தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky

ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.

புரதம், வைட்டமின் டி , கால்சியம், பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். இரும்பு, ஜின்க், ஐயோடின் , மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்குவது மீன். உடலை ஒல்லியாக வைக்க இந்த சத்து பெரிதும் உதவுகிறது.

மூளை வளர்ச்சி, கல்லீரல் வளர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகள் , போன்றவற்றிற்கு இந்த ஒமேகா கொழுப்பு அமிலத்தின் தேவை இருக்கிறது. மேலும் ஆந்த தூக்கத்தை பெற இந்த சத்து மிக முக்கியம்.

10 Health Benefits Of Eating Fish Daily

மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் கட்டுப்படுகின்றன. மீனை தினமும் உங்கள் உணவு பட்டியலில் சேர்ப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நலன்களை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய் அபாயம் குறைகிறது:

இதய நோய் அபாயம் குறைகிறது:

தினமும் மீன் சாப்பிடுவதால், இரத்தக் குழாய் மற்றும் இதயம் சார்ந்த நோய் அபாயங்கள் குறைகின்றன. இதய ஆரோக்கியத்திற்கு உகந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளது. இந்த சத்து , அழற்சியை குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது . இதனால் நாட்பட்ட நோய்கள் கட்டுபடுகின்றன.

அல்சைமர் நோய் குறைகிறது :

அல்சைமர் நோய் குறைகிறது :

மூளை சீராக செயலாற்ற, மீன் உணவுகள் பெருமளவில் உதவுகின்றன. இதனால், அல்சைமர் நோய்க்கு, மீன் சாபிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் மூளை சீரழிவு குறைகிறது. மூளை செயல்பாடுகளில் ஏற்படும் பல்வேறு சிக்கலும் தடுக்கப்படுகிறது.

மனச்சோர்வு குறைகிறது :

மனச்சோர்வு குறைகிறது :

மனச்சோர்விற்கான அறிகுறியை உணர்பவர்கள், மீனை சாப்பிடலாம். மீன் அல்லது மீன் எண்ணெய், மனச்சோர்வின் அறிகுறியை குறைத்து சீரான மன நிலையை தருகிறது. இதனால் மன ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

வைட்டமின் டி யின் ஆதாரம் :

வைட்டமின் டி யின் ஆதாரம் :

மீனில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் டி சத்து, டையட் உணவிற்கான ஆதாரமாக விளங்குகிறது. உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், மீனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கண் பார்வை அதிகரிக்கிறது :

கண் பார்வை அதிகரிக்கிறது :

மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கண் பார்வையை அதிகரித்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளை மற்றும் கண் ஆகிய இரண்டின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளுக்கு இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகவும் தேவைப்படுகிறது.

ஆழ்ந்த தூக்கம் :

ஆழ்ந்த தூக்கம் :

நீண்ட நேரம் தூக்கம் வராமல், தவித்து கொண்டிருப்பவர்கள், மீனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மீனை அதிகம் உட்கொள்பவர்கள், நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம், மீனில் உள்ள அதிகமான வைட்டமின் டி சத்து .

ஆர்த்ரிடிஸ் குறைகிறது:

ஆர்த்ரிடிஸ் குறைகிறது:

முடக்கு வாதத்தால் பாதிக்க பட்டவர்கள் தினமும் மீனை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முடக்கு வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நாட்பட்ட வீக்கத்தின் காரணமாக ஏற்படுவது. மீனை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால், வீக்கம் மற்றும் வலி குறைகிறது.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது :

கொலஸ்ட்ராலை குறைக்கிறது :

உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை மீனுக்கு உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு மட்டும் இல்லாமல், உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதையும் தடுக்கிறது.

 நீரிழிவு:

நீரிழிவு:

கொழுப்பு மீன்களை உட்கொள்வதால், டைப் 1 நீரிழிவு நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மீனில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்

பெண்களுக்கு ஏற்படும், மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளை நிர்வகிக்க மீன் உணவுகள் உதவுகின்றன. ஆம், மாதவிடாய்க்கு முந்தய அறிகுறிகளான, குமட்டல், வாந்தி, தலைவலி, மன உளைச்சல் உடல் வலி, போன்றவற்றால் அவதி படும் பெண்கள் மீனை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், அவர்களின் இந்த அறிகுறிகள் குறைவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

இதற்கு காரணம், மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இந்த அமிலம், இத்தகையை அறிகுறிகள் ஏற்படாமல் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Health Benefits Of Eating Fish Daily

10 Health Benefits Of Eating Fish Daily
Story first published: Friday, January 5, 2018, 14:48 [IST]