முட்டையில வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடற ஆளா நீங்க?... அப்போ இது உங்களுக்குதான்... படிங்க...

சில நேரங்களில் உணவுகளில் சேர்க்கும் சில பொருட்கள் நமக்கு ஆரோக்கியமற்றமாக அமைகிறது. அந்த மாதிரியான பொருட்களை தவிர்த்து நாங்கள் கூறும் சில பொருட்களை சேர்ப்பது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

By Suganthi Rajalingam

நாம் சாப்பிடும் எல்லா வகை உணவுகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியதா? கண்டிப்பாக இல்லை. இந்த மாடர்ன் வாழ்க்கை முறையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் ஆரோக்கியமற்றதாகவே இருக்கிறது.

facts about healthy foods

ஆரோக்கியமான உணவு முறை மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அஸ்திவாரமாக அமைய முடியும். ஆனால் சில நேரங்களில் உணவுகளில் சேர்க்கும் சில பொருட்கள் நமக்கு ஆரோக்கியமற்றமாக அமைகிறது. அந்த மாதிரியான பொருட்களை தவிர்த்து நாங்கள் கூறும் சில பொருட்களை சேர்ப்பது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாலட்

சாலட்

சாலட் உண்மையில் ஒரு ஆரோக்கியமான உணவாகும். எடையை குறைக்க உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான உணவும் கூட. ஆனால் இந்த சாலட்டை டிரஸ்ஸிங் செய்ய பயன்படுத்தும் முறை தான் தவறானது. பொதுவாக சாலட் உணவை டிரஸ்ஸிங் செய்ய கொழுப்பு எண்ணெய்களை பயன்படுத்துகின்றன.இது கண்டிப்பாக உங்கள் உடலுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இதற்கு பதிலாக நீங்கள் கார்ன் சிரப் பயன்படுத்தி கொள்ளலாம்.

இல்லையென்றால் வீட்டிலேயே ஒரு இயற்கையான டிரஸ்ஸிங் முறையை பின்பற்றலாம். அதிக கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணெய், லெமன் ஜூஸ் போன்றவற்றை பயன்படுத்தும் போது அந்த சாலட் உணவு உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்கள்

உங்களின் இனிப்பு சுவை பசியை போக்க நிறைய ஊட்டச்சத்து நிபுணர்கள் உலர்ந்த பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்பர். ஆனால் அதிகமாக உலர்ந்த பழங்களை உண்ணுதல் உடலுக்கு நல்லது கிடையாது. ஏனெனில் நீங்கள் உண்ணும் உலர்ந்த பழங்களில் சாக்லேட், மிட்டாய் போன்றவற்றை விட அதிகமாக இனிப்பு சேர்க்கப்படுகிறது. எனவே ஸ்வீட் டிற்கு பதிலாக உலர்ந்த பழங்களை கையில் எடுப்பது நல்லது அல்ல.

உலர்ந்த பழங்களுக்கு பதிலாக நீங்கள் ப்ரஷ்ஷான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பழங்களில் அந்த அளவுக்கு சர்க்கரை சத்து இருக்காது. எனவே இன்றே உலர்ந்த பழங்களுக்கு பதிலாக பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

க்ரானுலா

க்ரானுலா

கடையில் வாங்கி சாப்பிடும் க்ரானுலா உடலுக்கு நல்லதே கிடையாது. பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் க்ரானுலாவில் அதிகப்படியான சுகர் சேர்க்கப்படும்.

எனவே இதற்கு பதிலாக வீட்டிலேயே உங்கள் காலை உணவை ஆரோக்கியமானதாக தயாரிக்கலாம். ஓட்ஸ், சிறு தானியங்கள் மற்றும் பாப்பரை இவற்றுடன் நட்ஸ், உலர்ந்த பழங்கள் எல்லாம் சேர்த்து ஒரு ஆரோக்கியமான உணவை தயார் செய்யலாம்.

முட்டையின் வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கரு

நீங்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவதால் முழு ஊட்டச்சத்துகளும் உங்களுக்கு கிடைக்காது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகி இதய நோய்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். வெள்ளை கருவில் நிறைய புரதச்சத்துக்கள் இருந்தாலும் மஞ்சள் கருவில் தான் ஊட்டச்சத்துக்கள் எல்லாம் அடங்கியுள்ளது.

இதற்கு பதிலாக ஒரு முழு முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்பொழுது தான் முட்டையில் உள்ள கோலைன், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் பெற இயலும். எனவே தினசரி சாப்பிடும் போது முழு முட்டையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

நிலக்கத்தாழை தேன்

நிலக்கத்தாழை தேன்

நிலக்கத்தாழையை மக்கள் நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். இதன் இனிப்பு சுவையால் இதை சுகருக்கு பதிலாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது நல்லது கிடையாது. டாக்டர். ஆக்ஸ் என்ன கூறுகிறார் என்றால் 1 டேபிள் ஸ்பூன் நிலக்கத்தாழை தேனில் 60 கலோரிகள் உள்ளன. இது ஒரு டேபிள் சர்க்கரையை விட 20 கலோரிகள் அதிகமாகும் என்கின்றார்.

எனவே நிலக்கத்தாழை தேனிற்கு பதிலாக இயற்கையான சுத்தமான தேனை நீங்கள் பயன்படுத்தலாம். ஏனெனில் தேனில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவைகள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் கூட மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தேனை பயன்படுத்தி கொள்ளலாம். இது உடலுக்கு நல்லது.

டப்பாக்களில் அடைத்த ஸ்மூத்திகள்

டப்பாக்களில் அடைத்த ஸ்மூத்திகள்

கடைகளில் விற்கப்படும் ஸ்மூத்திகளை சாப்பிடுவதை தவிருங்கள். நீங்கள் நினைக்கலாம் சோடா போன்றவற்றிற்கு பதிலாக ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம் என்று ஆனால் கடைகளில் இந்த ஸ்மூத்திகளிலும் அதிகமான சுகர் சேர்க்கப்படுகிறது. இது உங்கள் உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும்.

இதற்கு பதிலாக பழங்களை வாங்கி வீட்டிலேயே சுவையான ஹெல்தியான ஸ்மூத்திகளை தயாரிக்கலாம். மேலும் உங்களுக்கு பிடித்தமான பழங்களையும் பயன்படுத்தி சுவைக்கலாம்.

சுவையூட்டப்பட்ட தயிர்

சுவையூட்டப்பட்ட தயிர்

நிறைய பேர் தங்கள் இனிப்பு சுவையை போக்க சுவையூட்டப்பட்ட தயிரை கடைகளில் வாங்கி சாப்பிடுவர். நிறைய டப்பாக்களில் அடைக்கப்பட்ட தயிரில் சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. அதிகமான சர்க்கரை கலக்கப்பட்டு வருகிறது.

எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட தயிருக்கு பதிலாக வீட்டிலேயே தேன் அல்லது பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். இப்படி சாப்பிடும் போது யோகார்ட் ஒரு ஆரோக்கியமான உணவாக அமையும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் நிறைய சுத்திகரிப்பு முறைகள் செய்யப்பட்ட வரும். இது உடலுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. இதில் அதிகப்படியான சோடியம் சேர்க்கப்படும்.

இதற்கு பதிலாக இரவில் டின்னரை எளிதாக செய்ய வீட்டிலேயே உணவை தயார் செய்யுங்கள். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே நன்மை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion