இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை அழித்து மோசமாக்கும் எனத் தெரியுமா?

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

உலகில் இருக்கும் அனைத்து உணவுகளும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால், இப்போது மக்கள் உண்ணும் பெரும்பாலான உணவு துரித உணவு வகையாகவே இருக்கின்றன. இவை உடலுக்கு நல்லதல்ல. ஆரோக்கியமற்ற உணவினை உண்பது என்பது சரியாக தூங்காமல் பரீட்ச்சைக்கு சென்று அமர்ந்தால் எப்படி இருக்குமோ அதுப்போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், கெமிக்கல்கள் உள்ள உணவுகள் போன்றவை உடலுக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் அவற்றை விரும்பி அனைவரும் சாப்பிடுகிறார்கள். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த வகையான உணவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும்.

Unhealthy Foods On The Planet That You Must Avoid

அப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற மற்றும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் எல்லாம் எவை என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இங்கே ஆரோக்கியமற்ற உணவுகளின் பட்டியலானது கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் டீ

ஐஸ் டீ

ஐஸ் டீயில் தீங்கு விளைவிக்கும் பொருளான ப்ரோபிலின் க்ளைகோல் அல்கினேட் உள்ளது. இது இதயம் மற்றும் நரம்பியல் நோய்களை உண்டாக்கும். எனவே எக்காரணம் கொண்டும் ஐஸ் டீயைக் குடிக்காதீர்கள்.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

மைக்ரோவேவ் பாப்கார்ன்

மைக்ரோவேவ் பாப்கார்னில் டை அசிடைல் என்னும் கெமிக்கல் உள்ளது. இது முக்கிய உறுப்புக்களைப் பாதுகாக்கும் செல் படலத்தை உடைத்து தீங்கு உண்டாக்கும். ஆய்வு ஒன்றிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மைக்ரோவேவ் பாப்கார்னை சாப்பிட்டால், அது நுரையீரலில் பெரும் பாதிப்பை உண்டாக்கி சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

சிக்கன் நக்கட்ஸ்

சிக்கன் நக்கட்ஸ்

சிக்கன் நக்கட்ஸில் டைகிளிசரைடு, காராஜீனன் போன்ற கெமிக்கல்கள் உள்ளன. இந்த கெமிக்கல்கள் உணவுகளைப் பதப்படுத்த உதவுவதால், இந்த கெமிக்கல் நிறைந்த சிக்கன் நக்கட்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாழாக்கிவிடும்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் ஒரு கப் பழச்சாறுகளில் 36 கிராம் சர்க்கரை உள்ளது. இந்த செயற்கை சர்க்கரை உள்ளுறுப்பு கொழுப்புத் திசு வளர்ச்சியுடன் தொடர்புடையதால், இதை அதிகம் குடித்தால் தொப்பை வருவதோடு, பல உடல் உபாதைகளாலும் அதிகம் அவஸ்தைப்படக்கூடும்.

வெள்ளை சர்க்கரை

வெள்ளை சர்க்கரை

உலகிலேயே மிகவும் மோசமான ஓர் உணவுப் பொருள் என்றால் அது சர்க்கரை தான். இந்த சர்க்கரையைத் தான் அன்றாடம் நாம் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தி வருகிறோம். இப்படியே சர்க்கரையை தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால், அதனால் பல கடுமையான நோய்களால் அவஸ்தைப்பட நேரிடும்.

சீரியல் உணவுகள் :

சீரியல் உணவுகள் :

சர்க்கரை கலந்த செலரி உடலில் கொந்தளிப்பை உருவாக்கும். இதற்கு அதில் உள்ள சர்க்கரை தான் காரணம்.

அதோடு இதில் புடைலேட்டட் ஹைட்ராக்ஸிடோலுன், புடைலேட்டட் ஹைட்ராக்ஸியனிசோல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன.

டயட் சோடா

டயட் சோடா

டயட் சோடாக்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்களான காராமெல் கலரிங், புரோமினேட்டட் வெஜிடேபிள் ஆயில், பிஸ்பீனால் ஏ மற்றும் அஸ்பார்டேம் போன்றவை நிறைந்துள்ளன.

இவை அனைத்துமே புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. அதிலும் அதில் உள்ள அஸ்பார்டேம் க்ளுக்கோஸ் அளவை அதிகரித்து, கல்லீரலில் அழுத்தத்தை அதிகம் கொடுத்து, உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரிக்கும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

காபி க்ரீமர்

காபி க்ரீமர்

இதில் உள்ள டைடானியம் டை ஆக்ஸைடு, ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் சர்க்கரை, நினைவாற்றலைக் குறைத்து, 45 வயதிற்குள்ளேயே விரைவில் ஞாபக மறதி பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இந்த வகையான இறைச்சிகளில் உள்ள நைட்ரேட்டுகள், சர்க்கரையை செரிக்க முடியாமல் செய்து, சர்க்கரை நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். மேலும் இதில்உள்ள சோடியம் உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்குவதோடு, வயிற்று உப்புசத்தால் அவஸ்தைப்படச் செய்வதோடு, இதய நோய்க்கும் வழிவகுக்கும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

எண்ணெயில் வறுத்த உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும். மேலும் இம்மாதிரியான உணவுகள் மன இறுக்கத்துடன் தொடர்புடையதோடு, இதயத்திற்கு செல்லும் தமனிகளை அடைத்து, இதய நோய்க்கும் வழிவகுக்கும்.

உறைய வைக்கப்பட்டஉணவுகள்

உறைய வைக்கப்பட்டஉணவுகள்

இந்த உணவுகளில் உள்ள பதப்படுத்தப்படும் கெமிக்கல் மற்றும் சோடியம், உடல் ஆரோக்கியத்தை அழித்து மோசமாக்கும். எனவே எக்காரணம் கொண்டும் உறைய வைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

சைனீஸ் உணவுகள்

சைனீஸ் உணவுகள்

சைனீஸ் உணவுகளில் உள்ள மோனோசோடியம் க்ளூட்டமேட், உணவின் சுவையை மேம்படுத்த உதவினாலும், இதனை உட்கொண்டால் உடல் பருமன் தான் அதிகமாகும்.

டின்களில் விற்கப்படும் சூப்

டின்களில் விற்கப்படும் சூப்

இந்த சூப்புகளில் சுவையூட்டும் மோனோசோடியம் க்ளூட்டமேட் உள்ளது. இது பசியை அதிகரிப்பதோடு, ஒற்றைத் தலைவலியையும் அதிகரிக்கும். ஆகவே இம்மாதிரியான உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

 ஐஸ்க்ரீம் வகைகள்

ஐஸ்க்ரீம் வகைகள்

ஐஸ்க்ரீம்களில் 700 மிகி சோடியம், 1380 கலோரிகள், 92 கொழுப்புக்கள், 125 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 86 கிராம் சர்க்கரை உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unhealthy Foods On The Planet That You Must Avoid

Unhealthy Foods On The Planet That You Must Avoid
Story first published: Friday, June 2, 2017, 23:00 [IST]