For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு பனங்கிழங்கு ரொம்ப பிடிக்குமா?... இத படிங்க... இன்னும் அதிகமா பிடிக்க ஆரம்பிச்சிடும்...

பனை மரத்தின் இருதயப் பகுதியில் நிறைய விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் உள்ளன. கலோரி குறைந்த உணவு மற்றும் சோடியம், கொலஸ்ட்ரால் போன்றவைகளும் உள்ளன. இதை சாலட்டாக செய்தும் சாப்பிடலாம். மேலும் இதை சுடச்சுட ச

By Suganthi Rajalingam
|

பனை மரத்தின் எல்லா பாகங்களும் எதாவது ஒரு விதத்தில் நமக்கு நன்மைகளை அள்ளித் தருகிறது. அதன் பழங்கள், இலைகள், எண்ணெய் என்று இதன் பயன்களை அடுக்கி கொண்டே போகலாம்.

health benefits of palm heart

அப்படிப்பட்ட ஒன்று தான் பனை மரத்தின் இருதயப் பகுதி. இது ஒரு வெஜிடபிள் ஆக பயன்படுகிறது. ரொம்ப குழம்பாதீங்க... பனங்கிழங்கை தான் இப்படி சுத்தி வளைச்சு சொல்றேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காணப்படும் இடங்கள்

காணப்படும் இடங்கள்

முதன் முதலில் இது பிரேசில் போன்ற நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது அதிகமாக கோஸ்ட்டா ரிக்கா நாடுகளில் காணப்படுகிறது. ஆசியா நாடுகளிலும் இது பெருமளவு காணப்படுகிறது.

தோற்றம்

தோற்றம்

பனை மரத்தின் இருதயப் பகுதி என்பது உள் பகுதியாகும். இதற்கு முதலில் தண்டின் வெளிப்பகுதியில் உள்ள நார்களை உரித்து விட்டு மென்மையான உட்பகுதி வரை உரிக்க வேண்டும். அந்த மென்மையான உட்பகுதி தான் அதன் இருதயப் பகுதி. இதன் சுவை கூனைப் பூக்கள் சுவை மாதிரி இருக்கும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

இதில் நிறைய விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் உள்ளன. கலோரி குறைந்த உணவு மற்றும் சோடியம், கொலஸ்ட்ரால் போன்றவைகளும் உள்ளன. இதை சாலட்டாக செய்தும் சாப்பிடலாம். மேலும் இதை சுடச்சுட சமைத்து சாதத்துடன் சைடிஸாக சாப்பிட்டும் மகிழலாம். ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக் கூடியது.

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

100 கிராம் பனை இருதயப் பகுதியில் :

115 கலோரிகள்

25.6 கிராம் கார்போஹைட்ரேட்

1.5 கிராம் நார்ச்சத்து

17.2 கிராம் சர்க்கரை

2.7 கிராம் புரோட்டீன்

0.2 கிராம் கொழுப்பு

13 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

76 மில்லி கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்

68 IU விட்டமின் ஏ

8 மில்லி கிராம் விட்டமின் சி

0.5 மில்லி கிராம் விட்டமின் ஈ

0.1 மில்லி கிராம் தயமின்

0.2 மில்லி கிராம் ரிபோப்ளவின்

0.9 மில்லி கிராம் நியாசின்

0.8 மில்லி கிராம் விட்டமின் பி6

24 மைக்ரோ கிராம் போலேட்

18 மில்லி கிராம் கால்சியம்

1.7 மில்லி கிராம் இரும்புச் சத்து

10 மில்லி கிராம் மக்னீசியம்

140 மில்லி கிராம் பாஸ்பரஸ்

1806 மில்லி கிராம் பொட்டாசியம்

14 மில்லி கிராம் சோடியம்

3.7 மில்லி கிராம் ஜிங்க்

0.6 மில்லி கிராம் காப்பர்

0.7 மைக்ரோ கிராம் செலினியம்

69.5 கிராம் தண்ணீர்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

இதில் அதிகளவில் விட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய்களிடமிருந்து நம் உடலை காக்கிறது.

சீரண சக்தி

சீரண சக்தி

இதில் விட்டமின் சி மாதிரியே அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது. இவை மலச்சிக்கல் மற்றும் குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது. மேலும் சீரண சக்தியை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு முறை

ஆரோக்கியமான உணவு முறை

டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த உணவு. காரணம் இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் எளிதாக உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க இயலும். ஒரு கப் பதநீரில் 3.49 கிராம் புரோட்டீன், 0929 கிராம் கொழுப்பு, 37.39 கிராம் கார்போஹைட்ரேட், 2.2 கிராம் நார்ச்சத்து மற்றும் 25.05 கிராம் இயற்கை சர்க்கரை அடங்கியுள்ளன. இவைகள் உங்கள் ஆரோக்கியமான உணவு முறைக்கு மிகவும் முக்கியம்.

ஜிங்க்

ஜிங்க்

இதில் ஜிங்க் சத்து இருப்பதால் காயங்களை விரைவில் குணப்படுத்துகிறது. நாம் நம்முடைய உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதங்கள் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுகிற அளவுக்கு நம் உடலுக்குத் தேவையான ஜிங்க், மக்னீசியம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து

இதில் அதிகளவில் இரும்புச் சத்து இருப்பதால் சோர்வு, அனிமியா, வலிமையின்மை போன்றவற்றை தடுத்து ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

விட்டமின் பி2

விட்டமின் பி2

இந்த விட்டமின் நமது உடற் செல்களின் வளர்ச்சிக்கும், திசுக்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

இது நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை அதிகமாக்குகிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.

கண்கள்

கண்கள்

இதில் அடங்கியுள்ள விட்டமின் ஏ சத்தால் நல்ல பார்வை திறன், வறட்சியான கண்களை குணமாக்குதல் போன்றவற்றை செய்கிறது. உங்கள் கண்பார்வை மேம்பட இது மிகவும் முக்கியம்.

கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்கள்

இதில் கருவுற்ற பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம் அல்லது விட்டமின் பி9 உள்ளது. இது குழந்தையின் வளர்ச்சிக்கும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

எடை குறைதல்

எடை குறைதல்

இது உங்களுக்கு வயிறு நிறைந்த திருப்தியை தருவதால் மேற்கொண்டு நொறுக்கு தீனிகளை நாட மாட்டீர்கள். இதிலுள்ள நார்ச்சத்துகள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து சரியான அளவில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பனங்கிழங்கு சாலட்

பனங்கிழங்கு சாலட்

எல்லா விதமான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தல்

கால்சியம் கிடைக்கிறது

உடல் எடை குறைதல்

குறைந்த கொழுப்பு மற்றும் சோடியம்

பனை இருதயப் பகுதி ரெசிபி

இதை சாலட்டாக செலரியுடன் சேர்த்து பயன்படுத்தி பலன் பெறலாம். இப்பொழுது நாம் பனை இருதய பகுதி லெமன் சாலட் பற்றி காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்

1/4 கப் நறுக்கிய வெங்காயம்

2 கப் நறுக்கிய பனை இருதயப் பகுதி

1 கப் நறுக்கிய செலரி

3 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் ஆலிவ் ஆயில்

நறுக்கிய பார்சிலி, உப்பு மற்றும் மிளகுத்தூள்

பயன்படுத்தும் முறை

1/4 கப் வெங்காயத்தை குளிர்ந்த நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்

பிறகு அதை எடுத்து கொள்ளுங்கள்

இப்பொழுது வெங்காயத்தையும் 2 கப் பனை இருதயப் பகுதி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்

மற்ற பொருட்களையும் இதனுடன் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக ஆலிவ் ஆயில் மற்றும் ஆர்குலா சேர்த்து கிளறி இறக்கிட வேண்டியது தான்.

சுவையான பாம் ஹார்ட் சாலட் ரெடி

ஊட்டச்சத்து அளவுகள்

130 கலோரிகள்

11 கிராம் கொழுப்பு

1.5 கிராம் சேச்சுரோட் கொழுப்பு

3 கிராம் புரோட்டீன்

7 கிராம் கார்போஹைட்ரேட்

2 கிராம் சர்க்கரை

0 கிராம் கொலஸ்ட்ரால்

462 மில்லி கிராம் சோடியம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: aspirin acne pain வலி
English summary

15 Proven Health Benefits of Coconut Palm Heart

Palm heart is very useful for body health because it is a good source of vitamins and minerals, low in calorie and sodium, cholesterol. Healthy ways to consume palm heart is by adding or making it as salad. It gives improve immune system, healthy digestion, healthy weight, increase hemoglobin level.
Desktop Bottom Promotion