For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் உணவுல இந்த ஒரு பொருள சேர்க்காததால தான் புற்றுநோய் வருதுன்னு உங்களுக்கு தெரியுமா?

அயோடின் குறைப்பாட்டால் உடலில் ஏற்படும் தைராயிடு மற்றும் புற்றுநோய் பாதிப்பு!

|

பெண்களுக்கு ஏற்படும் இனபெருக்க, புணர்ச்சி உணர்ச்சி, மார்பக புற்றுநோய் சார்ந்த குறைபாடுகள் / நோய்கள் போன்றவை அதிகரிப்பதன் ஆராய்ச்சிகளின் முடிவில் ஏதோ ஒரு சதி தான் முக்கிய காரணியாக இருக்கிறது. அது உணவு சார்ந்தோ, நமது வாழ்வியல் மாற்றங்கள் சார்ந்தோ தான் இருக்கிறது.

This Is What You Are Missing In Your Diet To Protect Yourself Against Breast Cancer

Image Courtesy

அமெரிக்காவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. ஐரோப்பாவிலும் இதே நிலை தான். ஏன், இந்தியாவிலும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதற்கு வாழ்நாள் முழுக்க சிகிச்சை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை.

அண்மையில் ஒரு ஆய்வில் நமது உணவில் ஒரு பொருள் சார்ந்து ஏற்படும் குறைபாடு தான் தைராயிடு, மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாக திகழ்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அயோடின்!

அயோடின்!

மிகவும் அத்தியாவசியமான மினரல் சத்து அயோடின். இது நமது உணவில் குறைவாக இருப்பதால், அல்லது நல்ல தரமாக இல்லாததால் தான் ஏற்படும் தாக்கம் தான் தைராயிடு மற்றும் மார்பக புற்றுநோய்!

1924!

1924!

அயோடின் மிகவும் முக்கியமான மினரல் என்பதால். அதை கடந்த 1924-ல் முதல் உப்பில் சேர்க்க துவங்கினர். அதன் ஆரம்பம் தான் அயோடின் உப்பின் தயாரிப்பு.

காய்டர் (Goiter)

காய்டர் (Goiter)

காய்டர் என்பது முன் கழுத்து கழலை, அதாவது குரல் வளை சுரப்பியில் ஏற்படும் வீக்கம். இதை தான் ஆங்கிலத்தில் காய்டர் என்று கூறுவோம். அயோடின் மிகக் குறைவாக இருந்தால் காய்டர் உண்டாகிறது.

மார்பக புற்றுநோய்!

மார்பக புற்றுநோய்!

அயோடின் காரணமாக தைராயிடு மட்டுமின்றி, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகவும் காரணியாக இருக்கிறது இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மார்பகத்தில் தங்குகிறது!

மார்பகத்தில் தங்குகிறது!

பெண்களின் மார்பகத்தில் அயோடின் சேமிப்பாகும். குழந்தைகளின் வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பெண்களின் மார்பக ஆரோக்கியத்தில் அயோடின் பெரும் பங்குவகிக்கிறது.

அயோடின் குறைபாடு!

அயோடின் குறைபாடு!

உடலில் அயோடின் குறைபாடு உண்டாகும் போது, உடல் அதிகளவில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் அதிகரிக்கும் போது இனப்பெருக்க பகுதியில் புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோய் ஏற்படும் வைப்பு அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம்!

இரத்த அழுத்தம்!

உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது உப்பு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்பார்கள். ஆனால், உப்பின் அளவு முற்றிலுமாக குறைத்து விட கூடாது. மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்வதே சிறப்பு.

பதப்படுத்தப்பட்ட உணவு!

பதப்படுத்தப்பட்ட உணவு!

பதப்படுத்தப்பட்ட (processed) உணவுகளில் அயோடினின் அளவு மிகவும் குறைவாக தான் இருக்கும். அயோடின் உப்பு, கடல் உணவில், பால் உணவுகளில் அயோடின் சத்துக்கள் தரமான முறையில் கிடைக்கின்றன.

எனவே, அயோடின் சத்தை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள துளியளவும் மறக்க வேண்டாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Is What You Are Missing In Your Diet To Protect Yourself Against Breast Cancer

This Is What You Are Missing In Your Diet To Protect Yourself Against Breast Cancer
Story first published: Monday, February 6, 2017, 12:17 [IST]
Desktop Bottom Promotion