தைராய்டு சுரப்பியை சீராக இயங்கச் செய்ய இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும்!

Posted By:
Subscribe to Boldsky

கொய்யாப்பழம் நம் ஊர்களில் சர்வ சாதரணமாக கிடைக்கும் பழங்களில் அதுவும் ஒன்று, விலை மலிவாக கிடைப்பதாலோ என்னவோ அதனை யாரும் அவ்வளவாக எடுத்துக் கொள்வது கிடையாது.

இது எத்தனை நன்மைகளை நமக்கு கொடுக்கிறது தெரியுமா? கொய்யாப்பழம் மற்றும் அதன் இலைகளை பயன்படுத்தி உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

குளிர்காலங்களில் தான் சுவையான கொய்யாப் பழம் கிடைக்கும் பருவமாக உள்ளது. தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.

Surprising Health benefits of Guava fruit and leaves

விலை மலிவாக கிடைக்கிறது, நம் ஊரில் எளிதாக கிடைத்திடும் என்பதற்காகவே அவற்றை நாம் ஒதுக்கிவிடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றுப்போக்கு :

வயிற்றுப்போக்கு :

கொய்யா இலைகளிலும் ஏரளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. இவை வயிற்றுப்போக்கினை சரி செய்திடும். Staphylococcus aureus என்கிற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பெருங்குடலில் தண்ணீர் உறியாது அப்போது தான் நமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.

கொய்யா இலைகளில் ஆண்ட்டி பாக்டீரியல் காம்பவுண்டான டேனின்ஸ் நிறைய இருக்கிறது. இவை அந்த பாக்டீரியாவை அழிக்க வல்லது. நான்கைந்து கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு சூடாக்கி பின்னர் அந்த நீரை குடிக்கலாம்.

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

இதனைப் பயன்படுத்தி உங்களின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்திட முடியும்,இன்றைக்கு உங்கள் உடலில் ஏற்படக்கூடிய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கொலஸ்ட்ரால் தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அவற்றை குறைக்க கொய்யா பெரிதும் பயன்படுகிறது.

இதில் ஃபைட்டோ கெமிக்கல் காம்பவுண்ட் இருக்கிறது. குறிப்பாக கேலிக் அமிலம், கேதெச்சின், எபிகேதெச்சின் ஆகியவை உங்கள் உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்திடும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

இதிலிருக்கும் கேதெச்சின் கொழுப்பை கரைக்க மட்டுமல்ல உங்கள் உடலில் இருக்கும் ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கவும் பயன்படுகிறது. இதனால் சர்க்கரை நோய் இருந்தால் அது கட்டுப்படும். இதைத் தவிர மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமலும் தடுக்கலாம்.

கொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றன.

குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது.

புற்றுநோய் :

புற்றுநோய் :

கொய்யா இலைகள் பல வகையான புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் க்யுர்செட்டின்,லைகோபென் மற்றும் விட்டமின் சி ஆகியவை அடங்கியிருக்கிறது. இது புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். அதோடு நம் செல்களுக்கு பாதுகாப்பு அளித்திடும்.

கல்லீரல் :

கல்லீரல் :

இது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. நம் உடலின் நச்சுக்களை பிரித்தெடுப்பதில் கல்லீரல் முக்கியப் பங்காற்றுகிறது. கல்லீரலை பாதுகாக்கும் என்சைம்களான அஸ்பர்டேட் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ், அலனைன் அமினோ ட்ரான்ஸ்ஃபெரேஸ்,ஆல்கலைன் போஸ்பேட்ஸ்,மற்றும் பிலிருபின் ஆகியவற்றை அழித்திடும்.

நோய்த் தடுப்பாற்றல் :

நோய்த் தடுப்பாற்றல் :

நமக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணம், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவை மட்டுமல்லாது நமது உடலில் நோயினை எதிர்த்துப் போராடும் திறனும் குறைவாக இருப்பதே ஆகும்.

இவ்வாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்த கொய்யாப் பழம் அடிக்கடி சாப்பிட வேண்டும். கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி' க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது .

ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி' அளவினைவிட நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி' யினை கொய்யாப் பழம் கொண்டுள்ளது.

வைட்டமின் ‘சி' நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

இதயம்:

இதயம்:

கொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினை மேம்படுத்துகிறது. இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் இதய நோய் ஏற்படுவதில் மிகப் பெரிய பங்கினை அளிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பினைக் குறைக்க கொய்யாப் பழம் பயன்படுகிறது. இந்த அற்புதமான கொய்யாப் பழம் உடலின் நல்ல கொழுப்பினை அதிகரிக்கச் செய்கின்றது.

பார்வைத் திறன் :

பார்வைத் திறன் :

கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ' இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும்.கொய்யாப் பழம் பொதுவாகக் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

எனினும் கொய்யாப் பழத்தில் கேரட்டைப் போன்று வைட்டமின் ‘ஏ' நிறைந்து காணப்படவில்லை என்றாலும் அவை ஊட்டச்சத்திற்கு நல்ல ஆதாராமாக விளங்குகின்றது.

கர்ப்ப காலம்:

கர்ப்ப காலம்:

கொய்யாப் பழத்தில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.

மேலும் புதிதாகப் பிறக்கும் குழந்தையை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கிறது.

பல் வலி :

பல் வலி :

கொய்யா இலைகளில் ஒரு சக்தி வாய்ந்த அழற்சியை எதிர்த்துப் போராடும் சக்தி மற்றும் பாக்டீரியாவிற்கு எதிராகப் போராடும் திறனும் உள்ளது. இவை தொற்று நோய்களுடன் போராடிக் கிருமிகளைக் கொல்கிறது.

இதனால் கொய்யா மர இலையைச் சாப்பிடுவது மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாக வேலை செய்கிறது. இதன்மூலம் கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

கொய்யாப் பழத்திதில் நிறைந்துள்ள மெக்னீசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வடையச் செய்ய உதவுகிறது.

எனவே கடினமான உடல் உழைப்பு அல்லது நீண்டநேரம் அலுவலகத்தில் வேலைசெய்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒரு கொய்யாப் பழம் உடல் தசைகளையும் ஓய்வெடுக்கச் செய்கிறது.

அதோடுகூட மட்டுமல்லாமல் மன அழுத்தத்தினையும் குறைத்து உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஆற்றலையும் ஊக்கத்தினையும் கொடுக்கிறது.

மூளைக்கு :

மூளைக்கு :

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 3' மற்றும் வைட்டமின் ‘பி 6' ஐக் கொண்டுள்ளது. இவை நயசின் மற்றும் பைரிடாக்சின் என்ற பெயர்களில் அழைக்கப்படும்.

மேலும் கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது.

இருமல் :

இருமல் :

மற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழத்தில் தான் வைட்டமின் ‘சி' மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. இவை இரண்டும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது.

கொய்யா இலைகளின் சாறு சளி மற்றும் இருமலிலிருந்து விடுபட மிகப்பெரிய அளவில் உதவுகிறது. மேலும் கொய்யாவானது சளியிலிருந்து முற்றிலும் விடுபடவும் சுவாச மண்டலம், தொண்டை மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்தவும் செய்கிறது.

கொய்யாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இவ்வாறு கொய்யாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழிவகுக்கும்.

வயதான தோற்றம் :

வயதான தோற்றம் :

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘ஏ', வைட்டமின் ‘சி' மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களான ஆண்டிஆக்ஸிடண்ட், கரோட்டின் மற்றும் லைக்கோபீனே போன்றவை அடங்கியுள்ளன. இவை வயதான பின் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து தோலைப் பாதுகாக்க உதவி செய்கிறது.

தைராய்டு :

தைராய்டு :

கொய்யா பழத்தில் காப்பர் நிறைய இருக்கிறது. இதனால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. உடலில் உள்ள ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இரத்த அழுத்தம் :

இரத்த அழுத்தம் :

இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப் பழம் குறைக்கிறது. இரத்தம் கடினமாவதைத் தடுத்து இரத்தத்தின் திரவத் தன்மையைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக வைக்க உதவுகின்றது. கொய்யாப் பழமும், வாழைப்பழமும் ஏறத்தாழ ஒரே அளவு பொட்டாசியத்தைத் தான் பெற்றுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Health benefits of Guava fruit and leaves

Surprising Health benefits of Guava fruit and leaves
Story first published: Wednesday, November 29, 2017, 16:47 [IST]