தூக்கத்தையும், மந்தமான உணர்வையும் தரும். அதனால் இரவில் கவனமாக அளவாக உண்ணவும்.

செல்ஃப் குக்கிங்

செல்ஃப் குக்கிங்

உங்களுக்கான ஆரோக்யமான சிற்றுண்டியை நீங்களே பேக் செய்வது நல்லது. ஏனெனில் ஆரோக்யமான ஸ்னாக்ஸ் மதிய வேளையிலும் இரவு வேளையிலும் கிடைப்பது சிரமம். உங்கள் அலுவலகத்தில் அதிகமான உப்பு, கலோரி, சுகர் மற்றும் கொழுப்பு நிறைந்த பதார்த்தங்கள் மட்டுமே கிடைக்கலாம். நீங்கள் ஆப்பிள், உடன் சிறிது சீஸ் அல்லது ஒரு கைப்பிடி அளவு நட்ஸுடன் குறைந்த கொழுப்பு கொண்ட தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு உணவுகள்

இரவில் வேலை செய்யும்போது, கொழுப்பு நிறைந்த, பொறித்த மற்றும் காரமான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. வருத்த சிக்கன், காரமான மிளகாய், பர்கர் ஆகியவை நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உண்டாக்கும். மிக அதிகமான கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பது இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமான சாச்சுரேட்டட் பேட், ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரித்து இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட வழி வகுக்கிறது. நல்ல கொழுப்பு உடலுக்கு நல்ல விளைவுகளைத் தருகிறது.

சிற்றுண்டி

சிற்றுண்டி

நீங்கள் இரவு முழுவதும் கண் விழித்து வேலை பார்க்கும் நிலையில் உங்கள் காலை, மதிய, இரவு உணவு மட்டுமல்லாது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிற்றுண்டி உட்கொள்ளவும் திட்டமிடுங்கள். இது பசியை குறைப்பது மட்டுமல்லாமல் இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்ய தேவையான சக்தியை கொடுக்கிறது. வேலைக்கு கிளம்பும் முன் இரவு உணவை நன்றாக சாப்பிடுங்கள். இது திறம்பட வேலை செய்ய உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். உடல் வறண்டு போகாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். இது நன்றாக முழித்திருக்கவும், பிரெஷ்ஷாக வேலை செய்யவும் உதவும். ஒரு தண்ணீர் பாட்டிலை எப்போதும் உங்கள் மேஜை மீது வைத்திருங்கள். அவ்வப்போது ஒரு சிப் குடிப்பது நல்லது. தண்ணீர் தவிர செயற்கை இனிப்பு சேர்க்காத ஹெர்பல் டீ, 100% சோடியம் குறைந்த பானங்கள் குடிக்கலாம்.

புரதம் (புரோட்டீன்)

புரதம் (புரோட்டீன்)

கண் விழித்திருக்கும்போது கார்போஹைட்ரெட் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் சக்கரை நிறைந்த கார்போஹைட்ரெட் உணவு வகைகள் சோம்பேறித்தனமாக ஆக்கும். எனவே முட்டை, பால், சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை தேர்வு செய்யுங்கள். அவை நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், பசிக்காமலும் இருக்கும்.

காஃபின்

காஃபின்

டீ, காபி மற்றும் காஃபின் உள்ள பானங்கள் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எனினும் அதன் அளவு ஒரு நாளைக்கு 400mg க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ளவும். காஃபின் உங்கள் உடலில் 8 மணி நேரம் வரை இருக்கும். தூங்குவதற்கு 4 மணி நேரம் முன்பு காஃபினற்ற, செயற்கை இனிப்பு சேர்க்காத ஹெர்பல் டீ அல்லது தண்ணீர் குடிக்கலாம்.

தூங்குவதற்கு முன்

தூங்குவதற்கு முன்

பசியுடன் இருக்கும்போதும், வயிறு நிறைந்திருக்கும்போதும் தூங்குவது கடினம். வேலை முடிந்து திரும்பியதும் பசி எடுத்தால் ஆரோக்கியமான சிற்றுண்டி உட்கொள்ளவும். பாலுடன் ஒரு கிண்ணத்தில் தானியங்களோ அல்லது வறுத்த தானியத்துடன் ஜாம் சேர்த்தோ சாப்பிடலாம். வயிறு நிறைந்திருப்பது போல இருந்தால், ஷிப்ட் நேரத்தில் ஸ்னாக்ஸை தவிர்க்கலாம்.

நைட் ஷிப்ட் டின்னர்

நைட் ஷிப்ட் டின்னர்

சிக்கன், டுனா அல்லது பீன்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தானிய வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் புரதம் நிறைந்திருப்பதால், இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்ய அது நீடித்த சக்தியைக் கொடுக்கும். டின்னரை குளிர் சாதன பெட்டி மற்றும் மைக்ரோவேவில் வைத்து சூடு செய்து பிரெஷ்ஷாக சாப்பிடலாம். முழு கோதுமை ரொட்டியுடன் வான்கோழி சாண்ட்விச், கோழியின் நெஞ்சுப்பகுதியுடன் சமைத்த பழுப்பு அரிசி சாலட் அல்லது டோஃபு, நறுக்கிய காய்கறிகள் மற்றும் பீன்ஸ் சூப் போன்றவற்றை உண்ணலாம்.

குறிப்புகள்

குறிப்புகள்

இரவில் கண் விழித்து வேலை செய்யும் நேரங்களில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் உள்ளன. அவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வழக்கமாக தூங்கும் நேரத்தை மாற்ற வேண்டாம். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும். சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating Schedule For Night Shift Workers

Many hospital staffers, factory workers, security guards and even white-collar employees are just starting their workdays when other people are going to bed.
Story first published: Monday, April 16, 2018, 18:49 [IST]
Desktop Bottom Promotion