For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐந்து நாள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிட்டால் என்ன ஆகும்னு தெரியுமா?

மற்ற உணவுகளுடன் சேர்த்து எவ்வளவு தர்பூசணி சாப்பிட்டால் ஐந்து நாளில் எடை குறையும் என இங்கே விளக்கப்பட்டுள்ளது.

|

தர்பூசணி நார்ச்சத்து மிகுந்த ஒரு பழ வகையாகும். குறிப்பாக , குாடை கால வெயிலுக்கு இதுவொரு வரப்பிரசாதம். மழைக்காலத்தில் சாப்பிட்டாலும் சளி பிடிக்கும் தொல்லை இதில் கிடையாது.

5-days watermelon diet plan to lose weight

இந்த தர்பூசணி உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த உணவாகவும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
5 நாள் வாட்டர்மெலன் டயட்

5 நாள் வாட்டர்மெலன் டயட்

இந்த தர்பூசணி டயட் உடலை சுத்தப்படுத்துகிறது. தேவையில்லாத அழுக்கு மற்றும் கொழுப்புகளை வெளியேற்றி, எடையைக் குறைக்க உதவுகிறது.ஐநு்து நாள் வாட்டர் மெலன் டயட் என்றதும் வெறும் தர்பூசணி மட்டும் தான் சா்பபிட வேண்டும் போல என்று பயந்துவிடாதீர்கள். இந்த டயட் மற்ற உணவுகளையும் சேர்த்து தான். பிறகு இதிலென்ன ஸ்பெஷல் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஐந்து நாளும் எப்போதெல்லாம் வாட்டர்மெலன் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது தான் இந்த டயட்டின் முக்கியத்துவம். அதைப் பற்றி விளக்கமாகக் காணலாம்.

MOST READ: தண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா? அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

தர்பூசணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், வைட்டமின் பி1, பி6, லைசோஃபின், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.

குறைவான கலோரி

குறைவான கலோரி

தர்பூசணி மிகக் குறைந்த அளவு கலோரிகள் கொண்ட பழமாகும். எந்த அளவுக்கு தெரியுமா? 100 கிராம் தர்பூசணியில் வெறுமனே 30 கலோரிகள் தான் இருக்கின்றன. 0 சதவீதம் கொழுப்புச்சத்தும் 6 கிராம் அளவுக்கு சர்க்கரையும் கொண்டது.

பசியின்மை

பசியின்மை

தர்பூசணியில் கிட்டதட்ட 92 சதவீதம் அளவுக்கு தண்ணீர் மட்டுமே நிரம்பி இருக்கிறது. நார்ச்சத்தும் நிரம்பி இருக்கிறது. அதனால் தினமும் ஒரு துண்டாவது கேட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

MOST READ: மட்சா டீ குடிச்சிருக்கீங்களா? ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...

தசை வலிமையும் வலியும்

தசை வலிமையும் வலியும்

எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லோரும் சொல்லும் முதல் ஆலோசனை உடற்பயிற்சி தான். இது தசைகளின் செயல்வேகத்தை அதிகரித்து தேவையில்லாத கொழுப்புக்களை எரிக்கச் செய்யும். உடல் எடையைக் குறைத்து உடலுக்கு வலிமை தரும் என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் இந்த தர்பூசணியில் உள்ள ட-சிட்ரோலின் என்னும் பொருள் உடலுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிற அமினோ அமிலத்தை உடலில் உருவாக்குகிறது. இது ரத்தக் குழாய்களுக்கு உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

எவ்வளவு சாப்பிடலாம்?

எவ்வளவு சாப்பிடலாம்?

இதெல்லாம் புரிகிறது. வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு தர்பூசணி வரை சாப்பிடலாம் என்ற கணக்கு எப்படி கண்டுபிடிப்பது? இதி்ல தான் அனைவருமே குழம்பிவிடுகிறார்கள். அது ரொம்ப சிம்பிள். அதாவது தினமும் 1:10 என்ற விகிதத்தில் சாப்பிட வேண்டும். அதாவது நீங்கள் 50 கிலோ எடை கொண்டவராக இருந்தால், அதில் பத்தி ஒரு பங்கான ஐந்து கிலோ அளவுக்கு தினமும் ஒரு நாள் முழுவதும் தர்பூசணி சாப்பிடலாம்.

முதல் நாள் டயட்

முதல் நாள் டயட்

காலை உணவு

2 முழு தானிய இட்லி (அ) தோசை

1 பெரிய துண்டு தர்பூசணி

1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி

மதிய உணவு

100 கிராம் வேகவைத்த இறைச்சி

1 கப் தர்பூசணி

இரவு உணவு

60 கிராம் காட்டேஜ் சீஸ்

1 கப் வாட்டர்மெலன்

MOST READ: இத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...

இரண்டாம் நாள் டயட்

இரண்டாம் நாள் டயட்

காலை உணவு

ஒரு கப் வாட்டர் மெலன்

1 ஆப்பிள் அல்லது 2 துண்டு கோதுமை பிரட்

1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி

மதிய உணவு

100 கிராம் அளவுக்கு தோலுரித்து வேகவைத்த சிக்கன்

1 துண்டு வாட்டர் மெலன்

இரவு உணவு

100 கிராம் அளவுக்கு உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு மீன் கிரில் செய்தது. பொரித்ததை தவிர்ப்பது நல்லது.

1 துண்டு முழு தானிய பிரட்

2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

மூன்றாம் நாள் டயட்

மூன்றாம் நாள் டயட்

காலை உணவு

1 பெரிய துண்டு தர்பூசணி

1 ஆப்பிள் அல்லது 2 துண்டு கோதுமை பிரட்

1 கப் ஸ்கிம்டு மில்க்

மதிய உணவு

ஒரு கப் ஒயிட் பீன் சூப்

3 துண்டு தர்பூசணி

இரவு உணவு

வெஜிடபிள் சாலட்

2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

நான்காம் நாள்

நான்காம் நாள்

காலை உணவு

2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி

1 முட்டை

மதிய உணவு

ஒரு பௌல் கிரீம் பிரக்கோலி சூப் அல்லது சிக்கன் சூப்

1 துண்டு முழுதானிய பிரட்

2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

இரவு உணவு

3 மீடியம் சைஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு

2 துண்டு வாட்டர்மெலன்

MOST READ: சர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஐந்தாம் நாள் டயட்

ஐந்தாம் நாள் டயட்

காலை உணவு

3 துண்டு வாட்டர்மலன்

1 கப் கிரீன் டீ அல்லது கிரீன் காபி

1 வாழைப்பழம்

மதிய உணவு

150 கிராம் வேகவைத்த இறைச்சி

எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாட்டர்மெலன்

இரவு உணவு

1 துண்டு பிரட்

60 கிராம் காட்டேஜ் சீஸ்

3 பெரிய துண்டு வாட்டர்மெலன்

அவ்வளவு தாங்க டயட். ஐந்து நாள் இந்த டயட்டை தவறாமல் ட்ரை பண்ணி பாருங்க. எப்படி இளைச்சிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5-days watermelon diet plan to lose weight

here we are suggesting five days watermelon diet plan to lose weight includes other food.
Story first published: Wednesday, October 31, 2018, 16:49 [IST]
Desktop Bottom Promotion