பீர்க்கங்காயை சாப்பிடுவதால் என்ன மாதிரியான நோய்கள் குணமாகிறது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

விதவிதமான கண்ணைக் கவரும் நிறங்களில் இருகும் இங்க்லிஷ் காய்கறிகளின் மேல் இருக்கும் நாட்டம் நமது நாட்டுக் காய் மீது போகாது. நாட்டுக் காய்களைப் பார்த்தாலே சற்று இளக்காரமாக பார்ப்பது தொடர்கிறது.

ஆனால் உண்மையில், பீர்க்கங்காய், பரங்கிக்காய், சுரைக்காய் போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் இங்க்லிஷ் காய்களில் வெறும் 5 சதவீதம்தான் இருக்கும். அப்படி அருமைகளை வைத்திருக்கும் பீர்க்கங்காயை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்றால் மிகக் குறைவே. இந்த கட்டுரையை படித்த பின் நீங்கள் இனிமே பீர்க்கங்காயை உதாசீனப்படுத்த மாட்டீர்கள்.

Eating Ribbed gourd regularly helps to fight against diseases

காரணம் அதன் சத்துக்களும் அவற்றின் நன்மைகளும்தான். பீர்க்கங்காயில் கால்சியம்,. காபோஹைட்ரேட், பாஸ்பரஸ், விட்டமின் சி, வி, கரோட்டின், இரும்புச்சத்து அயோடின், என மிக அத்யாவசிய சத்துக்கள் இருக்கின்றன.இங்கே அதன் நன்மைகளைப் பற்றி பார்க்கலம. இங்கே அத நன்மைகள் மிகச் சிறிய அள்வே இங்கே சொல்லியிருக்கிறோம். மீதியை நீங்கள் சாப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைய :

எடை குறைய :

பீர்க்கங்காய் இனிப்புச் சுவையுடையது என்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ரத்தத்தை சுத்தம் செய்யும் :

ரத்தத்தை சுத்தம் செய்யும் :

பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்கள் . ரத்தம் சுத்தமாவதோடு , பாதிக்கப்பட்ட கல்லீரலை சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் கை கொடுக்கிறது.

மஞ்சள் காமாலை குணமாக :

மஞ்சள் காமாலை குணமாக :

பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்து செய்ய பயன்படுகிறது

குளுகோஸ் அளவை குறைக்கிறது :

குளுகோஸ் அளவை குறைக்கிறது :

குறைந்த அளவு எரிசக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.

மலச்சிக்கலை குணமாக்குகிறது :

மலச்சிக்கலை குணமாக்குகிறது :

பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது

சரும பளபளப்பை தரும் :

சரும பளபளப்பை தரும் :

பீர்க்கங்காய் முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.

உணவுக் குழாயில் பாதிப்பு :

உணவுக் குழாயில் பாதிப்பு :

உணவுப்பாதையின் உட்புறப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகிறது.

சித்த ஆயுர்வேத ஆய்வுக்கழகம் பீர்க்கங்காயின் இலை, காய், வேர் போன்றவற்றில் இருந்து பெறப்படும் சாற்றை தினமும் 20 மி.லி. வரையில் ஒரு வேளைக்கான மருந்தாக உட்கொள்வது பலவிதங்களிலும் நல்லது என பரிந்துரை செய்திருக்கிறது

 வயிற்றுப் பூச்சிக்கு :

வயிற்றுப் பூச்சிக்கு :

பீர்க்கங்காயைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு சுவைக்காகப் போதிய உப்பு சேர்த்து, காலை, மாலை என இரு வேளை பருகி வருவதால் வயிற்றினுள் துன்பம் தருகிற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும்.

சிறு நீரக கற்கள் கரைய :

சிறு நீரக கற்கள் கரைய :

பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியைச் சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை சிறிதளவு உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.

வயிற்று கடுப்பு :

வயிற்று கடுப்பு :

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பும் தணியும்.

கண்பார்வைக்கு :

கண்பார்வைக்கு :

பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் குடித்து வந்தால் நமக்கு அதிலுள்ள பீட்டா கரோட்டீன் சத்து கிடைக்கும். கண் பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 நோய் எதிர்ப்பு சக்திக்கு :

நோய் எதிர்ப்பு சக்திக்கு :

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating Ribbed gourd regularly helps to fight against diseases

Eating Ribbed gourd regularly helps to fight against diseases
Story first published: Saturday, January 13, 2018, 17:01 [IST]