காலை உணவை தவிர்த்தால் இந்த நோயெல்லாம் உங்களுக்கு வரக்கூடும்!! ஜாக்கிரதை!!

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

காலையில் அரசனை போல் சாப்பிடு. மதியம் மதிரியை போல் சாப்பிடு. இரவில் பிச்சைக்காரனை போல் சாப்பிடு என்ற சொல்வழக்கு நமது ஊரில் உண்டு. மிகச் சரியான வார்த்தை. காலையில் தாரளமாகவும் இரவில் சுருக்கியும் எவர் ஒருவர் சாப்பிடுகிறாரோ அவர் நீண்ட ஆயுளை பெறுவர்கள்.

what happens when you skip the breakfast

ஆனால் நாம் அரக்கப்பரக்க வேலை, பள்ளிக்கு போகும் முன் கொரித்துவிட்டு போகிறோம். இதனால் பலப்பலப்பிரச்சனைகள் உண்டாகின்றன.காலை உணவி தவிர்ப்பதால் உண்டாகு ஒய்ன் விளியவுகளையும், எபப்டி சாப்பிட வேண்டும் என்ரும் இங்கே கூறியிருக்கிறோம். படித்து பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஏன் காலை உணவை தவிர்க்கக் கூடாது?

ஏன் காலை உணவை தவிர்க்கக் கூடாது?

ஒரு நாளை நாம் துவங்குவற்கு முன் முழு ஆற்றலோடு துவங்க வேண்டும். அதற்கு காலை உணவு மிக முக்கியமான ஒன்று. காலை உணவை நாம் தவிப்பது ஒரு பெரியத் தவறாகும்.

ஏனென்றால், இரவு நாம் தூங்கும் போது நாம் சாப்பிட்ட உணவிற்கும் காலை சாப்பிடும் உணவிற்கும் உள்ள இடைவேளை 12 மணி நேரம் ஆகும். சராசரியாக நாம் உண்ணும் உணவு செரிக்க குறைந்தது 4 மணி நேரம் தான் ஆகும்.

ஆனால், இரவு உணவிற்கு பிறகு 12 மணி நேரம் இடைவேளை இருப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைவாக இருக்கும்.

பின்விளைவுகள் :

பின்விளைவுகள் :

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன் உண்டாகும். அல்சர், அசிடிட்டி,. குடல் அழற்சி ஆகியவை முக்கியமாக உருவாவதற்கு காலை உணவை தவிர்த்தலே முக்கிய காரணம்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

எனவே, காலை உணவில் ஒவ்வொருவரும் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பொதுவாக அனைவரும் காலை வேளையில் சாப்பிடாமலோ அல்லது மிகக் குறைவான உணவினையோ தான் எடுத்துக் கொள்கின்றனர்.

இது உடலுக்கு நல்லதல்ல. காலையில் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் சர்க்கரையின் அளவானது குறையக்கூடும், உடல் எடை அதிகரிக்கக் கூடும் அல்லது மன அழுத்தத்தை ஏற்படத்தக்கூடும்.

 காலையில் சேர்க்கவெண்டியவை :

காலையில் சேர்க்கவெண்டியவை :

சராசரியாக ஒரு மனிதன் காலை வேளையில் 60% தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, ஓட்ஸ், அவல், ரவா உப்புமா, கொதுமையினால் செய்த உணவுகள், உருளைக் கிழங்கு, முட்டைக் கோஸ் அல்லது வெந்தயம். இது போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

காலை உணவு எப்படி இருக்கவேண்டும்?

காலை உணவு எப்படி இருக்கவேண்டும்?

இந்த உணவுகளுடன் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்க வேண்டும். இது கால்சியத்திற்கு மிக முக்கியம். சிலர் பழங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வர்.

அதுவும் நல்லது தான். ஆனால், பழங்கள் மற்றும் பாலை மட்டும் காலை உணவாக சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. காலை உணவில் அனைத்து சத்துக்களையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what happens when you skip the breakfast

These things will happen when you skip your breakfast
Story first published: Tuesday, May 16, 2017, 11:37 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter