உடல் சோர்வா? மன அழுத்தம் குறையனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

Written By:
Subscribe to Boldsky

மன அழுத்தம் இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாராலும் தாக்கப்படுகிறார்கள். அதுபோல் உடல் சோர்விற்கும் வயது வித்தியாசமில்லை. நன்றாக மன அழுத்தத்திற்கும் உண்ணும் உணவிற்கும் சம்பந்தம் இருக்கிறது என தெரியுமா? தாங்க முடியாத வேலைப்பளுவினாலும்.

பல்வேறு உடல் உபாதைகளாலும் நீங்கள் பாதிப்பட்டிருந்த  நீங்கள் உண்ணும் உணவினால் உங்கள் ஹார்மோனின் அளவை மாற்ற இயலும். அப்படியாக எந்த உணவுகள் செயல்புரிகிறது என பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தர்பூசணி :

தர்பூசணி :

பூசணி வகை உணவுகளான தர்பூசணி, முழாம்பழம், பூசணிக்காய் போன்ற நீர்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடும்போதுன் உடனடியாக மன அழுத்தம் குறையும்.

பால் :

பால் :

மன அழுத்தம் உண்டாவதால் நரம்புகள் பாதிப்படைந்து இன்னும் இறுக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் மன அழுத்தம் தீவிரப்படும். அந்த சமயத்தில் வெதுவெதுப்பான பால் குடிப்பதால் நரம்பு மண்டலம் தளர்வ்டையும். மேலும் மன அழுத்தம் குறையும்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

உங்கள் உடல் சோர்வாக இருக்கும்போது ஓட்ஸ் சாப்பிடுவதால் அயர்ச்சியிலிருந்து விலக முடியும். ஓட்ஸில் நல்ல தரமான கார்போஹைட்ரேட் இருகிறது. க்ளைகோஜனாக அது சேமிக்கப்படுவதால் தசைகளுக்கு சக்தியை அளிக்கிறது. இதனால் உடல் சோர்வு மறையும்.

பீன்ஸ் :

பீன்ஸ் :

பீன்ஸில் அதிக மெக்னீசியம் இருக்கிறது. அது மூளையில் உள்ள அயனிகளை சமன்படுத்துவதால் மூளை அமைதி பெறும். மன அழுத்தம், சோர்வு குறையும். ஆகவே மெக்னீசியம் அதிகமுள்ள உணவுகளை தேடி சாப்பிடுங்கள்.

சர்க்கரை வள்ளி கிழங்கு :

சர்க்கரை வள்ளி கிழங்கு :

சர்க்கரை வள்ளிக் கிழங்கு அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும். நரம்பு மண்டலத்தை சீராக்கும். அமைதியை தரும். உடலில் நீர்ச்சத்தை இழக்காமல் காக்கும். இதனால் உடல் சோர்வு தடுக்க முடியும்.

நட்ஸ் :

நட்ஸ் :

நட்ஸ் மிகச் சிறந்த ஊக்கியாக விளங்குகிறது. மனம் உடல் சோர்வுகளை போக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். வறுத்த கடலை, பிஸ்தா போன்றவை இழந்த அயனிகளை மீட்கச் செய்யும். நரம்பு மண்டலம் வலிமை பெறும். உடல் பலம் பெறும்.

மஷ்ரூம் :

மஷ்ரூம் :

மஷ்ரூமில் அதிக பி6, நியாசின், போன்றவை அதிகம் உள்ளன. உடலுக்கு சக்தி தர விட்டமின் பி தேவை. இந்த விட்டமினை அதிகம் கொண்ட மஶ்ரூம் சாப்பிடுவதால் உடல் சோர்வை உடனடியாக போக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Foods that fight against fatigue

Top Foods that fight against fatigue
Story first published: Thursday, April 6, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter